WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, July 31

பென்சனர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு கடிதம்!


 அதிகாரத்துவம் பெற்ற அமைப்பில் இருந்து
எதிர்ப்பு கடிதம் வந்துள்ளது.


Management Committee தனது பரிந்துரையை BSNLக்கு அனுப்பும் 
முன்பே, DOTன்  Under Secretary  23-7-2012 அன்று BSNL நிர்வாகத்
-திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். 


            அதில், BSNL ஊழியர்க்கு பென்சன், Pension Rule  37Aன்படி
மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
ஆகவே,பென்சனர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவதற்கு
உடன்பாடு போட  BSNL  நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை.
   
        ஆகவே, உடன்பாட்டில் உள்ள அந்த அம்சத்தை வாபஸ்
வாங்குமாறு  அந்த உத்திரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


உத்திரவு எண் :No.40-09/2012/Pen (T) dated 23-07-12 

தனி மாநிலமாக்க தீர்மானம் !!

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்த்து கோரி புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக உறுப்பினர் அன்பழகன் கொண்டு வந்த தீர்மானம் புதுவை அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புதுவையை தனி மாநிலமாக்க தமிழக அரசிடம் உதவி கோரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் உதவிவையும் நாடப் போவதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிதியமைச்சர்!!


தற்போது மத்திய உள்துறை மந்திரியாக உள்ள ப.சிதம்பரம் மீண்டும் நிதித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிதியமைச்சராவது இது மூன்றாவது முறையாகும். 


மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆனதால் நிதித்துறை அமைச்சராக மீண்டும் ப.சிதம்பரம் பொறுப்பேற்கிறார்.

டெசோ மாநாட்டினால் பயன் இல்லை!!


ஈழத் தமிழர்கள், பிரபாகரன் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது டெசோ மாநாடு நடத்துவதால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
 சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:
 இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தார். பிரபாகரன் கொல்லப்பட்டார். தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார். இந்த மாநாட்டின் மூலம் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை

இந்தியாவுக்கு முதல் பதக்கம்!!

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.

கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்துவைக்க அமெரிக்க சர்ச் மறுப்பு!


அமெரிக்க சர்ச்சில், கறுப்பின ஜோடியினர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவர்கள் சார்லஸ், டி ஆன்ட்ரீயா. கறுப்பினத்தை சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக இந்த மாகாணத்தின் கிறிஸ்டல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள, சர்ச்சின் பாதிரியாரை தொடர்பு கொண்டனர். "இந்த சர்ச், 1883ல் கட்டப்பட்டது முதற்கொண்டு, கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்வித்தது கிடையாது. எனவே, உங்களுக்கும் திருமண சடங்கை இங்கே செய்ய முடியாது' என, பாதிரியார் ஸ்டேன் வெதர்போர்டு தெரிவித்துள்ளார்.

Monday, July 30

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 47 பேர் பலி!!


 டெல்லியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 47 பயணிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், மின்சாரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
அதிகாலை சுமார் 4.20 மணிக்கு விபத்து ஏற்பட்டபோது, பெரும்பாலான பயணிகள் ஆழந்த உறக்கத்தில் இருந்ததாக நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பிரான்சிலும் இந்தியர்களின் கறுப்புப் பணம் : ரூ.565 கோடி குவிப்பு!!

பிரான்ஸில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரூ.565 கோடி பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, July 29

Watch TV interview !!

 On Sunday the, 29th July 2012 at 10.00 PM Com.C.K.Mathivanan’s interview with Mr. Rabi bernard, MP will be telecast in Jaya TV Channel.

Wednesday, July 25

NFTE கோவை மாவட்டச் சங்கத்தின் இணையதளம்  புதிய முகவரியில் இயங்குகிறது. nftecoimbatore.blogspot.in

Tuesday, July 24

78.2% கிராக்கிப்படி இணைப்பு கானல் நீர் ஆகிவிடுமா???

கலை இலக்கிய முகாம்: 27-07-2012 வெள்ளிக்கிழமை கடலூர்!!

Monday, July 23

சுதந்திர போராட்ட தியாகி கேப்டன் லட்சுமி ஷெகால் மரணம்!!


சுதந்திர போராட்ட தியாகி கேப்டன் லட்சுமி ஷெகால் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ.வில் பணியாற்றியவர் லட்சுமி ஷெகால். கடந்த வாரம் இவரது உடல்நிலை மிகவும் மோச‌மடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 97.கடந்த 2002ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து லட்சுமி ஷெகால் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 18

மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள்!!


நெல்சன் மண்டேலா தனது 94-வது பிறந்த நாளை குயன்னூ என்ற தனது கிராமத்தில் உள்ள வீட்டில் இன்று கொண்டாடினார். அப்போது இவரது 4 குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையினர் கலந்து கொண்டனர்.


மேலும் இந்த விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டன் கலந்து கொண்டார். எந்த முன் அறிவிப்பும இன்றி அவர் திடீரென கலந்து கொண்டது அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


விழாவில் பங்கேற்ற அவர் நெல்சன் மண்டேலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அங்கு நூல் நிலையத்தை கிளிண்டன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது, நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் அதிபராக இருந்த போது நான் அமெரிக்காவில் ஜனாதிபதியாக பணிபுரிந்ததை பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்றார்.


இந்த விழாவில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நெல்சன் மண்டேலா பங்கேற்று பொது மக்கள் முன் தோன்றினார். 

Saturday, July 14

One month over!


  One full month is completed after agreement was signed for the merger of 78.2% IDA. But nothing was done so far to issue order and implement the same. Many conditions were included in the agreement very cleverly by the management and due to these conditions the time of implementations of the said agreement  is  in suspense.


  To demand immediate merger of 78.2% IDA without any pre conditions. 

மேற்கு வங்கத்தில் அடுத்த அதிர்ச்சி!!


மேற்கு வங்க மாநிலம் பாரக்னாஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் கோபால் நகர்பாலிகா வித்யாலயா பள்ளியில் ஒரு மாணவியின் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தப்பட்ட சம்பவம்  அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பில் பணம் காணாமல் போனது குறித்து புகார் வந்தவுடன், ஒரு மாணவி மீது சந்தேகம் அடைந்த ஆசிரியை ரூபாலி, மற்ற மாணவர்கள் முன்பு அந்த மாணவியின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்தார்.இதனால் அந்த மாணவி அவமானம்  அடைந்தார். அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த மாணவி, இது குறித்து தமது  பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால், மாணவியை ஆசிரியை ஒருவர் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்குவதற்குள், இந்தச் சம்பவம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்வயதுப் பெண் மானபங்கப்படுத்திய குற்றவாளிகளைப் பிடிக்க 48 மணி நேரம் கெடு!!!


கவுகாத்தியில் கடந்த திங்களன்று இரவு பொது இடத்தில் ஒரு இளம்வயதுப் பெண்ணை 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரைமணி நேரமாக மானபங்கப்படுத்தியது நாடெங்கும் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேர் தனியார் தொலைக்காட்சியின் காமிராமேனால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் 4 பேரை மட்டும்தான் கடந்த ஐந்து நாட்களில் கைது செய்யப்பட்டனர். 


மற்ற 3 பேரை அசாம் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அசாம் முதல்வர் தாரூன் கோகாய், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறப்பு அதிரடிப் படையை நியமித்து இன்னும் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கிங்பிஷர் விமானிகள் ஸ்டிரைக்!!


கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கடந்த 5 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. விமானிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் நேற்று மட்டும் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரிலிருந்து கிளம்பவேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

Wednesday, July 11

IDA is increased by 4.8%

 IDA  is increased by 4.8%  and total IDA  now stands at 61.5%

Communist Leader A.B. Bardhan’s teaching is to be followed in life and not merely used as ‘Quotations’!.


During the last few weeks since the 12/06/2012 agreement was signed I had the 
opportunity to interact with more than 2000 employees through eleven meetings. I was 
emboldened by the understanding of my position by the employees on the 12/06/2012 
agreement. 
          It seems the initial euphoria about the 12/06/2012 agreement had evaporated by now. 
From the earlier claim of “land mark agreement” now some leaders  fine tuned their claims as “-
the best possible agreement in the present situation”. After signing 12/06/2012 agreement 
BSNLEU as usual   spread rumors that 78.2% IDA merger will be effected in the June month 
salary itself. But June has already gone. May be July will also  go the same way. Due to the 
false expectations created by the BSNLEU our employees expected a huge monetary benefit out 
of 78.2% IDA merger immediately. It is not wrong or unreasonable for the employees to expect 
financial benefits on account of any agreement reached with the management by unions. In the 
past NFTE could achieve this. But that golden era may not come again. During the period of 
BSNLEU no agreement was implemented either fully or in time. 
   I had expressed my reservations on 13/06/2012 itself. For this I was attacked /abused from all 
corners. For the last 30 years comrades Namboodri & Abhimanyu had never appreciated any 
agreement/achievement by NFTE. They criticized each and every agreement signed by the 
leaders of NFTE while they were inside the NFTE and   holding high positions in the union. On 
cadre restructuring, two promotions, Bonus, modernization, 20% promotion and many more 
agreements these friends raised hue & cry.  Their opposition and objections were mostly 
subjective and rarely objective. 
   Com. Namboodri who was the first signatory in the first wage  agreement in BSNL along with 
all other unions mounted heavy criticism  against NFTE for pay anomaly and abolition  of 5 
days week etc etc even though he was party to it. These friends also sabotaged each and every 
joint struggle organized under the leadership of NFTE in the past. The classic example was their 
betrayal of historic 3 days strike for govt pension in September-2000. But these friends now call 
me as an enemy of unity! Better they look their face in the mirror atleast once. 
  
  Unfortunately without   realizing their mistakes some of our friends quoting Communist leader 
A.B. Bardhan speeches to hide the shortcomings of BSNLEU. I will appreciate these friends if 
they really follow the path shown by com A.B.Bardhan. Com A.B. Bardhan speeches are not  
for mere quotations and citations alone. They had to be followed for the advancement of Indian 
working class through consistent and uncompromising struggles against the exploitation by the management/ government. 
  I am surprised at the new found love for A.B.Bardhan even while they support the 
retrenchment plan of the management in the garb of VRS and exhibiting calculations on the 
benefit of VRS. It is strange that some friends who are favoring the disinvestment in BSNL also 
quoting comrade A.B.Bardhan who is firmly opposed to both retrenchment and disinvestment 
in a public sector company like BSNL.                                                                                                                                                                 

Monday, July 9

பெண் அல்ல; தெய்வம் !!


விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட கோவையை சே‌ர்‌ந்த சர‌ண்யா, தனது உடல் உறுப்புகளை 7 பேருக்கு வழ‌ங்‌கி அவ‌ர்க‌ளு‌க்கு மறுவாழ்வு கொடு‌த்து‌ள்ளா‌ர். ''மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்‌கிறா‌‌ள்'' எ‌ன்று சர‌ண்யா த‌ந்தை கூறு‌கிறா‌ர்.


கோவை ரத்தினபுரியை சேர்ந்த கே.மணியன் - கலாம‌ணி த‌ம்ப‌திய‌ரி‌ன் மூ‌த்த மகள் சரண்யா. சிறுவயது முதலே படிப்பில் சுட்டி சர‌‌ண்யா. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தா‌ர். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தா‌ர்.


21 வயதான சர‌ண்யா, பி.இ. எலெக்டிரிக்கல் படி‌த்து‌ள்ளா‌ர். கட‌ந்த மாத‌ம் 28ஆ‌ம் தே‌திதா‌‌ன் தே‌ர்வு முடிவு வ‌ந்து‌ள்ளது. முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சர‌ண்யா, தனது உறவினர்கள், தோழிகள் 5 பேருடன் சேல‌த்‌தி‌ல் நட‌ந்த கரு‌த்தர‌ங்‌‌கி‌ல் ப‌ங்கே‌ற்று‌வி‌ட்டு கா‌ரி‌‌ல் கோவை ‌திரு‌ம்‌பியு‌ள்ளா‌ர்.


ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சர‌ண்யா வ‌ந்த கா‌ர் ‌மீது லாரி மோதிய ‌விப‌த்‌தி‌ல் 4 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌‌திலேயே உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ர‌த்த வெ‌ள்ள‌த்‌தி‌ல் ‌கிட‌ந்த சரண்யாவும், தோழி பானுப்பிரியாவும் கோவை அரசு மருத்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். சர‌‌ண்யாவை ப‌ரிசோதனை செ‌ய்த ட‌ா‌க்ட‌ர்க‌ள், சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தந்தை‌‌யிட‌ம் கூ‌றி‌‌வி‌ட்டன‌ர்.


தா‌ன் வள‌ர்‌த்த மகள் இறந்து போகும் நிலையில் உள்ள சோகம் ஒருபுறம் இதயத்தை கனக்க வைத்தாலும், மகளின் உடல் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு தானம் செய்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும், அவர்கள் உருவில் தனது மகளை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்த த‌ந்தை ம‌ணிய‌ன், மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தா‌ர்.


செ‌ன்னை அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை‌க்கு சரண்யாவின் ஈரல், இருதய வால்வு உறுப்புக‌ள் தானமாக வழ‌ங்க‌ப்ப‌ட்டதோடு, இர‌ண்டு நோயாளிக‌ள் சர‌ண்யாவா‌ல் வா‌ழ்வு பெ‌ற்றன‌ர்.


சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்டோடு, இர‌ண்டு பே‌ரு‌க்கு க‌ண்க‌ள் பொரு‌த்த‌ப்ப‌ட்டது. சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்த‌ப்ப‌ட்டது.


சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை, கோவையில் உள்ள 7 பேர் மறுவாழ்வு பெற்றன‌ர். சரண்யாவின் உடல் உறுப்புகளை டாக்டர் குழுவினர் எடுத்துச்செல்வதை பார்த்த மணியன், அவருடைய மனைவி கலாமணி, தங்கை அர்ச்சனா கண்கலங்கியபடி அனுப்பி வைத்தது சோகத்தை ஏற்படுத்தியது.


சரண்யாவின் உடல் உறுப்புகள் பலரை வாழ வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்‌தி‌ உ‌ள்ளதாக கே.எம்.சி.எச். மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன் கூ‌றினா‌ர்.


''ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும்'' எ‌ன்று த‌ந்தை ம‌‌ணிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.


மக‌ளை இழ‌ந்த வேதனை‌யிலும், உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்துவிடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள்'' எ‌ன்று கண்ணீர் மல்க கூ‌றியு‌ள்ளா‌ர் மணியன்.


விபத்தில் கோவையை சேர்ந்த மாணவி சாலினா, ஓ‌ட்டுந‌ர் செந்தில்குமார், மாணவர்க‌ள் ஆனந்தகுமார், கோகுல் பிரபு ஆகியோர் இறந்தனர். இவர்களில் மாணவி சாலினா, மூளைச்சாவு ஏற்பட்ட சரண்யாவின் தோழி. அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்த இருவரு‌ம் எல்.கே.ஜி. முதல் பொ‌றி‌யிய‌ல் படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள். பொ‌றி‌யிய‌ல் படிப்பி‌ல் இருவரும் 93 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தனர்.


சென்னை இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் இருவரும் தேர்வு பெற்று ஆ‌ண்டி‌ற்கு ரூ.3.56 லட்சம் ஊதியத்தில் பணியாற்றுவதற்காக காத்திருந்தனர். கடந்த 30ஆ‌ம் தேதி மாணவி சாலினா இறந்து போனார். நேற்று சரண்யா இறந்து போனார்.


சர‌ண்யா இற‌க்க‌வி‌ல்லை, 7 பேரு‌க்கு தனது உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்!

தூக்கத்தில் சிறுநீர் கழித்த மாணவிக்கு சிறுநீரைக் குடிக்கவைத்து தண்டனை !!


இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிக்கூட விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு தண்டனையாக விடுதியின் வார்டன் படுக்கை விரிப்பைப் பிழிந்து மாணவி தனது சிறுநீரை குடிக்கும்படி தண்டித்தார் எனக் குற்றம்சாட்டப்படும் சம்பவம் இந்திய ஊடகங்களில் பரவலாக அதிர்ச்சியும் ஆத்திரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தினிகேதனில் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்ற பாத பவன் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் தமது மகளுக்கு உடம்பு சரியில்லை என்பதால் நலம் விசாரிப்பதற்காக விடுதியின் வார்டனைத் தாங்கள் தொலைபேசியில் அழைத்ததாகவும், "உங்கள் மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டாள், அந்தக் கெட்டப் பழக்கத்தை அவள் நிறுத்த வேண்டும் என்பதற்காக அந்தப் படுக்கை விரிப்பைப் பிழிந்து அவள் அந்த சிறுநீரைக் குடிக்க வைத்தேன்" என்று அந்த வார்டன் கூறியதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம்
இதைக்கேட்ட பெற்றோர், மாணவர் விடுதிக்கு சென்று உமா பொடர் என்ற அந்த வார்டனிடம் வாதிட்டுள்ளனர்.
வார்டன் பற்றி பொலிசாரிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனால் மாணவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததாக பொலிசார் முதலில் அந்தப் பெற்றோரை கைதுசெய்துள்ளனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.
பின்னர் மாணவர் விடுதியின் வார்டனும் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை விஷ்வ பாரதி பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்துள்ளது.
சிறார் உரிமை பாதுகாப்புக்கான அரசு ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை கொடுப்பதற்கு சட்டத் தடை உள்ளது என்றாலும், மாணவர்கள் ஆசிரியர்களாலும் பள்ளி அதிகாரிகளாலும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாவதாகத் தொடர்ந்து செய்திகள் அடிபடவே செய்கின்றன.

Saturday, July 7

திருடன் கையில் கஜனா சாவி ?.....

"சிதம்பரத்தை அப்பதவியில் நியமித்து 2ஜி வழக்கில் இருந்து தங்கள் அனைவரையும் காத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் குழுவில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, கபில் சிபல், சல்மான் குர்ஷித், வி.நாராயணசாமி, திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

9% பொருளாதார வளர்ச்சியெல்லாம் சாத்தியமே இல்லை: அடித்து ..!!!

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியம் இல்லை என்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் எதிராக பிடி ஆணை!!

மருத்துவக் கல்லூரி ஒன்று தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட முறைதவறி அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக அன்புமணிக்கு எதிராக தில்லியில் உள்ள சிபிஐ விசேட நீதிமன்றம் இந்தப் பிடி ஆணையை வழங்கியது.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாபை ஆதரித்தது சரி புத்ததேவ்!!!

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது சரி என மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார். இது குறித்து டேராடூனில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட புத்ததேவ் மேலும் கூறுகையில், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரை எங்கள் கட்சி ஆதரித்தது புதிதல்ல. இந்திரா பிரதமராக இருந்த போது ஜனாதிபதி தேரத்லில் விவி கிரிக்கு ஆதரவு கேட்டார். அவரை நாங்களும் ஆதரித்தோம் என கூறினார். 

Friday, July 6



To,


Atl CGMs , BSNL Circles
Sub:  Fixation of  date of  submission of  periodical cash requisition ftrn
payment of GpF Withdrawal, license fee/USOF levy and spectrum charges.
presently, cash authorization is effected every fortnight based on requisitions
received from tircles. A  review of liquidity position of the company has highlighted
the need to  streamline the process of  disbursement of  GPF advances/r,vitirclriii  i.,
License fee and spectrum charges. It has been decided to change the process 35 $elsi't'.
GPF Advances/ Withdrawal
GPF Advanceiwithdrawal application rna)' be received at SSAs/
level by  20th of  each month and approved by  competent authority by
month. All  sanctions shall be incorporated in the cash requisition of the
of  the  subsequent month. Cash shall be authorized in  the first  week
subject to availabilitY of fund.
PAUs/ Circi;
25tl' of  eaclt
first  f'orlnir: i'l
of  the  llrofiti-i
License fee and sPectrum charges
Th.  d.r.  date for payment of  quarterly license fee/ USOF levy and acvelrlce
quarterly spectrum charges is 15th of following month of gach quarter rn'hereas  date fi;r
submission of requisition of funds for said purpose is 26th of preceding month oi'tii.r;
date of  payment. This  led  to  requisition  on  estimation basis and  subseque  nt
supplementary demand / surrender.
Hence, date of  submission of requisition of  funds for payment of  LF/{-iSOi-:
levy and spectrum charges stands revised from  26th of the preceding month to  1Otl' ot'
the month in which payment is to be made. Since monthly trial balance of each SS,\s,,'
pAUs
is prepared by 8'h of the following month, it may be ensured that the recluisitii,r'd
for quarterly LFAJSOF levy and advance spectrum charges match calculatiott of'AGit
as per Trial Balance.
      Sd....
(Yojana Das )
General Manager
Budget, Finance Control &  Inl'estrnenI

Thursday, July 5

பத்மநாபசுவாமி கோவிலில் மேலும் பல கோடிக்கு பொக்கிஷம்!!


திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோவிலின்  கடைசி ரகசிய அறையும் திறக்கப்பட்டது. இந்த அறையிலும் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளதாகவும் இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க வைர மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் இருப்பதாகவும் இவற்றை பலரும் அபகரித்து வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஆனால் இந்த ரகசிய  அறைகளை திறக்கக்கூடாது என்று  கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த ரகசிய அறைகளை திறந்து அந்த அறைகளில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினர் ரகசிய அறைகளில் ஐந்தை திறந்து பார்த்தனர். இந்த அறைகளில் ஏராளமான தங்க வைர ஆபரணங்கள் இருந்தன. ஏராளமான தங்கக் குடங்களில் தங்கக் காசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் 5 ஆம் எண் அறையின் பூட்டை உடைக்க கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டி இருந்தது. இதனால் அந்த அறையை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த அறையை திறப்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பவே அந்த அறையை திறக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் பல லட்சம் கோடி ரூபாய் பொக்கிஷங்களை உடைய பத்மநாப சுவாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது ஐந்தாவது எண்  அறையும் ஆய்வுக் குழுவினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஏற்கனவே திறக்கப்பட்ட அறைகளைப் போலவே இந்த அறையிலும்  ஏராளமான பொன்னும், மணியும், வைர நகைகளும் இருந்ததாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 300 தங்கக் குடங்களில் தங்கக் காசுகளும், நகைகளும் இருந்ததாகவும், மேலும் சிறியது முதல் பெரியது வரை 2000 வைர நகைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றன.  இந்த நகைகளின் மதிப்பை அளவிட குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வர கடவுளாக இருந்த பத்மநாப சுவாமி, தற்போது மேலும் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.

கடவுள் அணுத்துகளை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கோரல்!


சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லையில் அமைக்கப்பட்டு பல் ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்திவரும் செர்ன் விஞ்ஞானிகள் பருப்பொருள் தோற்றம் குறித்த முக்கியக் கண்டுபிடிப்பினை நிகழ்த்தியுள்ளதாகக் கோருகின்ற்னர்.


மிகப்பெரிய ஹேட்ரான் கொலைடர் என்ற அமைப்பில் உயர்சக்தி புரோட்டான்களை மோதவிட்டு இருண்ட பருப்பொருள், கருந்துளை, அல்-பருப்பொருள், மற்றும் உலகம் தோன்றியது எப்படி என்ற மிகப்பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் செர்ன் விஞ்ஞானிகள். 


இதன்படி உலகின் அனைத்துப் பருப்பொருளுக்கும் அளவு மற்றும் வடிவத்தை கொடுக்கும் ஒரு பொருளின் அல்லது அணுத்துகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடித்துள்ளதாக கோரியுள்ளனர்.

மன்னிக்க முடியாத துரோகம்!!!


இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது மன்னிக்க முடியாத துரோகம்'' என்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.


இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று வரும் இலங்கை விமானப்படையினரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும், இந்தியாவில் எங்கும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார் பிரதமர் நரசிம்மராவ்!!!


பாபர் மசூதியை கர சேவகர்கள் இடித்த அன்றைய தினத்தில் அதனை கண்டு கொள்ளாமல் பூஜை செய்துகொண்டிருந்தார் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் தனது சுயசரிதை நூஇல் எழுதியது பரபரப்புக்குள்ளாகியுள்ளது.


அதாவது நரசிம்மராவ் பாபர் மசூதியை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு அளித்தார் என்பதே குல்திப் நய்யாரின் குற்றச்சாட்டு.


குல்திப் நய்யார் "பியாண்ட் த லைன்ஸ்" என்ற சுயசரிதை நூலில் இதனை தெரிவித்துள்ளார். இது விரைவில் வெளிவரவுள்ளது.


"நரசிம்மராவ் பாபர் மசூதி இடிப்பில் மறைமுக ஆதரவளராக இருந்தார். இடிப்பின் போடு பூஜையில் உட்கார்ந்த நரசிம்மராவ் பாபர் மசூதியின் கடைசி கல் வீழ்த்து முடிந்தவுடந்தான் பூஜையை முடித்தார்" என்று குல்தீப் நய்யார் அந்த நூலில் எழுதியுள்ளார்.

Wednesday, July 4

ஏர் இந்தியா விமானிகள் `ஸ்டிரைக்' வாபஸ்!!


வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக இந்திய விமானிகள் சங்கம் (இந்தியன் பைலட்ஸ் கில்ட்) செவ்வாய்க்கிழமை இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 இதன் மூலம் கடந்த 58 நாள்களாக நீடித்து வந்த விமானிகளின் போராட்டம் ஒரு முடிவை எட்டியுள்ளது.
 விமானிகளின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலிப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் ஏர் இந்தியா நிர்வாகம் கூறியுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் பணிக்குத் திரும்புவதாக அந்தச் சங்கத்தின் இணைச் செயலாளர் தெüசீப் தெரிவித்தார்.
 போராட்டம் முடிவுக்கு வந்ததற்கு நீதிமன்ற தலையீடே காரணம், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

Sunday, July 1

We want full recognition not half !!


 Recently the Kerala High court at Ernakulam had delivered a judgment  on framing new recognition rules for recognizing trade unions in BSNL. As per the court order the Dy.CLC will convene a meeting of all trade unions to discuss and decide on the subject matter with in two months.  It is a welcome step in the direction of democratizing the recognition rules to recognize trade unions instead of following the outdated and unsuitable code of discipline. NFTE BSNL was demanding recogition for more than one union in BSNL for a very long time.However the management was not prepared to accept our demand on the spacious plea that there was no unanimity/consensus on the subject matter. But surprisingly BSNLEU now changed a bit and informed the management that it is not averse to modify the code of discipline and frame new recognition rules. It also accepted the proportionate representation in all negotiating councils such as National/Circle/Local councils.


         No doubt this will end the business of unholy alliance of unions in BSNL for the membership verifications. However the crucial point of extending recognition to more than one union which secure atleast 15% of vote Nationwide is not yetaddressed. BSNLEU has so far revealed its mind only on the sharing of seats in councils as per vote share in any verification. It did not spell out openly on the need for extending recognition to more than one union so far. In the past Nation/circle/Local councils were not meeting regularly and periodically. Some times BSNLEU to cut its alliance partners into size did not bothered to hold council meetings even for the whole period. This did not affect BSNLEU since it is a recognized union and could meet the management at any time to discuss any issue.


   The same tactic may be adopted by BSNLEU even after accepting the proportionate representation in National/Circle/Local councils. Hence it is important to get recognition for atleast two unions or all unions which secured more than 15% of support in any verification. The single union domination as recognized union had to end now and here. NFTE BSNL should not accept merely the cosmetic and selective changes in the recognition rules and insist for complete overhaul of the existing rules & procedures for recognizing of trade unions in BSNL.


                                                        Com.C.K.Mathivanan, 

வெளிநாட்டு கடன் தொகை 3,990 கோடி டாலர் உயர்வு!!!

நாட்டின் வெளிநாட்டு கடன் தொகை 2011 ,12ம் நிதி ஆண்டில் (ஏப்ரல் 2011 ,மார்ச் 2012) 3,990 கோடி டாலர் (ஒரு டாலர்,ரூ.56) அதிகரித்ததாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஏப்ரல் 2010 முதல் மார்ச் 2011 வரை வெளிநாட்டு கடன் 4,490 கோடி டாலர் உயர்ந்து மொத்த கடன் தொகை 30,590 கோடி டாலரானது. அது ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2012 வரை 3,990 கோடி டாலர் அதிகரித்து 34,580 கோடி டாலராகி விட்டது. நாட்டின் கடன் விகிதம் 2011 மார்ச் வரை 4.2 சதவீதம் உயர்ந்தது. 2012 மார்ச்சில் அது 5.6 சதவீதம் அதிகரித்து விட்டது. மொத்த வெளிநாட்டு கடனில் வர்த்தக கடனின் பங்கு மட்டும் 30.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

செங்கல் சூளையில் இருந்து 34 கொத்தடிமைகள் மீட்பு !!

கொத்தடிமை களாக இருந்த 13 குடும்பங்களை சேர்ந்த 14 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உள்பட 34 பேரும் மீட்கப்பட்டனர்.

தட்கல் முறைகேடுகளை தடுக்க முன்பதிவு நேரத்தில் மாற்றம்!!

தட்கல் டிக்கெட் முன்பதிவு வருகிற 10-ந் தேதி முதல் காலை 8 மணிக்குப் பதிலாக காலை 10 மணிக்கு தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு !!

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான கடன் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மருத்துவ காப்பீட்டு உதவி தொகையையும் ரூ.4 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு ...