WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, May 13

தேர்தல் சோதனை :நாடு முழுவதும் ரூ.313 கோடி பறிமுதல்.....!


லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்முதல் (மார்ச்-5) கடைசிகட்ட ஓட்டபதிவு நடந்த நேற்று (மே 12) வரை கணக்கில் வராத பணம் ரூ.313 கோடி தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2009 லோக்சபா தேர்தலில் நடத்திய சோதனை வேட்டையில் ரூ.190 கோடி சிக்கியது.தற்போது ரூ.123 கோடி கூடுதலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கையில், தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருந்தது. நாடு முழுவதும் 20 ஆயிரம் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நடத்திய சோதனையில், நாடு முழுவதும் ரூ.313 கோடியே 31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment