WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, April 3

ரூ. 1,200 கோடி தொலை தொடர்பு சேவை ஒப்பந்தம்: அம்பானி சகோதரர்கள் இணைகிறார்கள் !!


கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்திருந்த அம்பானி சகோதரர்களான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைகின்றனர். 4-ஜி தொலைத் தொடர்பு சேவையை அளிப்பதற்காக ரூ. 1,200 கோடி ஒப்பந்தத்தில் இரு சகோதரர்களும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.
 ரிலையன்ஸ் குழுமத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு 2005-ஆம் ஆண்டில் இரு சகோதரர்களும் பிரிந்தனர். இருவரும் தனித்தனியே வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வந்தனர். இந்நிலையில் இப்போது இருவரும் இணைந்து கூட்டாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 முன்னர் இன்ஃபோடெல் பிராட்பேண்ட் என்ற பெயரிலான இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான இந்நிறுவனத்துக்கு சமீபத்தில்தான் 4-ஜி சேவை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
 நாடு முழுவதும் 22 சேவை பகுதிகளில் 4-ஜி சேவை அளிப்பதற்காக அனில் அம்பானி நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 1,20,000 கி.மீ. தூரத்துக்கு போட்டுள்ள கண்ணாடியிழை கேபிள் வசதியை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. இதற்காக இந்நிறுவனம் ரூ. 1,200 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸýக்கு அளிக்கும்.
 எதிர்காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ அளிக்க உள்ள வாய்ஸ் சேவைக்காக அனில் நிறுவனத்தின் 20 ஆயிரம் தொலைத் தொடர்பு டவர்களையும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
 மிகுந்த கடன் சுமையில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் கூடுதல் வருமானம் கிடைக்க வழியேற்படுத்தியுள்ளது. கடந்த 14 காலாண்டுகளில் 13 காலாண்டுகளில் இந்நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 55 வயதான முகேஷ், தந்தையின் மறைவுக்குப் பிறகு பெட்ரோகெமிக்கல்ஸ், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அனில் அம்பானி மின்சாரம், நிதிச் சேவை மற்றும் தொலைத் தொடர்பு தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment