தனது வெண்கலக் குரலால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களை கட்டிப் போட்ட டி.எம்.செüந்தரராஜன்,
டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார்.
சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கால் தவறி விழுந்ததில், டி.எம்.எஸ்-க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினார்.
சில நாள்களுக்கு முன்பு மீண்டும் டி.எம்.செளந்தரராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 19-ஆம் தேதி வீடு திரும்பினார்.
பேரன் திருமணம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாள்களில் அவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் டி.எம்.எஸ். கலந்து கொண்டார்.
சென்னை மந்தைவெளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாள்களாக டாக்டர்கள் அவரது வீட்டிற்கே வந்து சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் டி.எம்.எஸ்-க்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிற்பகல் 3.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
No comments:
Post a Comment