WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, May 21

எம்.பி.,க்களுக்கு ரூ.50,000 சம்பளம்: பார்லி., கூட்டத் தொடர் காலங்களில் தினப்படியாக ரூ.2000.....

புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது. இதுதவிர பார்லி., கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் அவர்கள் கையெழுத்திட்டு செல்வதற்கு தினப்படியாக ரூ.2000 வழங்கப்படுகிறது. மேலும் தொகுதி பணிகளுக்கான நிதியாக ஒவ்வொரு மாதமும் ரூ.45,000 ஒதுக்கப்படுகிறது. மேலும் கட்டணம் இல்லாத வீடு, விமான போக்குவரத்து, ரயில் பயணம், 3 லேண்ட்லைன் இஐணப்புக்கள், 2 மொபைல் போன்கள், ஆண்டுக்கு 1.5 லட்சம் இலவச தொலைப்பேசி அழைப்புக்கள், எம்.பி.,க்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்றவைகள் வாங்குவதற்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment