கவுகாத்தியில் கடந்த திங்களன்று இரவு பொது இடத்தில் ஒரு இளம்வயதுப் பெண்ணை 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரைமணி நேரமாக மானபங்கப்படுத்தியது நாடெங்கும் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேர் தனியார் தொலைக்காட்சியின் காமிராமேனால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் 4 பேரை மட்டும்தான் கடந்த ஐந்து நாட்களில் கைது செய்யப்பட்டனர்.
மற்ற 3 பேரை அசாம் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அசாம் முதல்வர் தாரூன் கோகாய், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறப்பு அதிரடிப் படையை நியமித்து இன்னும் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment