இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்பட 4 விண்வெளி விஞ்ஞானிகள் அரசுப் பணிகளில் நீடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் விதிகளை மீறி தனியார் நிறுவனமான தேவாஸூக்கு எஸ் பாண்ட் அலைவரிசை ஒதுக்கியதான குற்றச்சாட்டு காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாதவன் நாயர் தவிர, இஸ்ரோ முன்னாள் அறிவியல் துறை செயலர் பாஸ்கரநாராயணா, ஆன்ட்ரிக்ஸ் முன்னாள் மேலாண்மை இயக்குநர் கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் கே.என். சங்கரா ஆகியோரும் அரசுப் பணிகளில் நீடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதவன் நாயர் இஸ்ரோ தலைவராக இருந்தபோதுதான் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவாஸூடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
No comments:
Post a Comment