WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, October 19

BSNL டைரக்டர் (மனித வளம்) திரு. A.N.ராய்,
சீனியர் அதிகாரிகளுடன் CHQ தலைவர்கள் சந்திப்பு !

18.10.2013 அன்று முற்பகலில் டெல்லியில் நமது அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர்,இஸ்லாம் அகமது, அகில இந்திய சங்க துனை பொதுச் செயலர் தோழர் C.K. மதிவாணன் ஆகியோர்
திரு.A.N. ராய், டைரக்டர் (HR),மற்றும் திரு அகர்வால்.சீனியர் GM (Per), திரு.R.K.கோயல் Sr.GM (Estt), திரு சதீஷ் வாதா, DGM (SR)ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கீழ்க்கண்ட ஊழியர்களின் பிரச்னைகளை விவாதித்தனர்.

1. தீபாவளிக்கு முன்பாக குறைந்தபட்ச போனஸ் வழங்கவேண்டும்
என்று வலியுறுத்தினர்.

2. தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் :

புதியதாக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டி ஊழியர் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும்.

3. கருணைப் பணி : இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட சில விளக்கங்கள்
இறந்த ஊழியர் குடும்பத்திற்கு பாதகமாக உள்ளது. ஆகவே அவை
மாற்றப்பட வேண்டும்.

4. சென்னை TSM, கேசுவல் ஊழியர்களின் பிரச்னை சென்னை CAT
மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்க்கப்பட
வேண்டும்

5. கவுன்சில்கள் புதிய BSNL அங்கீகார விதிகளின்படி அமைக்கப்பட
வேண்டும் .

6. ஊழியர் நல குழுக்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வெல்பேர் போர்டுகள் :
இரண்டு அங்கீகாரச் சங்ககளுக்கும் நியமன உறுப்பினர்கள் 1:1 விகிதாசாரத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

கூட்டம் முடியும் போது மீண்டும் தீபாவளித் திருநாளுக்கு முன்பாக போனஸ் வாங்கிட வலியுறுத்தப்பட்டது.

Meeting With Director (HRD) and other Senior Officers:

Today Our CHQ leaders Com.Islam Ahmed, President and Com.C.K.Mathivanan, Dy.GS met Sri..A.N.Rai, Director(HR), BSNL, Sri.Aggarwal, Sr.GM (Per),Sri. R.K.Goyal, Sr.GM
( Estt) Sri.Sathish Wadhwa DGM (SR) separately and discussed the following staff issues.

1.Payment Of Minimum Bonus before Diwali :

Our leaders urged the Management to ensure payment of minimum bonus before Deepawali.

2. Immediate Convening of National Council :

The newly constituted National Council may be convened at the earliest to discuss the pending staff matters.

3. Compassionate appointments: Some clarifications issued by the Management are against the interests of the family of the deceased employees. Hence modifications may be issued.

4. Reinstatement of 27 Casual Mazdoors in Chennai Circle as per the Judgement of the Chennai CAT and Madras High Court.

5. Nominations to Welfare Boards/Sports Councils : The number of nominees from both the Recognised Unions may be increased in the 1:1 ratio.

6.Strict implementation of the BSNL Recognition Rules .
Nominations to the Councils may be accepted strictly as per the new BSNL Recognition Rules

In conclusion our leaders once again pressed for the payment of Bonus before Diwali.

No comments:

Post a Comment