WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, May 20

புதிய அதிவேக அன்லிமிடெட் பிராட்பேண்ட் சேவை: பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது !!



மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் கூடிய புதிய அகன்ற அலைவரிசை இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைபேசியுடன் கூடிய சேவையில், அன்லிமிடெட் வசதியுடன், அகன்ற அலைவரிசை சேவைகளை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முறையே ரூபாய் 1,455 (20 ஜிபி வரை நொடிக்கு 2 எம்பி வேகமும், அதன்பிறகு 1 எம்பி வேகம்), ரூபாய் 2,799 (30 ஜிபி வரை 4 எம்பி வேகம் அதன்பிறகு 2 எம்பி வேகம்) மாத வாடகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாத வாடகையை ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுக்கு மொத்தமாக செலுத்துபவர்களுக்கு சிறப்புச்சலுகைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.
. மேலும் 250 இலவச அழைப்புகளும் உண்டு. தொலைபேசி இணைப்பு ஏற்கனவே இணைப்பு வைத்திருப்பவர்கள் மாதம் ரூபாய் 1,275 வாடகையில் இணைப்பு பெற்று பிராண்ட் பேண்ட் சேவையை பெறலாம். பிஎஸ்என்எல் பொது தொலைபேசிகளில் ஒரு அழைப்பு நேரம் 60 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment