WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, May 30

ஸ்பெக்ட்ரம் ஊழல்: அனில் அம்பானிக்கு சம்மன் !!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.1.96 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க டெல்லியில் உள்ள சிபிஐ கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்தில் முக்கிய சாட்சியான நீராராடிய ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத்தொடர்ந்து அடுத்தக் கட்டமாக மேலும் 70 பேரை சாட்சிகளாக சேர்க்க சிபிஐ முடிவு செய்துள்ளது. அந்த 70 பேரில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியும் ஒருவர் ஆவார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஹசித் சுக்லா தற்போது சிபிஐ சாட்சியாக உள்ளார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் சாட்சியம் அளித்த போது ஏஏஏ கன்சல்டன்சி நிறுவனத்தின் ஆவணத்தில் கையெழுத்திட்டு இருப்பது அனில் அம்பானியும் அவரது மனைவி டினாவும் என்று கூறியிருந்தார்.

இந்த ஏஏஏ கன்சல்டன்சி மூலம்தான் ஸ்வான் டெலிகாமிடம் இருந்து 2ஜி உரிமங்களை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது. இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் பெற சிபிஐ திட்டமிட்டுள்ளது. எனவே கோர்ட்டுக்கு வந்து விளக்கம் அளிக்கும்படி அம்பானிக்கு சம்மன் அனுப்பபட உள்ளது. இது பற்றி சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்கா கூறுகையில் அம்பானியும் அவர் மனைவியும் அளிக்கும் சாட்சியம் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு வலுசேர்ப்பதாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment