WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, January 19

இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி!!



   இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வதை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  கிங்பிஷர் உள்ளிட்ட சில தனியார் விமான நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து அவர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நடத்திய ஆலோசனைகளை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி முடிவு செய்யவுள்ளது.  இந்த சந்திப்பின் போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உடனடியாக ரூ. 150 கோடி வழங்கவும் பிரணாப் ஒப்புக் கொண்டார்.

No comments:

Post a Comment