சுதந்திர போராட்ட தியாகி கேப்டன் லட்சுமி ஷெகால் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ.வில் பணியாற்றியவர் லட்சுமி ஷெகால். கடந்த வாரம் இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 97.கடந்த 2002ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து லட்சுமி ஷெகால் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment