2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய நீரா ராடியா இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா உள்ளிட்டோர் மீது கடந்த 2011–ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் முக்கிய சாட்சியாக பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா சேர்க்கப்பட்டார். இவர் வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந்தேதி சி.பி.ஐ. சாட்சியாக ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவர் தனக்கு நரம்பியல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற வேண்டியது இருப்பதால் 3 மாதகாலம் அவகாசம் அளிக்கவேண்டும் என்று கோரினார்.
இன்று நீரா ராடியா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் அடங்கிய 62 ஒலி நாடாக்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ அனுமதி கேட்டது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை மனுக்களாக பெறும்படி நீதிபதி கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீரா ராடியாவின் வாக்குமூலம் பதிவு செய்வது ஜூலை 2 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment