கடந்த 2003ம் ஆண்டில் ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது. வாடிக்கையாளர் லோக்கல் டயலிங் என்ற அந்த திட்டத்தின் கீழ், ரோமிங்கில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அழைக்கப்படும் எல்லா அழைப்புகளும் உள்ளூர் அழைப்புகளாகவே இருக்கும். இது தொலைத்தொடர்பு துறையால் வழங்கப்பட்ட லைசென்சுக்கான விதிமீறல் ஆகும். இதனால் அரசுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின்பேரில், ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.650 கோடி அபராதம் விதிக்க தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment