பூமியை போன்ற ஒத்த தன்மைகள் கொண்ட புதிய கிரகம் ஒன்றை கலிப்போர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் இருந்து மிக அருகில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரம் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர்.
அந்த ஆராய்ச்சியில் ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 2 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் பூமியில் இருந்து 123 திரில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகம் பூமியை போலவே ஒத்த தன்மைகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள அந்த கிரகத்துக்கு ஜிலிஸி 581ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment