WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, May 4

 "எந்த அமைப்பிலும் பெரும்பான்மை முடிவுகளை சிறுபான்மை வீ ட்டோ செய்வது ஏற்கப்படுவதில்லை "

என்று ஒலிக்கதிரில் மூன்றாம் பக்கத்தில் எழுதி ஒரு நல்ல அறிவுபூர்வமான விவாதத்தை மாநிலச் செயலர் துவக்கி உள்ளார்.

  வீட்டோ பவரே சரியானதுதானா என்று ஒரு ஆழமான கருத்து நிலவுகிறது.

குறிப்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சைனா  ஆகிய  5 நாடுகள் மட்டுமே வீட்டோ பவரை பெற்றுள்ளன.

அனைத்து உறுப்பினர் நாடுகளும் ஆகப்பெரும்பான்மையோடு முடிவெடுத்தாலும் அந்த 5 நாடுகளில் ஏதோ ஒரு நாடு கூட தனது வீட்டோ பவரை பயன்படுத்தி அந்த முடிவை தள்ளுபடி செய்துவிட முடியும்.

  அமெரிக்க நாட்டில்  அந்த நாட்டின்  மக்களவை முடிவைக்கூட  ஜானாதிபதி வீ ட்டோ செய்துவிட முடியும்.

பல நாடுகளில் மெஜாரிட்டி இனம் மைனாரிட்டிகளை ஒடுக்க முற்படும்போது தான் தீவிரவாதம் தலைதூக்குகிறது எனபது விஞ்ஞான ரீதியான காரனமாகும்.

 நிற்க.

நம்மையெல்லாம் வர்க்க உணர்வுமிக்க போராளியாய் உருவாக்கி, ஒப்புயர்வில்லா NFTE-BSNL இயக்கத்தின் முன்னணி படைத் தளபதிகளாக அடையாளம் காட்டிய அமைப்பின் ஆகப் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படாமல் தனது சுய வீட்டோ பவரை பயன்படுத்தி  Free Lance என்று விடுவித்துக் கொள்வது, தான் மேற்கோள் காட்டுகின்ற வரைமுறைக்கு பொறுத்தமானதுதானா என்பதை மாநிலச் செயலரின்  மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம். 

      மதுரை மாநாட்டிற்கு முன்னும் பின்னும்  தனது அணிக்கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது ஆரோக்கியமான வளர்ச்சியாக கருத முடியாது.

 குறிப்பாக நமது ஆதர்ஸ நாயகனாம் தோழர் ஜெகன் அவர்களின் வழிகாட்டுதல், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில்,பணி ஓய்வு பெற்ற எந்த தோழரையும் மாநில சங்கத்திற்கு தேர்ந்தெடுப்பதில்லை என்பதாகும்.

இதற்கு மாறாகவும், மாநில மாநாட்டு முடிவுக்கு எதிராகவும் பணி ஓய்வு பெற்றவர்களும் மற்ற சிலரும் நிரந்தர அழைப்பாளர்களாக  நியமிக்கப் பட்டது முறையற்றது.

இதனை எதிர்த்து 18 மாநில செயற்குழு உறுப்பினர்கள் கடிதம் கொடுத்தும் ஒரு acknowledgement  செய்யக்கூட  மனமில்லை மாநில சங்கத்திற்கு.

   சென்னை மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கோ, சேலம் கூட்டத்திற்கோ முறையான அழைப்பில்லை.

தொலைபேசியில் அழைக்கக் கூட அவருக்கு நேரமில்லையா, மனமில்லையா என்று தெரியவில்லை.

 சேலம் கூட்ட வால்போஸ்டர்  ராமகிருஷ்ணன் / ராபர்ட், மாவட்டச் செயலர் என்று அனுப்பப்பட்டது. 

  டெல்லி Chqவிலிருந்து  வரும் கடிதம் பட்டாபி ராமன்/சுப்பராயன், மாநிலச் செயலர்  என்று வந்தால் எப்படிபட்ட உணர்வு மாநில செயலருக்கு வரும் என்பதையும் அவரது முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
 
 அதேபோல மாநில சங்க நிர்வாகிகளின் சுற்றுப்பயணத்  திட்டமும் எந்த கலந்தாலோசனையுமின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டு அதை மாநில சங்க நிர்வாகிகள் வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ள வெண்டிய துர்பாக்கிய நிலை.

நமது மாநில சங்க நிர்வாகிகளை முடக்கிடும் திட்டமாக  அது இருந்ததும் ஈரோடு கூட்டத்திற்கான காரணமாகும்.

 இவ்வளவு அவமானங்களை  அள்ளித் தெளித்தாலும் மாநிலச் செயலரை போல  free lance  unionist  என்று நம்மால் அறிவிக்க இயலாது.

வாழ்நாள் முழுவதும் நமது இயக்கம் NFTE தான் என்று வரித்துக் கொண்டவர்கள் நாம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நமது  பகுதிகளில் நமது எதிரிகளின் சொல்லடி, கல்லடி என்று எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமர் புரிந்து NFTE பதாகையை உயர்த்திப் பிடிப்பவர்கள்  நாம்.

அதனால்தான் ஈரோட்டில் கூடி தமிழகத்தில் NFTEன் வெற்றியை உறுதி செய்ய 15 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  நமது மாநில சங்க நிர்வாகிகளும் சம்மேளனச் செயலரும்  சூறாவளி சுற்றுப்பயணம்  மேற்கொண்டனர்.
 
இதை பாராட்ட வேண்டிய மாநிலச் செயலரோ, அவர்களை ஒலிக்கதிரில்  குறை கூறுவது சற்றும் நியாயமானதன்று.
 
நமது தொழிற்சங்க பேராசான் தோழர் குப்தா அவர்கள், சாதாரண மெஜாரிட்டியே intoxicate ஆகிவிடக் கூடாது என்று வழிகாட்டியுள்ளார்.
ஆனால் மதுரையில்  உருவாக்கப்பட்ட மெஜாரிட்டியோ (inflated majority)  இன்னும் ஜாக்கிரதையாக, நளினமாக  இயக்கத்தை கையாள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். 
                              செய்தி .....கோவை வலைத்தளம் 

No comments:

Post a Comment