WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, July 14

மேற்கு வங்கத்தில் அடுத்த அதிர்ச்சி!!


மேற்கு வங்க மாநிலம் பாரக்னாஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் கோபால் நகர்பாலிகா வித்யாலயா பள்ளியில் ஒரு மாணவியின் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தப்பட்ட சம்பவம்  அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பில் பணம் காணாமல் போனது குறித்து புகார் வந்தவுடன், ஒரு மாணவி மீது சந்தேகம் அடைந்த ஆசிரியை ரூபாலி, மற்ற மாணவர்கள் முன்பு அந்த மாணவியின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்தார்.இதனால் அந்த மாணவி அவமானம்  அடைந்தார். அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த மாணவி, இது குறித்து தமது  பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால், மாணவியை ஆசிரியை ஒருவர் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்குவதற்குள், இந்தச் சம்பவம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment