ஈழத் தமிழர்கள், பிரபாகரன் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது டெசோ மாநாடு நடத்துவதால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:
இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தார். பிரபாகரன் கொல்லப்பட்டார். தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார். இந்த மாநாட்டின் மூலம் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை
No comments:
Post a Comment