WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, May 9


WRONG RULING BY TDSAT:

 We are shocked to note recent wrong ruling by TDSAT( Telecom Dispute Settlement Apelate Tribunal) on the issue of sharing of 3G spectrum by some private telecom companies out of their licence areas.

  தவறான சட்ட விளக்கம் !

சமீபத்தில் தொலைத் தொடர்பு மேல் முறையீட்டு ஆணையம் 3G லைசன்ஸ் பயன்பாடு பற்றி கொடுத்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

   ராசா அமைச்சராக இருந்தபோது 3G ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. அப்போது அகில இந்திய அளவிலான 3G லைசன்ஸை BSNLக்கு முன்னுரிமையாக  தருகிறோம் என்ற ஹோதாவில் BSNL வைத்திருந்த 
சுமார் 14,000 கோடி ரூபாயை அரசு தன்வயப்படுத்திக் கொண்டது. 
3G வேண்டும் என்று மக்கள் கேட்காத மணிப்பூர், மிசோரம் போன்ற 
வனாந்திர பகுதிகளுக்கான லைசன்ஸைக்கூட BSNL வாங்க வேண்டும் நிர்பந்திக்கப்பட்டது.அதுதான் BSNLன் நிதி நிலைமை மோசமாவதற்கான துவக்கமாக அமைந்தது.

   ஆனால் தனியார் கம்பெனிகள் தங்களுக்கு வேண்டிய, மக்கள் 
3G சேவையை கோரும் பகுதிக்கு மட்டும் லைசன்ஸ் பெற அனுமதிக் கப்பட்டனர். இந்த சலுகை காரணமாக தனியார் கம்பெனிகள் தங்களுக்கு வேண்டிய பகுதிகளுக்கு மட்டும் லைசன்ஸ் பெற்றனர்.அதன் காரனமாக அவர்களுக்கு முதலீடு குறைவு. அந்த முதலீடும் அரசு  ங்கிகளிடமிருந்து   கடனாக பெறப்பட்டன.

இதன் பிறகு ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலர் போன்ற அந்த தனியார் கம்பெனிகள் தங்களுக்குள் ரகசியமாக ஒரு உடன்பாட்டை உருவாக்கி கள்ளத்தனமாக இந்தியா முழுவதும் தொடர்பு ஏற்படுத்தும் இணைப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டன. 

தொலைத்தொடர்புத் துறை இந்த ரகசிய உறவை கண்டுபிடித்து, அதை செய்யக் கூடாது என்று தடையாணை பிறப்பித்தது. மேலும்  லைசன்ஸ் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி அதற்கு தண்டணையாக ரூ.12,000/- கோடியை கட்ட வேண்டும் என்று உத்திரவிட்டது.

அந்த  தனியார் கம்பெனிகள் இந்த உத்திரவை ஏற்காமல் டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.  டெல்லி உயர்நீதி மன்றம் DOTன் முடிவை ஆமோதித்தது.

 அதை ஏற்காத அந்த தனியார் நிறுவனங்கள்  சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

சுப்ரீம் கோர்ட் இந்த முறையீட்டை, சட்டப்படி தொலைத்தொடர்பு மேல் முறையீட்டு ஆணையம் தான் விசாரிக்க  வேண்டும் என்று அந்த அமைப்பிற்கு திருப்பியது.

தற்போது TDSAT என்றழைக்கப்படும் அந்த அமைப்பு, DOTன் உத்திரவை ரத்து செய்துள்ளதோடு தண்டனை கட்டணம் ரூ.12,000 கோடி கட்ட வேண்டும்  என்பதை ரத்து செய்துள்ளது.

.  இந்த தீர்ப்பின் மூலம் நீதி   வழிதவறிப்போக  வேறு சில புற காரணங்கள் உள்ளதாக நாம் சந்தேகிக்கிறோம். இந்தியா முழுமையும் 3G சேவை வழங்க BSNL  மிக அதிகமான லைசன்ஸ்
கட்டணம் கட்ட வேண்டும் என்று கறாராக பல ஆயிரம் கோடிகளை வசூலித்து விட்டு,
அதே சமயம் மற்ற தனியார் கம்பெனிகள் மட்டும் தாங்கள் பெற்ற லைசன்ஸ் ஏரியாவை விடுத்து அனைத்து பகுதிகளுக்கு அந்த சேவையை தரலாம் என்று தீர்ப்பு தருவது எப்படி நியாயமாக இருக்க முடியும் ?

   நமது நாட்டில் இரு சக்கர வாகனம் ஓட்ட லைசன்ஸ் பெற்றவரை, பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை ஒட்ட னுமதிப்பதில்லை.அதுபோல லைசன்ஸ் பெறாத பகுதிகளில் மற்ற தனியார் கம்பெனிகளை 3G சேவை தர அனுமதிப்பது நியாயமன்று. இந்த முறையற்ற தீர்ப்பை பெற, திரைக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை யாரறிவார் ? துரதிர்ஷ்டவசமாக நமது தொழிற்சங்க தலைமைகள் இது பற்றி அமைதி காக்கின்றன. 

தொழிற்சங்க  தலைமைகள் விழித்து எழுந்து, BSNL ஐ பாதிக்கும் இந்த அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டும்.   

  இந்த அநியாயமான தீர்ப்பை எதிர்த்து DOTயும் சுப்ரீம் கோர்ட்டில்  மேல் முறையீடு செய்யும் என்று நம்புகிறோம். BSNL நிர்வாகம் அந்த மேல் முறையீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக் கூற வேண்டும். தேவையென்றால் தனியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலை நாட்டவேண்டும்

                                                 C.K.மதிவாணன்
                                      துணைப் பொதுச் செயலர்
                                             NFTE-BSNL

No comments:

Post a Comment