உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தேதி தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
உத்தரபிரதேசம்,பஞ்சாப்,மணிப்பூர்,கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவி காலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது.
இந்நிலையில் மேற்கூறிய 5 மாநில தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
அதன்படி மணிப்பூரில் ஜனவரி 28 ஆம் தேதியும்,பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஜனவரி 30 ஆம் தேதியும்,கோவாவில் மார்ச் 3 ஆம் தேதியன்றும் தேர்தல் நடைபெறுகிறது.
அதே சமயம் உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 4,8,11,15,19,23, மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment