மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டுமென அசோசேம் அமைப்பு நடத்திய சர்வேயில் 89 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வர்த்தக அமைப்பான அசோசேம் அவ்வப்போது பல்வேறு தலைப்புகளில் சர்வே நடத்தி வருகிறது. ‘பட்ஜெட் 2013: சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பு’ என்ற தலைப்பில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், அகமதாபாத், ஐதராபாத், புனே, சண்டிகர், டேராடூன் ஆகிய நகரங்களில் ஒரு சர்வே நடத்தியது. இது குறித்து அசோசேம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ரவத் கூறியதாவது:
ஒவ்வொரு நகரிலும் பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 2,500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் 89 சதவீதம் பேர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வலியுறுத்தினர். பணவீக்கத்துக்கு ஏற்ப இந்த வரம்பு இல்லையென்றும், நாடாளுமன்ற கமிட்டி பரிந்துரைப்படி ரூ.3 லட்சமாக்க வேண்டியது கட்டாயம் என்றும் கூறினர். பெண்களுக்கு ரூ.3.5 லட்சமாக்கவும் கோரினர்.
No comments:
Post a Comment