பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது !!
இந்தியா ஜனநாயக நாடு என்ற நிலையிலிருந்து மாறிவருகிறது, இதற்கு தன்னை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச அனுமதிக்காததே முக்கியமான சாட்சி என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு, சர்வதேச எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொள்வதாக இருந்தது. சல்மான் ருஷ்டிக்கு கொலைமிரட்டல் இருப்பதால், அவர் இங்கு வருவது சரியாக இருக்காது என்று ராஜஸ்தான் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில், இலக்கிய விழாவில் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில், போலீசார் இதற்கும் அனுமதி மறுத்தனர். இந்நிலையில், டுவிட்டரில் ருஷ்டி தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோயுள்ளதாக கூறியுள்ளார். ருஷ்டியிவ் இந்த கருத்துக்கு முன்னணி பிரமுகர்களும் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment