டெல்லியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 47 பயணிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், மின்சாரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
அதிகாலை சுமார் 4.20 மணிக்கு விபத்து ஏற்பட்டபோது, பெரும்பாலான பயணிகள் ஆழந்த உறக்கத்தில் இருந்ததாக நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரீதர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment