'இலங்கை ராணுவம், தமிழர்களை விரட்டி பிடித்து 'என்கவுன்டர்' செய்து
வருவதால், இனி அங்கு வாழ முடியாது' என, தனுஷ்கோடிக்கு தப்பி வந்த அகதிகள்
கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம், முல்லைதீவை சேர்ந்த தயாபரராஜ், 34, மனைவி உதயகலா, 32, மகன் டியோரோன், 9, மகள்கள் டிலானி, 6, டில்சியா, 2, மற்றும் தவேந்திரன், 35, ஒரு படகிலும், கணேஷ் சுதாகர், 33, மனைவி ராமக்கா, 30, மகள் நிலக்சனா, 12,
மகன் விதுரன், 5, ஆகியோர் மற்றொரு படகில் ஏறி, தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர்.
இதுகுறித்து உதயகலா கூறியதாவது: போர் நிறுத்தத்திற்கு பின், முல்லைதீவு ராணுவ முகாமில் எங்களை அடைத்தனர். நீண்டநாள் கழித்து விடுவித்தனர். வேலை தேடி பல ஊர்களுக்கு சென்றோம். இறுதியாக கண்டியில் தங்கினோம். அங்கும் இலங்கை ராணுவத்தினர், எங்களை இருக்க விடவில்லை.விடுதலைபுலிகள் போர்வையில் தமிழர்கள் ஊடுருவி இருப்பதாக கூறிய ராணுவத்தினர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்களை தேடி பிடித்து கொலை செய்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், ஆயிரத்துக்கும் மேலான தமிழர்களை கைது செய்து வெலிக்கடை சிறையில் அடைத்துள்ளனர்.கடந்த 1985ல், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் போன்று, தற்போது ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலரை காணவில்லை. இனி தமிழர்கள், அங்கு வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் படிப்பிற்காக, இலங்கை ராணுவத்திற்கு தெரியாமல், அகதியாக
தமிழகத்திற்கு வந்துள்ளோம். இந்திய அரசு, எங்களை சிறையில் அடைக்காமல், முகாமில் தங்க வைக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கூறினார்.
தவேந்திரன் கூறியதாவது: இலங்கையில் நடந்த மாகாண தேர்தலுக்கு பின், ராணுவம், உளவுத்துறை இணைந்து நிம்மதியாக வாழும் தமிழர்களை விரட்டி பிடித்து 'என்கவுன்டர்' செய்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள், இளம்பெண்கள் வீடுகளில் தங்க முடியாமல்,
காடுகளில் தலைமறைவாக வாழ்கின்றனர். என் உயிரை காப்பாற்ற, மனைவி குழந்தையை வவுனியாவில் விட்டுவிட்டு, தமிழகம் வந்துள்ளேன். இலங்கை அரசின் கெடுபிடிக்கு பயந்து, 5000 தமிழர்கள் அகதிகளாக, தமிழகத்திற்கு வர காத்திருக்கின்றனர், என, வேதனையுடன் தெரிவித்தார்.
இலங்கை அகதிகள் சிறையில் அடைப்பு: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகள், பத்து பேர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தில் தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment