WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, April 25

இன்று வானில் தெரிகிறது சந்திர கிரகணம் : வெறும் கண்ணால் 27 நிமிடங்களுக்கு பார்க்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

இன்று வானில் தெரியும் சந்திரகிரகணம், 21ம் நூற்றாண்டின், மூன்று சந்திர கிரகணங்களில், மிக நீண்ட நேரம் தெரியும் சந்திர கிரகணம் ஆகும். இதை 27 நிமிடங்களுக்கு வெறுங் கண்ணால் பார்க்க முடியும்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருகிற போது பூமியின் நிழலால் சந்திரன் மறைந்து பின்னர் தெரிவது சந்திர கிரகணம். இந்த ஆண்டு மூன்று சந்திரகிரகணங்கள் மற்றும் இரு வளையம் போன்ற சந்திர கிரகணங்கள் என மொத்தம் 5 கிரகணங்கள் நிகழவுள்ளன. அதன் படி இன்று முதலாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவு இந்திய நேரம் 1 மணி 22 நிமிடங்கள் முதல், 1 மணி 53 நிமிடங்கள்  வரை நிகழ்கிறது. 27 நிமிடங்கள் வரை நீடிக்கும் இச்சந்திர கிரகணத்தை அனைவரும் நேரடியாக கண்டு ரசிக்கலாம்.
 

No comments:

Post a Comment