தினம் ஒரு கேள்வி – எட்டு.
போக்கு வரத்து படி உட்பட சில படிகளை 01.04.2013 முதல் நிறுத்திவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்படிபட்ட உத்திரவை 16.04.2013 க்கு முன் வெளியிட வேண்டாம் என பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையா? 12.06.2012 உடன்பாட்டின்படி படிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க!
தினம் ஒரு கேள்வி – ஏழு
தேர்வு இல்லாமல் TTA பதவி உயர்வு பெற்று தருவதாக டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் வாக்களித்தது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். அத்தோடு 10+2 கல்வி தகுதி இல்லாத ஊழியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு மூலம் TTA தேர்வு பெறும் வாய்ப்பினை பெற்றுத் தந்த NFTE சங்கத்தை குறை கூறி வந்தது. பல வாக்குறுதிகளை சாதாரணமாக மறந்து விட்டது போல இந்த வாக்குறுதியையும் மறந்து விட்டது. 10+2 கல்வி தகுதி இல்லாத டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் தேர்வு எழுத முடியாது என பி.எஸ்.என்.எல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. இப்படியாக டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு துரோகம் இழைத்தது. அதே சங்கம் தேர்தல் வருவதால் எந்த திட்டத்தை குறை கூறி வந்ததோ அதே தகுதி தேர்வு முறை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளிக்கிறது வெட்கம் இல்லாமல். அதன் இரட்டை வேடத்தை ஊழியர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment