நடுவண் அரசு கொண்டு வந்துள்ள தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வரைவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா போன்ற கூட்டாட்சி நடக்கும் நாட்டில், மாநிலங்களுக்கே மக்களுடன் நெருங்கிய மற்றும் மறைமுக தொடர்புகள் உள்ளன.
எனவே உணவு பாதுகாப்பு சட்ட முன் வரைவு போன்ற மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கே அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ள முதல்வர், குழப்பங்கள் நிறைந்துள்ள உணவு பாதுகாப்பு சட்ட முன்வரைவில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக மாநிலங்கள் மீது திணிக்கும் போது, ரூபாய் 1800 கோடி அளவிற்கு கூடுதல் நிதி நெருக்கடியை மாநிலங்கள் சந்திக்க நேரிடும் என முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment