WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, April 20

ஊர் கூடி!!


தேரோட்டம் நடைபெறும் ஊர்களில் ஊர் கூடி தேர் இழுப்பார்கள். அது ஒரு கூட்டு முயற்சி. பங்கேற்போர் தங்கள் சக்திக்கேற்ப இழுப்பார்கள். தேர் நிலை வந்து சேரும். இது நடைபெற்று முடிந்த தேர்தலுக்கும் பொருந்தும். 

தமிழகத்தில் நமது உறுப்பினர் எண்ணிக்கையை விட  கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். இது ஊழியர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம்.
 

கடலூர், காரைக்குடி, கும்பகோணம், சேலம், தஞ்சை, நெல்லை, திருச்சி, வேலூர், மாநில அலுவலக மாவட்டங்கள் வெற்றிக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்று தந்தன.(2126).

கோவை, தருமபுரி, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், நீலகிரி, பாண்டி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப வாக்குகளைப் பெற்றன.
 இவற்றில் BSNLEU சங்கம் கூடுதலாகப் பெற்ற வாக்குகள் 1382. [2126-1382 =744] மொத்தத்தில் அவரவர் சக்திக்கெற்ப பங்களித்துள்ளனர்.

 நாடு முழுவதும் கோலி சங்கத்திற்கு வாக்குகள் கிடைத்துள்ளது. அதற்கு தமிழன் தான் காரணம் என்பது சரிதானா? 

 தமிழகத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துரோகிகளை தேடிக் கொண்டிருக்கவில்லை என்பதை கவனிப்பது நல்லது.
 

இது குறித்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம் ஏனெனில் உடனடியான அடுத்த பணி வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர் சேர்க்கும் பணி முன் நிற்கிறது.                                                                    ஈரோடு வலை தளம் ...................

No comments:

Post a Comment