WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, May 12

ஒரு கை ஓசை !

தமிழகத்தில் NFTE-BSNL வெற்றி பெற  அனைவரும் இரவு பகல் பாராது உழைத்தோம் ! 
இந்த வெற்றிக்கு தேர்தல் கால உழைப்பு மட்டுமல்ல... பல ஆண்டுகளாக நமது தோழர்களின் சோர்வறியா உழைப்புதான் முக்கிய காரணம்...
ஆனால் தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகமெங்கும் பொய்ப் பிரச்சாரம் துவங்கி விட்டது .
கோவையில் தேர்தல் முடிவு வெளியான மறு வினாடியே ராபர்ட் மாவட்டச் செயலரை பகிரங்கமாக தாக்கி பேசுகிறார்.
இந்த வெற்றி " despite betrayal " என்று வர்ணிக்கப்படுகிறது.
கட்சிக்காரர்கள் NFTEக்கு ஓட்டுப்போடவில்லை ,தமிழகமெங்கும் NFTEக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சம்மேளனச் செயலரே NFTE-BSNLக்கு ஓட்டு போடவில்லை என்றெல்லாம் நாக்கூசாமல் அபாண்டமான பொய்ப் பிரசாரம் கட்டவிழ்த்துவிடப் படுகிறது.
ஒலிக்கதிரில் தனி அணி ஆவர்த்தனம் என்று மாநிலச் செயலரே பிரிவினையை துவக்கி வைக்கிறார்.
இது ஒரு சிலரின் திட்டமிட்ட சதியாகவே (diabolical plan) தெரிகிறது.

NFTE-BSNL அங்கீகாரம் பெற 8 ஆண்டுகளாக பலத்த எதிர்ப்புக் கிடையே கோர்ட், வழக்கு, மேல்முறையீடு  என்று, கடும் முயற்சி மேற்கொண்ட, தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்  மேற்கொண்ட அகில இந்திய துணைப் பொதுச் செயலருக்கு அழைப்பு இல்லை......
   ஆனால்,  கஷ்டமான காலத்தில் சங்கத்திலிருந்தே ஒதுங்கி நின்றவர்களுக்கும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் தொடர்ந்து ராஜ மரியாதை.....
இது போன்ற  ஒருதலைபட்சமான செயல்பாடுகள் ஏற்புடையதன்று......
 பணி ஓய்வு பெற்றவர்களைவிட தற்போது இயக்கத்தில் பணியாற்றுவோரை அழையுங்கள், அதுதான் பொருத்தமாக  இருக்கும், ஆகவே நான் வர இயலாது  என்று சேலம் கூட்டத்தின் போதே, ஆலோசனை கூறிய  மூத்த தோழர் மாலி அவர்களின் பெயர் அவர் அனுமதி இல்லாமலேயே அனைத்து வால் போஸ்டர்களிலும் போடுவதன் காரணம், தான் மிகவும் நடுநிலை என்று காட்டிக் கொள்ள மட்டுமே ! ஆனால் அது நாகரீகமான செயல் அன்று.
 அனைவரையும் அரவணைக்கும் போக்கு வரும் வரை  தாங்கள்  கலந்து கொள்ள இயலாது  என்று தெரிவித்த தோழர்கள் சம்மேளனச் ஜெயராமன், மாநிலப் பொருளாளர் அசோக ராஜன் ஆகியோரின் பெயர்களையும்  வால் போஸ்டரில் போடுவதும் அதே போலத்தான்.
 தனது அணிக் கூட்டத்தில், சேலத்தில் கூட்டம், கும்பகோணத்தில் கூட்டம் என்று முடிவெடுத்து விட்டு அதை மற்றவர்கள் மீது திணிப்பதும் ஏற்புடையதல்ல.
இனியாவது வெப் சைட்டில் அழைப்பு விடுவதை விடுத்து அனைவரையும் அழைத்து பேசி ஒருமுகப்படுத்தும் வேலையில் மாநிலச் செயலர் ஈடுபட வேண்டும் என்பதே 9 மாநில சங்க நிர்வாகிகள், 8 மாவட்டச் செயலர்களின் கோரிக்கை.
இதையே மத்திய சங்க பொதுச் செயலருக்கும் தெரிவித்து உள்ளோம்.   
* வாய்ப்பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்பது கூடாது.
            ..........பாரதியார்                                                                                  
               செய்தி..கோவைவலைத்தளம்                                   
                              

No comments:

Post a Comment