தயாநிதி மாறனின் மீது CBI வழக்கு !!
ஒரு தனி நபரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இல்லை !
ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !!!
சென்னை கோவிந்த ராஜனின் உளறல்.......
தயாநிதி மாறனின் 323 ISDN முறைகேடு பற்றி CBI வழக்கு பதிவு செய்தவுடன் சென்னை BSNLEU மாநிலச் செயலர் கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து தனக்கு மட்டுமல்ல, அனைத்து சங்கங்களுக்கும் அந்த ஊழல் வெளியானதில் பங்கு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது கண்டு குபீர் என்று சிரிப்புதான் வந்தது.
முறையற்ற வகையில் கூட்டணி அமைத்து அங்கீகாரம் பெற,
2004ல் நமக்கு வரவேண்டிய, நிர்வாகம் தர ஒப்புக்கொண்ட அலவன்ஸ்களை தடுத்து நிறுத்திட, தயாநிதி மாறன் காலில் விழத் துவங்கியதிலிருந்து இன்று வரை BSNLEU சங்கத்தார், ஒரு வார்த்தை யாவது மாறனை எதிர்த்து எழுதியோ பேசியோ நாம் கண்டதில்லை கேட்டதில்லை.
சென்னையில் நடந்த முறைகேட்டை எதிர்த்து போராடினார்களாம் !
இது பற்றி எந்த தகவலும் எந்த பத்திரிக்கையிலோ ஏன் அவர்கள் வெப்சைட்டிலோ கூட வரவில்லையே !!
ரகசியமாக இருட்டறையில் போராடினார்களோ என்னவோ !!
போகிற போக்கில் 2G ஊழலை வேறு எதிர்த்து இவர்கள் கடுமையாக போராடினார்களாம் !
"தோழர் மதிவாணன் தவறாக பிரச்சாரம் செய்கிறார்..... 2G பிரச்னையில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல....... 3G ஸ்பெக்ட்ரத்தை மிக உயர்ந்த அநியாய விலையில் BSNL தலையில் கட்டிய அமைச்சர் ராசாவின் செயல் பாராட்டுதலுக்குரியது " என்று கடிதம் கொடுத்து அதை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டதை அவ்வளவு
எளிதில் மறக்க முடியாமா !
நம்பூதிரி BSNLEU தலைவர் அல்ல என்று கோவிந்த ராஜன் கழுவுகிறாரா !
வேலைக்கு ஒருவர், மாலைக்கு ஒருவர் என்பது போல
சொஸைட்டி ஊழலை எதிர்த்ததிலும், நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்து தருவதிலும் தங்களுக்கு பங்கு இருப்பதாக சென்ற வாரம் புருடா விட்டார் சென்னை கோவிந்த ராஜன்.....
இந்த வாரம் தயாநிதி மாறன் ஊழலை வெளிக்கொணர்ந்ததில் தனக்கும் பங்கு உள்ளதாக அறிக்கை வெளியிடுகிறார்.....
இனி கொஞ்ச நாட்கள் கழித்து அடுக்குமாடி கட்டி கொடுக்க
கேட்டதே நாங்கள்தான் என்று அறிக்கை வெளியிட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை......
No comments:
Post a Comment