இந்திய கம்யூ..தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா குற்றச்சாட்டு !
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதிக லாபமடைய வசதியாக, ஆந்திரபிரதேசத்தில் உள்ள கே.ஜி-டி6 இயற்கை எரிவாயு வயலில் உற்பத்தியாகும் எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதையடுத்து, "இந்த விவகாரத்தில் உண்மையை விளக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய குருதாஸ்தாஸ் குப்தா, "இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் விவகாரத்தில் மத்திய அமைச்சரவை தயாரித்த குறிப்புகள் மற்றும் மத்திய திட்டக் குழு, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு ஆகியவை அளித்த பரிந்துரைகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வீரப்ப மொய்லி செயல்படுகிறார்; இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணகான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்' என்று கூறினார்.
மொய்லிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அலுவல் குறிப்புகள், பெட்ரோலியத் துறை கொள்கை நிர்ணயக் குறிப்புகள் அடங்கியதாகக் கூறப்படும் சில ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகக் குருதாஸ்தாஸ் குப்தா கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
"பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் குழு, ஒரு எம்எம்பிடியு (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் என்பது பத்து லட்சம் கன அடி எரிவாயு யூனிட்டுக்கு சமம்) இயற்கை எரிவாயு விலையை 4.2 அமெரிக்க டாலர்களாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அதை முதலாவது ஆண்டில் 8 அமெரிக்க டாலர்கள், இரண்டாவது ஆண்டில் 10 டாலர்கள், மூன்றாஇந்த நிலையில், மொய்லியின் யோசனை ஏற்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கூடுதல் மானியச் சுமை ஏற்படும்; ஆனால், அந்த முடிவால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32,400 கோடி லாபம் கிடைக்கும்.
மொய்லியின் யோசனைக்கு பெட்ரோலியத் துறைச் செயலர், மத்திய மின் துறை, உரத் துறை அமைச்சக உயரதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றை எல்லாம் பொருள்படுத்தாமல் அதிகாரிகள் எழுதிய குறிப்புகளை மூன்று முறை மொய்லி நிராகரித்துள்ளார். மேலும், தனது யோசனையைப் பரிந்துரைக்கும் கோப்பில் கையெழுத்திடும்படி அவர் அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார்.
ஏற்கெனவே, இயற்கை எரிவாயு விலையேற்ற விவகாரத்தில் ஒரு எம்எம்பிடியு எரிவாயுக்கு ரூ. 13.8 அமெரிக்க டாலரை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் பேரம் பேசி வருகிறது.
இந்த நிலையில், மொய்லியின் யோசனை ஏற்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கூடுதல் மானியச் சுமை ஏற்படும்; ஆனால், அந்த முடிவால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32,400 கோடி லாபம் கிடைக்கும்.
இந்த விலை உயர்வை ஐந்து ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் அரசுக்கு ரூ. 1,80,000 கோடி மானியச் சுமையும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,62,000 கோடி லாபமும் கிடைக்கும்.
இந்த அளவுக்கு ஒரு தனியார் நிறுவனம் ஆதாயம் பெற வழிவகைகளை உருவாக்கிக் கொடுக்கும் வீரப்ப மொய்லியின் செயலை "மெகா ஊழல்' எனக் கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்?'' என்று குருதாஸ்தாஸ் குப்தா கூறினார்.

No comments:
Post a Comment