WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, April 1

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்!!


முறையான அனுமதி பெறாமல், 312 பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்து உள்ளது.

அனுமதி: @@இதுதொடர்பாக, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டு உள்ள அறிக்கை:பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள், ஏ.ஐ.சி.டி.இ., யின் அனுமதி பெற வேண்டும். அப்படி, அனுமதி பெறாத கல்வி நிறுவனங்களில், பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் அங்கீகரிக்கப்படாது.இருப்பினும், கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, மகாராஷ்டிராவில், 79; டில்லியில், 63;ஆந்திராவில், 43; தமிழகத்தில், 10 என, நாடு முழுவதும், மொத்தம், 312 பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியின்றி செயல்படுகின்றன.நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில், மேலாண்மை படிப்புகளுக்கான இடங்கள், 2006ல், 94 ஆயிரமாக இருந்தன. 2011ல், இந்த எண்ணிக்கை, 3.52 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், பொறியியல் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கை அளவு, 5.50 லட்சத்திலிருந்து, 14.85 லட்சமாக உயர்ந்துள்ளது.

மூடல்:@@மாணவர்கள் சேர்க்கை அளவு, இந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்ட போதிலும், அனுமதி பெறாத கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.அதேநேரத்தில், மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், கடந்த, இரண்டு ஆண்டுகளில், 225 மேலாண்மை கல்லூரிகளும், 52 பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டில், 138 தொழில் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு, ஏ.ஐ.சி.டி.இ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அச்சம்:@@இதுதொடர்பாக, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது:முறையான அனுமதி பெறாத பல கல்வி நிறுவனங்கள், பெரிய அளவில் இயங்கி வருவதால், மாணவர்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் மத்தியில், தொழில்நுட்ப கல்வி பயில்வதில், ஆர்வம் குறைய தொடங்கிஉள்ளது. இதேநிலை தொடர்ந்தால், நாட்டின்
முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும்.இவ்வாறு கல்வியாளர் கூறினார்.

தமிழகத்தில், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் கல்வி நிறுவனங்கள்:
1.ஐ.சி.எப்.ஏ.ஐ., நுங்கம்பாக்கம், சென்னை,
2. ஐ.சி.எப்.ஏ.ஐ., அடையாறு, சென்னை,
3. ஐ.சி.எப்.ஏ.ஐ., மேற்கு தாம்பரம், சென்னை,
4.இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பிசினஸ் அன்ட் மேனேஜ்மென்ட் பி.லிட்., எழும்பூர்,சென்னை,
5. எம்.இ.ஆர்.ஐ.டி., சுவிஸ் ஏசியன் ஸ்கூல் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஊட்டி,
6. நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட், அடையாறு, சென்னை,
7. நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், சாந்தோம், சென்னை,
8. ஸ்டான்ஸ்பீல்ட் ஸ்கூல் ஆப் பிசினஸ், மவுன்ட் ரோடு, சென்னை,
9. கிரேட் லேக்ஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட், சென்னை,
10. ராய் பிசினஸ் ஸ்கூல், தேனாம்பேட்டை, சென்னை.
தொடர்புடைய செய்திகள்

No comments:

Post a Comment