வங்கிகள் தனியார் மயம், விலைவாசி உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதன், வியாழன் (பிப்ரவரி 20, 21) ஆகிய இரு நாள்கள் (48 மணி நேரம்) நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்தில் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ், வங்கித் துறை, வருமான வரித்துறை, தபால் துறை, கலால், சுங்கம், கப்பல், பாதுகாப்புத் துறை, மத்திய கணக்குத் துறை, தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
No comments:
Post a Comment