WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, May 31

லைசென்ஸ் விதிமீறல்: ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.650 கோடி அபராதம்!!

 கடந்த 2003ம் ஆண்டில் ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது. வாடிக்கையாளர் லோக்கல் டயலிங் என்ற அந்த திட்டத்தின் கீழ், ரோமிங்கில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அழைக்கப்படும் எல்லா அழைப்புகளும் உள்ளூர் அழைப்புகளாகவே இருக்கும். இது தொலைத்தொடர்பு துறையால் வழங்கப்பட்ட லைசென்சுக்கான விதிமீறல் ஆகும். இதனால் அரசுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின்பேரில், ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.650 கோடி அபராதம் விதிக்க தொலைதொடர்பு  துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Thursday, May 30

ஸ்பெக்ட்ரம் ஊழல்: அனில் அம்பானிக்கு சம்மன் !!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.1.96 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க டெல்லியில் உள்ள சிபிஐ கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்தில் முக்கிய சாட்சியான நீராராடிய ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத்தொடர்ந்து அடுத்தக் கட்டமாக மேலும் 70 பேரை சாட்சிகளாக சேர்க்க சிபிஐ முடிவு செய்துள்ளது. அந்த 70 பேரில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியும் ஒருவர் ஆவார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஹசித் சுக்லா தற்போது சிபிஐ சாட்சியாக உள்ளார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் சாட்சியம் அளித்த போது ஏஏஏ கன்சல்டன்சி நிறுவனத்தின் ஆவணத்தில் கையெழுத்திட்டு இருப்பது அனில் அம்பானியும் அவரது மனைவி டினாவும் என்று கூறியிருந்தார்.

இந்த ஏஏஏ கன்சல்டன்சி மூலம்தான் ஸ்வான் டெலிகாமிடம் இருந்து 2ஜி உரிமங்களை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது. இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் பெற சிபிஐ திட்டமிட்டுள்ளது. எனவே கோர்ட்டுக்கு வந்து விளக்கம் அளிக்கும்படி அம்பானிக்கு சம்மன் அனுப்பபட உள்ளது. இது பற்றி சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்கா கூறுகையில் அம்பானியும் அவர் மனைவியும் அளிக்கும் சாட்சியம் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு வலுசேர்ப்பதாக இருக்கும் என்றார்.

வேறு கம்பெனிகளின் இணைப்பு தொடர்புக்கு வெட்டு !! தலையிட்டு தீர்க்க NFTE-BSNL தலைமைக்கு வேண்டுகோள் !

நாம் DOT ஊழியராக இருந்தபோது வாடகை இல்லா தொலைபேசி இணைப்பை
நமது சங்கம் கடுமையாக போராடிப் பெற்றது.

   அந்த இணைப்பில் இருந்து வோடாபோன், ஏர்செல் போன்ற தனியார் கம்பெனிகளின் இணைப்புகளுக்கு தொடர்பு கொள்ள முடியாத வகையில் Inter connection chargesஐ மிச்சப்படுத்துகிறோம் என்ற காரணத்தைக் கூறி
அந்த வசதி (Off-net) BSNL கார்ப்பரேட் அலுவலக உத்திரவின்படி  துண்டிக்கப்பட்டுள்ளது.

நமது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மாதாமாதம்  Free Callக்கு மேலேயே பேசி நமது கம்பெனிக்கு கூடுதல் வருவாயை கொடுத்து வந்தோம்.  ஆனால், இந்த ஒரு உத்திரவின் காரணமாக அந்த வருவாய் குறைவதோடு, நாம் அவர்களிடம் தொடர்பு கொள்ள மேலும் ஒரு தனியார் இணைப்பை வாங்க மறைமுகமாக தூண்டுகிறது BSNL நிர்வாகம்.

 ஆகவே, நமது சங்கத் தலைமை தலையிட்டு மீண்டும் Off -net calls வசதியை வழங்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் !  

Tuesday, May 28

WORKS COMMITTEE NOMINATION ORDERS RELEASED !!



வொர்க்ஸ் கமிட்டியில் எந்த எந்த சங்கத்திற்கு எவ்வளவு இடம் என்பதற்கான உத்தரவு இன்று வெளியானது. புதிய அங்கீகார விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் NFTE-BSNL மற்றும்  BSNLEU ஆகியவை தலா 3 என்ற அளவில் பிரித்து கொண்டு அதற்கேற்றவாறு நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு வெளியிட்டுள்ளது.

டெல்லி செய்திகள்:


நிர்வாகம் போராட்டத்தை விளக்கிக் கொள்ளும்படி கேட்டதற்கு நமது சங்கம் இன்று பதில் அளித்துள்ளது. ஒருவருடம் ஆகியும் நமது 78.2 சதவீதம் கிராக்கிப்படி இணைப்பு தருவதற்கு நிர்வாகம் தேவையில்லாமல் இழுத்தடித்து கொண்டு இருப்பதால் நாம் போராட்டப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளோம். போராட்டம் நடத்த வேண்டும் என்பதுசங்கங்களின் ஆசை அல்ல. அதுநம் மீது திணிக்கப்பட்ட ஒன்று. எனவே போராட்ட அறிவிப்பை விலக்கிக் கொள்ள முடியாது.என மத்திய சங்கம் கடிதம் அனுப்பிஉள்ளது .

நீதிமன்றத்தில் நீரா ராடியா ஆஜர்!!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய நீரா ராடியா இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா உள்ளிட்டோர் மீது கடந்த 2011–ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் முக்கிய சாட்சியாக பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா சேர்க்கப்பட்டார். இவர் வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந்தேதி சி.பி.ஐ. சாட்சியாக ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவர் தனக்கு நரம்பியல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற வேண்டியது இருப்பதால் 3 மாதகாலம் அவகாசம் அளிக்கவேண்டும் என்று கோரினார்.

இன்று நீரா ராடியா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் அடங்கிய 62 ஒலி நாடாக்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ அனுமதி கேட்டது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை மனுக்களாக பெறும்படி நீதிபதி கேட்டுக் கொண்டார்.  இதனைத் தொடர்ந்து நீரா ராடியாவின் வாக்குமூலம் பதிவு செய்வது ஜூலை 2 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் !!

மிகவும் சந்தோஷமாக வாழ தகுதியான நாடு என மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. (ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும், அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் 10 நாடுகள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
முதல் பத்து நாடுகளில் ஆஸி. முதலிடம்
இது குறித்துஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார ரீதியில் வளர்ச்சிஅடைந்த நாடுகளில் ஆஸ்திரேலியா மிகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் 72 சதவீத தன்னிறைவு வளர்ச்சி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் வயது வாரியாக அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 23 மில்லியன் மக்கள் தொகையில் 84 சதவீதம் பேர் தாங்கள் மிகவும் சந்தோஷமாகவும், திருப்திகரமான, தேவையான வருவாயினை ஈட்டி பொருளாதாரத்தில் முழு திருப்தி அடைந்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து இப்பட்டியலில் சுவீடன், டென்மார்க், கனடா, நார்வே,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா, ஐஸ்லாந்து, இங்கிலாந்து,நெதர்லாந்து ஆகிய 9 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Monday, May 27

கண்ணீர் அஞ்சலி !!


அனைவராலும் BR என்று அன்போடு அழைக்கும் கடலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னோடியும் நமது முன்னாள் மாவட்ட செயலருமான தோழர் ,B ராஜேந்திரன் TM அவர்கள்        ( 27-05-2013) திங்கள் கிழமை அதிகாலை மாரடைப்பால் இயற்க்கை அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்,

ஆழ்ந்த வருத்தத்தை  தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


Sunday, May 26

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் மறைவு!!



தனது வெண்கலக் குரலால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களை கட்டிப் போட்ட டி.எம்.செüந்தரராஜன்,
டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர்  (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார்.

சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கால் தவறி விழுந்ததில், டி.எம்.எஸ்-க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினார்.

சில நாள்களுக்கு முன்பு மீண்டும் டி.எம்.செளந்தரராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 19-ஆம் தேதி வீடு திரும்பினார்.

பேரன் திருமணம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாள்களில் அவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் டி.எம்.எஸ். கலந்து கொண்டார்.

சென்னை மந்தைவெளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாள்களாக டாக்டர்கள் அவரது வீட்டிற்கே வந்து சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் டி.எம்.எஸ்-க்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிற்பகல் 3.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக "மெகா ஊழலா ? "

   இந்திய கம்யூ..தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா குற்றச்சாட்டு !
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதிக லாபமடைய வசதியாக, ஆந்திரபிரதேசத்தில் உள்ள கே.ஜி-டி6 இயற்கை எரிவாயு வயலில் உற்பத்தியாகும் எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதையடுத்து, "இந்த விவகாரத்தில் உண்மையை விளக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய குருதாஸ்தாஸ் குப்தா, "இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் விவகாரத்தில் மத்திய அமைச்சரவை தயாரித்த குறிப்புகள் மற்றும் மத்திய திட்டக் குழு, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்  தலைவர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு ஆகியவை அளித்த பரிந்துரைகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வீரப்ப மொய்லி செயல்படுகிறார்; இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணகான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்' என்று கூறினார்.
மொய்லிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அலுவல் குறிப்புகள், பெட்ரோலியத் துறை கொள்கை நிர்ணயக் குறிப்புகள் அடங்கியதாகக் கூறப்படும் சில ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகக் குருதாஸ்தாஸ் குப்தா கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
"பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் குழு, ஒரு எம்எம்பிடியு (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் என்பது பத்து லட்சம் கன அடி எரிவாயு யூனிட்டுக்கு சமம்) இயற்கை எரிவாயு விலையை 4.2 அமெரிக்க டாலர்களாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.  ஆனால், அதை முதலாவது ஆண்டில் 8 அமெரிக்க டாலர்கள், இரண்டாவது ஆண்டில் 10 டாலர்கள், மூன்றாஇந்த நிலையில், மொய்லியின் யோசனை ஏற்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கூடுதல் மானியச் சுமை ஏற்படும்; ஆனால், அந்த முடிவால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32,400 கோடி லாபம் கிடைக்கும்.
மொய்லியின் யோசனைக்கு பெட்ரோலியத் துறைச் செயலர், மத்திய மின் துறை, உரத் துறை அமைச்சக உயரதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றை எல்லாம் பொருள்படுத்தாமல் அதிகாரிகள் எழுதிய குறிப்புகளை மூன்று முறை மொய்லி நிராகரித்துள்ளார். மேலும், தனது யோசனையைப் பரிந்துரைக்கும் கோப்பில் கையெழுத்திடும்படி அவர் அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார்.
ஏற்கெனவே, இயற்கை எரிவாயு விலையேற்ற விவகாரத்தில் ஒரு எம்எம்பிடியு எரிவாயுக்கு ரூ. 13.8 அமெரிக்க டாலரை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று ரிலையன்ஸ்  நிறுவனம் பேரம் பேசி வருகிறது.
இந்த நிலையில், மொய்லியின் யோசனை ஏற்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கூடுதல் மானியச் சுமை ஏற்படும்; ஆனால், அந்த முடிவால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32,400 கோடி லாபம் கிடைக்கும்.
இந்த விலை உயர்வை ஐந்து ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் அரசுக்கு ரூ. 1,80,000 கோடி மானியச் சுமையும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,62,000 கோடி லாபமும் கிடைக்கும்.
இந்த அளவுக்கு ஒரு தனியார் நிறுவனம் ஆதாயம் பெற வழிவகைகளை உருவாக்கிக் கொடுக்கும் வீரப்ப மொய்லியின் செயலை "மெகா ஊழல்' எனக் கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்?'' என்று குருதாஸ்தாஸ் குப்தா கூறினார்.

Wednesday, May 22


அழைப்பும் மில்லை !

அலைபேசியில்,அழைக்கவும்மில்லை!!
இருப்பினும் !!!
நமது மாநில செயலரின்!!!!
இல்லத் திருமண விழாவை !!!!!
வாழ்த்துவோம்!!!!!! 
                                                     இரா .த

Tuesday, May 21

தோழர் , P.காமராஜ்  மாவட்ட செயலர், பாண்டிச்சேரி   அவர்களின்  இல்ல  திருமண    விழாவிற்க்கு  நமது வாழ்த்துக்கள் !!!

தோழர் , N.ராமகிருஷ்ணன்,
     மாவட்ட செயலர், கோவை  அவர்களின்  இல்ல  திருமண    விழாவிற்க்கு  நமது வாழ்த்துக்கள் !!!





Wednesday, May 15

சுய பரிசோதனை செய்வோம்! 6வது அங்கீகார தேர்தல் பற்றி!!

தமிழ்நாடு NFTE-BSNL மாநில சங்கத்தின் வெற்றி விழா அண்மையில் கும்பகோணத்தில் 14/05/13 அன்று நடைபெற்றது. விழாவில் RSS-ஐ சேர்ந்த ஒருவர் நம்முடைய சென்னை தொலைபேசி மாநில சங்கத்தை பற்றி தரக்குறைவாக பேசியதாகவும் தேவையற்ற விமர்சனங்களை கொட்டியதாக அறிந்தோம். இது போன்ற கருத்துக்கள் தமிழ் நாடு தொலைபேசி மாநிலத்தில் பேசப்படுவது மிகவும் வருத்தத்திற்குரியது. பேசிய அந்த குறிப்பிட்ட நபர் 10 வருடத்திற்கு மேலாக சந்நியாசம் பூண்டு சங்கத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்து விட்டு “திடீரென்று” மாநில செயற் குழு உறுப்பினர் ஆனவர்.  கடந்த காலத்தில் நடந்த எந்த தொழிற்சங்க விசயங்கள் பற்றியும் தெரியாத அந்த நபர் சென்னை மாநிலத்தை பற்றி விமர்சிப்பதற்கு முன் தங்களுடைய மாநிலத்தில் நடைபெறும் சிக்கல்களை சரி பண்ணுவது  தலயாயக் கடமை என்று நாங்கள் மதிப்பு வைத்துள்ள   தமிழக தோழர்களை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறோம்.
நான்கு மெட்ரோ நகரங்களில் கடந்த 15 வருடங்களாக சென்னையில் மட்டும்தான் NFTE-BSNL கொடி உயரப்பறந்து கொண்டிருக்கிறது. கடந்த எட்டு வருடங்களாக அங்கீகாரம் இல்லாத சூழ்நிலையிலும் சென்னையில் NFTE-BSNL 36.2% சதவிகித ஓட்டுக்களை பெற்றது. அதே சமயத்தில் அகில இந்திய அளவில் NFTE-BSNL 30.2%  மட்டுமேஓட்டுகளை பெற்று உள்ளது, இதைபற்றி எதுவுமே தெரியாமல் சென்னைதொலைபேசிச் சங்கத்தை விமர்சித்து திருவாளர் “குருநாதர்” பேசுவது சரியா?.  அதுவும் தமிழ் மாநில செயலரும் .அகில இந்திய செயலரும் மேடையிலிருக்கும்போது நாம் அகில இந்திய அளவில் 5% ஓட்டுக்கள் குறைத்து பெற்றிருக்கின்ற சூழிநிலையில் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.? அதனை தமிழ் மாநிலச் செயலரும் பொதுச்செயலரும் ரசித்து கேட்பது (அ)நியாயமா?
அகில இந்திய அளவில் BSNLEU எந்தவிதசாதனைகளும்  செய்யாமல் 2% ஓட்டு அதிகமாக வாங்கியுள்ளது, அதே சமயத்தில் NFTE-BSNL 5% ஓட்டுக்கள் குறைத்து பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா? இது நமக்கு 6வது அங்கீகார தேர்தலில் கிடைத்த அதிர்ச்சியான செய்தி இல்லையா? இந்த பின்னடைவு எப்படி ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? தமிழக மாநில சங்கம் பல் வேறு தலைவர்களாலும் எந்த வித பிரதி பலனும் எதிர்பார்க்காத தோழர்களாலும் ஒவ்வொரு கல்லாக சேர்த்துக்கட்டி வடிவமைக்க பட்டதாகும். மோசமான சூழ்நிலையில் கூட தமிழ் மாநிலம் 50% குறைந்து இதுவரை ஓட்டு வாங்கியதில்லை. ஆதலால் நீங்கள் முதலில் தமிழ் மாநிலத்தில் ஏன் ஓட்டுக்கள் குறைந்தது என்பதை அலசி ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். அதன் பிறகே ஓட்டுக்கள் குறைந்தது சென்னை தொலை பேசியிலா அல்லது அகில இந்திய சங்கத்திலா என்று பேசவேண்டும்!. விமர்சனம் செய்ய வேண்டும்!!.
  ஆனால் சென்னையில் NFTE-BSNL க்கும் BSNLEUக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம் 1% மட்டுமே. என்பதை இங்கு வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.
          இறுதியாக நாங்கள் மேன்மைபொருந்திய தலைவர்களுக்கு ஒன்றைசொல்லி கொள்ள விரும்புகிறோம். அங்கீகார தேர்தலுக்கு பிறகு சென்னையில் மாற்று சங்கங்களை சேர்ந்தவர்கள் அச்சங்கத்தை விட்டுவிட்டு நம்மிடம் இணைந்த வண்ணம் உள்ளனர். புது கிளைகள் தொடங்கிய வண்ணம் உள்ளது. சென்னை தொலை பேசி மாநிலம் NFTE-BSNL அருமைத் தோழர் மதிவாணன் தலைமையில் பீடு நடை போட்டு முன்னே போய் கொண்டு இருப்பது உண்மை.


வெளியீடு: சென்னை தொலைபேசி மாநிலம்.....

அபிமன்யு அவர்களே பதில் சொல்லத் தயாரா?

                              The Doubting Thomas

14-06-12  அன்று எங்கள் மாநிலச் செயலர் தோழர்.C.K.மதிவாணன் 78.2% கிராக்கிப்படி இணைப்பிற்கு ஒப்புதல் தர COMPETENT AUTHORITY  யார் என்பது சரியாக தெரியாமலேயே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்று கூறியபோது மதிவாணனை    “சந்தேகப்படும் தாமஸ்”   என்று உங்கள் வெப்சைட்டில் எழுதியது ஞாபகம் இருக்கிறதா?

The agreement says that the 78.2% IDA fixation will be implemented after approval by the competent authority. Here, the competent authority means the Board of Directors. Those who have the minimum knowledge about the functioning of BSNL know that such a major demand cannot be implemented without the approval of the Board of Directors. Even the CMD does not have the power to implement the agreement, before it is approved by the Board. If com. C.K.Mathivanan, the great Deputy General  Secretary of NFTE BSNL does not know this, then let us feel sorry for him. .

 Here, the competent authority means the Board of Directors” இது கூட மதிவாணனுக்கு தெரியவில்லை என்று எழுதினீர்கள்.

0n 12-05-13 in BSNLEU Web site-ல்   On 78.2% IDA merger. பற்றி  எழுதும்போது ”

 BSNL Management sought the approval of the DoT for the implementation of 78.2% IDA merger. It is a fact that the agreement cannot be implemented by BSNL Management, without the approval of DoT, It is a fact that the agreement cannot be implemented by BSNL Management, without the approval of DoT, since pension for BSNL employees is being paid by the govt.”

 அதாவது   COMPETENT AUTHORITY  என்பது DOT தான் என்று எழுதியுள்ளீர்களே?

                                அன்று வந்ததும் அதே நிலா !

குறைந்தபட்சம்
“ மதிவாணன் கூறியதுதான் சரி, நான் தவறாகக் கூறிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்க தயாரா?

அந்த நேர்மை உங்களுக்கு உண்டா?

திரு அபிமன்யு அவர்களே உங்கள் பதில்?  

Sunday, May 12

ஒரு கை ஓசை !

தமிழகத்தில் NFTE-BSNL வெற்றி பெற  அனைவரும் இரவு பகல் பாராது உழைத்தோம் ! 
இந்த வெற்றிக்கு தேர்தல் கால உழைப்பு மட்டுமல்ல... பல ஆண்டுகளாக நமது தோழர்களின் சோர்வறியா உழைப்புதான் முக்கிய காரணம்...
ஆனால் தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகமெங்கும் பொய்ப் பிரச்சாரம் துவங்கி விட்டது .
கோவையில் தேர்தல் முடிவு வெளியான மறு வினாடியே ராபர்ட் மாவட்டச் செயலரை பகிரங்கமாக தாக்கி பேசுகிறார்.
இந்த வெற்றி " despite betrayal " என்று வர்ணிக்கப்படுகிறது.
கட்சிக்காரர்கள் NFTEக்கு ஓட்டுப்போடவில்லை ,தமிழகமெங்கும் NFTEக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சம்மேளனச் செயலரே NFTE-BSNLக்கு ஓட்டு போடவில்லை என்றெல்லாம் நாக்கூசாமல் அபாண்டமான பொய்ப் பிரசாரம் கட்டவிழ்த்துவிடப் படுகிறது.
ஒலிக்கதிரில் தனி அணி ஆவர்த்தனம் என்று மாநிலச் செயலரே பிரிவினையை துவக்கி வைக்கிறார்.
இது ஒரு சிலரின் திட்டமிட்ட சதியாகவே (diabolical plan) தெரிகிறது.

