WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, October 2

அவசர சட்டம் வாபஸ்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!!


    எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற வகை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான மசோதாவும் வாபஸ் பெறப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ. க்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

     இந்த உத்தரவின்படி தனது பதவியை இழந்த முதல் காங்கிரஸ் எம்.பி.  ரஷீத் மசூத் ஆவார். திரிபுரா மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் தகுதி இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பதவியிழந்த முதல் எம்.பி. இவர்தான்.

    அடுத்து பதவி இழக்கப் போகிறவர் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இவர் குற்றவாளி என2 தினங்களுக்கு முன் ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட் தீர்ப்பளித்தது. இவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே இவரும் தனது எம்.பி. பதவியை இழக்கிறார்.

     சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதாவது குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் வகையில் மத்திய அரசு இந்த அவசர சட்டத்தை கொண்டு வந்து அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஜனாதிபதி அதில் கையெழுத்திடாமல் 3 மத்திய அமைச்சர்களை அழைத்து அது பற்றி விளக்கம் கேட்டார். மேலும் சட்ட நிபுணர்களையும் அவர் கலந்து ஆலோசித்தார்.

 இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி மன்மோகன்சிங் அரசு கொண்டு வந்த அவசர சட்டம் பற்றி ஒரு பரபரப்பான கருத்தை சொன்னார். அதாவது இந்த அவசர சட்டம் ஒரு முட்டாள்தனமான சட்டம். இதை மத்திய அரசு கொண்டு வந்தது தவறு. இந்த சட்டத்தை கிழித்தெறிய வேண்டும் என்று ராகுல் காந்தி ஒரு கருத்தை சொல்ல அது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 அது மட்டுமல்ல, மன்மோகன்சிங் அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.  நேற்று காலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் பிரதமர் சந்தித்து பேசினார்.

 இதனிடையே நேற்று மாலை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. அப்போது சர்ச்சைக்குரிய அவசர சட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற வகை செய்யும் இந்த அவசர சட்டத்தை வாபஸ் பெறுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 மேலும் இது தொடர்பான மசோதாவையும் திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டதால் இனிமேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழப்பது உறுதி.  முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடிய அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment