ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது சரி என மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார். இது குறித்து டேராடூனில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட புத்ததேவ் மேலும் கூறுகையில், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரை எங்கள் கட்சி ஆதரித்தது புதிதல்ல. இந்திரா பிரதமராக இருந்த போது ஜனாதிபதி தேரத்லில் விவி கிரிக்கு ஆதரவு கேட்டார். அவரை நாங்களும் ஆதரித்தோம் என கூறினார்.
No comments:
Post a Comment