WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, July 18

மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள்!!


நெல்சன் மண்டேலா தனது 94-வது பிறந்த நாளை குயன்னூ என்ற தனது கிராமத்தில் உள்ள வீட்டில் இன்று கொண்டாடினார். அப்போது இவரது 4 குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையினர் கலந்து கொண்டனர்.


மேலும் இந்த விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டன் கலந்து கொண்டார். எந்த முன் அறிவிப்பும இன்றி அவர் திடீரென கலந்து கொண்டது அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


விழாவில் பங்கேற்ற அவர் நெல்சன் மண்டேலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அங்கு நூல் நிலையத்தை கிளிண்டன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது, நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் அதிபராக இருந்த போது நான் அமெரிக்காவில் ஜனாதிபதியாக பணிபுரிந்ததை பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்றார்.


இந்த விழாவில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நெல்சன் மண்டேலா பங்கேற்று பொது மக்கள் முன் தோன்றினார். 

No comments:

Post a Comment