NFTE-BSNL அங்கீகாரம் பெற 8 ஆண்டுகளாக பலத்த எதிர்ப்புக் கிடையே கோர்ட், வழக்கு, மேல்முறையீடு  என்று, கடும் முயற்சி மேற்கொண்ட, தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்  மேற்கொண்ட அகில இந்திய துணைப் பொதுச் செயலருக்கு அழைப்பு இல்லை......
   ஆனால்,  கஷ்டமான காலத்தில் சங்கத்திலிருந்தே ஒதுங்கி நின்றவர்களுக்கும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் தொடர்ந்து ராஜ மரியாதை.....
இது போன்ற  ஒருதலைபட்சமான செயல்பாடுகள் ஏற்புடையதன்று......
 பணி ஓய்வு பெற்றவர்களைவிட தற்போது இயக்கத்தில் பணியாற்றுவோரை அழையுங்கள், அதுதான் பொருத்தமாக  இருக்கும், ஆகவே நான் வர இயலாது  என்று சேலம் கூட்டத்தின் போதே, ஆலோசனை கூறிய  மூத்த தோழர் மாலி அவர்களின் பெயர் அவர் அனுமதி இல்லாமலேயே அனைத்து வால் போஸ்டர்களிலும் போடுவதன் காரணம், தான் மிகவும் நடுநிலை என்று காட்டிக் கொள்ள மட்டுமே ! ஆனால் அது நாகரீகமான செயல் அன்று.
 அனைவரையும் அரவணைக்கும் போக்கு வரும் வரை  தாங்கள்  கலந்து கொள்ள இயலாது  என்று தெரிவித்த தோழர்கள் சம்மேளனச் ஜெயராமன், மாநிலப் பொருளாளர் அசோக ராஜன் ஆகியோரின் பெயர்களையும்  வால் போஸ்டரில் போடுவதும் அதே போலத்தான்.
 தனது அணிக் கூட்டத்தில், சேலத்தில் கூட்டம், கும்பகோணத்தில் கூட்டம் என்று முடிவெடுத்து விட்டு அதை மற்றவர்கள் மீது திணிப்பதும் ஏற்புடையதல்ல.
இனியாவது வெப் சைட்டில் அழைப்பு விடுவதை விடுத்து அனைவரையும் அழைத்து பேசி ஒருமுகப்படுத்தும் வேலையில் மாநிலச் செயலர் ஈடுபட வேண்டும் என்பதே 9 மாநில சங்க நிர்வாகிகள், 8 மாவட்டச் செயலர்களின் கோரிக்கை.
இதையே மத்திய சங்க பொதுச் செயலருக்கும் தெரிவித்து உள்ளோம்.   
* வாய்ப்பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்பது கூடாது.
            ..........பாரதியார்                                                                                  
               செய்தி..கோவைவலைத்தளம்                                   
                              

Friday, May 10

TTA தேர்வு முடிவுகள் !!

 PONDICHERRY SSA

    Subramani A.D 200401452 Sr TOA(G) OC
    Pasupathy S 199408439 TM OC
    Vltavareqhavan S 200401478 Sr TOA(G) OC 
வெற்றி பெற்ற தோழர்களை புதுவை  NFTE(BSNL)           வாழ்த்துகிறது !!

Wednesday, May 8

கோலி சங்க தமிழக ஏஜண்டுக்கு கோபம் ஏன் ?


NFTE மாநில பொருளர் ,மாநில செயலருக்கு தனது கருத்தை தெரிவித்தால் 
கோலி சங்கத்தின் தமிழக ஏஜண்டாக கடந்த நான்கு ஆண்டாக செயல்பட்டுவரும் பாண்டி காமராஜ் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் !

கோலியின் மீதுள்ள விசுவாசம் காரணமாக தனது குழுவை சார்ந்தவர்களை கோலி சங்கத்திற்க்கு வாக்களிக்க செய்து  அதன்மூலம்ஆதாயம் தேடும் காமராஜ்க்கு மாநில பொருளரின் கருத்தைப் பற்றி விமர்சனம் போட அருகதை இல்லை !!  

Saturday, May 4

 "எந்த அமைப்பிலும் பெரும்பான்மை முடிவுகளை சிறுபான்மை வீ ட்டோ செய்வது ஏற்கப்படுவதில்லை "

என்று ஒலிக்கதிரில் மூன்றாம் பக்கத்தில் எழுதி ஒரு நல்ல அறிவுபூர்வமான விவாதத்தை மாநிலச் செயலர் துவக்கி உள்ளார்.

  வீட்டோ பவரே சரியானதுதானா என்று ஒரு ஆழமான கருத்து நிலவுகிறது.

குறிப்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சைனா  ஆகிய  5 நாடுகள் மட்டுமே வீட்டோ பவரை பெற்றுள்ளன.

அனைத்து உறுப்பினர் நாடுகளும் ஆகப்பெரும்பான்மையோடு முடிவெடுத்தாலும் அந்த 5 நாடுகளில் ஏதோ ஒரு நாடு கூட தனது வீட்டோ பவரை பயன்படுத்தி அந்த முடிவை தள்ளுபடி செய்துவிட முடியும்.

  அமெரிக்க நாட்டில்  அந்த நாட்டின்  மக்களவை முடிவைக்கூட  ஜானாதிபதி வீ ட்டோ செய்துவிட முடியும்.

பல நாடுகளில் மெஜாரிட்டி இனம் மைனாரிட்டிகளை ஒடுக்க முற்படும்போது தான் தீவிரவாதம் தலைதூக்குகிறது எனபது விஞ்ஞான ரீதியான காரனமாகும்.

 நிற்க.

நம்மையெல்லாம் வர்க்க உணர்வுமிக்க போராளியாய் உருவாக்கி, ஒப்புயர்வில்லா NFTE-BSNL இயக்கத்தின் முன்னணி படைத் தளபதிகளாக அடையாளம் காட்டிய அமைப்பின் ஆகப் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படாமல் தனது சுய வீட்டோ பவரை பயன்படுத்தி  Free Lance என்று விடுவித்துக் கொள்வது, தான் மேற்கோள் காட்டுகின்ற வரைமுறைக்கு பொறுத்தமானதுதானா என்பதை மாநிலச் செயலரின்  மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம். 

      மதுரை மாநாட்டிற்கு முன்னும் பின்னும்  தனது அணிக்கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது ஆரோக்கியமான வளர்ச்சியாக கருத முடியாது.

 குறிப்பாக நமது ஆதர்ஸ நாயகனாம் தோழர் ஜெகன் அவர்களின் வழிகாட்டுதல், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில்,பணி ஓய்வு பெற்ற எந்த தோழரையும் மாநில சங்கத்திற்கு தேர்ந்தெடுப்பதில்லை என்பதாகும்.

இதற்கு மாறாகவும், மாநில மாநாட்டு முடிவுக்கு எதிராகவும் பணி ஓய்வு பெற்றவர்களும் மற்ற சிலரும் நிரந்தர அழைப்பாளர்களாக  நியமிக்கப் பட்டது முறையற்றது.

இதனை எதிர்த்து 18 மாநில செயற்குழு உறுப்பினர்கள் கடிதம் கொடுத்தும் ஒரு acknowledgement  செய்யக்கூட  மனமில்லை மாநில சங்கத்திற்கு.

   சென்னை மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கோ, சேலம் கூட்டத்திற்கோ முறையான அழைப்பில்லை.

தொலைபேசியில் அழைக்கக் கூட அவருக்கு நேரமில்லையா, மனமில்லையா என்று தெரியவில்லை.

 சேலம் கூட்ட வால்போஸ்டர்  ராமகிருஷ்ணன் / ராபர்ட், மாவட்டச் செயலர் என்று அனுப்பப்பட்டது. 

  டெல்லி Chqவிலிருந்து  வரும் கடிதம் பட்டாபி ராமன்/சுப்பராயன், மாநிலச் செயலர்  என்று வந்தால் எப்படிபட்ட உணர்வு மாநில செயலருக்கு வரும் என்பதையும் அவரது முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
 
 அதேபோல மாநில சங்க நிர்வாகிகளின் சுற்றுப்பயணத்  திட்டமும் எந்த கலந்தாலோசனையுமின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டு அதை மாநில சங்க நிர்வாகிகள் வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ள வெண்டிய துர்பாக்கிய நிலை.

நமது மாநில சங்க நிர்வாகிகளை முடக்கிடும் திட்டமாக  அது இருந்ததும் ஈரோடு கூட்டத்திற்கான காரணமாகும்.

 இவ்வளவு அவமானங்களை  அள்ளித் தெளித்தாலும் மாநிலச் செயலரை போல  free lance  unionist  என்று நம்மால் அறிவிக்க இயலாது.

வாழ்நாள் முழுவதும் நமது இயக்கம் NFTE தான் என்று வரித்துக் கொண்டவர்கள் நாம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நமது  பகுதிகளில் நமது எதிரிகளின் சொல்லடி, கல்லடி என்று எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமர் புரிந்து NFTE பதாகையை உயர்த்திப் பிடிப்பவர்கள்  நாம்.

அதனால்தான் ஈரோட்டில் கூடி தமிழகத்தில் NFTEன் வெற்றியை உறுதி செய்ய 15 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  நமது மாநில சங்க நிர்வாகிகளும் சம்மேளனச் செயலரும்  சூறாவளி சுற்றுப்பயணம்  மேற்கொண்டனர்.
 
இதை பாராட்ட வேண்டிய மாநிலச் செயலரோ, அவர்களை ஒலிக்கதிரில்  குறை கூறுவது சற்றும் நியாயமானதன்று.
 
நமது தொழிற்சங்க பேராசான் தோழர் குப்தா அவர்கள், சாதாரண மெஜாரிட்டியே intoxicate ஆகிவிடக் கூடாது என்று வழிகாட்டியுள்ளார்.
ஆனால் மதுரையில்  உருவாக்கப்பட்ட மெஜாரிட்டியோ (inflated majority)  இன்னும் ஜாக்கிரதையாக, நளினமாக  இயக்கத்தை கையாள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். 
                              செய்தி .....கோவை வலைத்தளம் 

Friday, May 3

தெருவில் தலித் விரோதம் - வன்முறை; சிறையில் காந்திய சிந்தனை!!

விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் காந்திய சிந்தனைப் புத்தகங்களைப் படித்து நேரம் போக்குகிறார்.

விழுப்புரம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமதாஸ் சிறையில் நேரம் போக்குவதற்காக காந்திய சிந்தனை புத்தகங்களை படித்து வருகிறாராம். வெளியில் இருக்கும் போது வன்முறை, சிறைக்குச் சென்றால் காந்திய சிந்தனை என்னே ராமதாஸின்  உயர்ந்த கொள்கை.

தங்களது வாழ்கைக்காக தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் தலித் மக்கள் மீது ஜாதிக் கலவரத்தை தூண்டிவிட்டு, தங்களின் ரவுடித்தனத்தை அரங்கேற்றிவரும் பாமகவினரின் வன்முறைகளை காந்தியின் அகிம்சையாகத்தான் ராமதாஸ் பார்க்கிறார் போலும்.

தற்போது திருச்சியில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மேலும் சிறையில் இருந்த மரங்களும் வெட்டப்பட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், மின்சாரம் வேறு அவ்வப்போது தடைப்படுவதால் மின்விசிறி பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் ராமதாஸ் கூறுகிறாராம்.

தர்மபுரி, மரக்காணம் தலித் மக்களின் வீடுகள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு தீயிட்டு எரித்தது அவருக்கு குளு குளுவென்று இருந்ததால், திருச்சி வெயில் ராமதாஸுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

மது விலக்கு, மது ஒழிப்பு என்று அய்யாவும், சின்ன அய்யாவும் முச்சூடும் முழங்குவார்கள். ஆனால் இவர்கள் நடத்திய மது ஒழிப்பு மாநாடுகளிலேயே ஆண், பெண் பேதமில்லாமல் சரக்கடித்த வரலாறுகள் உண்டு. இவ்வளவு ஏன் கடைசியாக நடந்த வன்னியர் பெருவிழாவில் சின்ன அய்யா முதல்வரானால் முதல் கையெழுத்து மது ஒழிப்புக்குத்தானாம்.

ஆனால் மரக்காணம் சம்பவத்தின் போது ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை இவ்வாறு பதிவு செய்தது "நல்ல குடிபோதையில் இருந்த ஒரு கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி தலித் குடிசைகளை எரித்தது". இதுமட்டுமல்ல இளைஞர் பெருவிழாவின் போது மரக்காணம், மாமல்லபுரம், புதுவை ஆகிய இடங்களில் மது வழக்கத்தை விட அமோகமாக விற்பனையாகியுள்ளது. ஆக மேடையில் மதுவிலக்கு என்ற முழக்கம், தெருவில் குடிபோதையில் வெறியாட்டம். இதுதான் இவர்கள் கொள்கை.

ராமதாஸ் கைது காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் தற்போது பாமகவினரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புதுவையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது நிருத்தி வைக்கப்பட்டுள்ளது பயணிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

காந்தியத்திற்கு ஒரு புது விளக்கமே நமக்கு கிடைத்துவிட்டது போங்கள். வெளியில் சுதந்திரமாக உலாவும் போது அடுத்தவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும், நசுக்கும் வன்முறையை பிரயோகிக்கலாம், சிறையில் அடைக்கப்பட்டு தன் சுதந்திரம் இழக்கப்படும் நிலையில் காந்தியம் ஓதலாம். இதுதான் ராமதாஸ் அரசியலின் நகைமுரண்!