பண மெத்தையில் படுத்துப் புரண்ட மார்க்சிஸ்ட் தலைவர் நீக்கம்!
திரிபுரா மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்க்ளில் ஒருவரான சமர் ஆச்சார்ஜி பண மெத்தையில் படுத்து புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரது செயல் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது; சமர் ஆச்சார்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சிக்குள்ளே விமர்சனங்கள் எழுந்தன. மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினரும் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை முகம் வெளிவந்துள்ளது எனக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதனால், கட்சியின் உயர்மட்டக் குழு உடனடியாகக் கூடி இது குறித்து விவாதித்தது. இது தொடர்பாக சமர் ஆச்சார்ஜியை விசாரணை செய்த போது, பண மெத்தையில் படுத்திருப்பதை இவரே கைபேசியில் பதிவு செய்து உள்ளூர் தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பருக்கு அனுப்பிக் கொடுத்தது தெரிந்தது.
எனவே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், சமர் ஆச்சார்ஜி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment