(டி.என்.எஸ்) 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்தான நிறுவனங்கள் தங்களது சேவையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை உரிமம் ரத்து செய்யப்பட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்த நிலையில், 2ஜி புதிய ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஏலத்தில் பங்கேற்காத நிலையில், உரிமம் ரத்தான பின் சேவை வழங்கிய நிறுவனங்கள் உடனடியாக தங்களது சேவையை ரத்து செய்ய வேண்டும் என்றும், உரிமம் ரத்தான பிறகும் சேவையை வழங்கியதற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 2ஜி ஏலத்தில் பங்கேற்று உரிமம் பெற இயலாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சேவையை உடனடியாக ரத்து செய்ய வேண்டியது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பணி. எனவே, உரிமம் ரத்தான நிறுவனங்களின் சேவையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. (டி.என்.எஸ்)
No comments:
Post a Comment