WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, October 10

BSNL டைரக்டர் (மனித வளம்) அவர்களுடன் சந்திப்பு !!!!!


 ஏற்கனவே  திட்டமிட்டபடி BSNL Director ( HR) அவர்களுடன் 8-10-13 அன்று
ஊழியர்கள்  பிரச்னைகள் பற்றி விவாதம் நடைபெற்றது.
SR GM (SR), SR GM (Estt), DGM (SR) ஆகியோரும் பங்கேற்றனர்.
நமது சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் இஸ்லாம், பொதுச் செயலர்
தோழர்  சந்தேஷ்வர் சிங், செயலர் தோழர் ராஜ்மௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்க் கண்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன :
போனஸ் :
டைரக்டர் நமது நிறுவனத்தின் நிதி நிலையை விளக்கினார். சங்கத் தலைவர்கள், போனஸ் தொழிலாளர்களின்  அடிப்படை உரிமை என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்து போனஸை லாபத்தோடு இணைப்பது தவறு என்று வாதிட்டனர்.
போனஸ் தொகை பற்றி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம்
என்றும் வருங்காலத்திற்கான  போனஸ் திட்டத்தை உருவாக்க ஒரு கமிட்டி அமைக்கலாம் என்றும் கருத்து  தெரிவித்தனர்.
நமது சங்கத்தின் உணர்வுகளை  BSNL CMD அவர்களிடம் தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டது.      
Average Entries :
NEPP திட்டத்தில் சராசரி என்ற CR entry காரணமாக பல ஊழியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ளனர். ஆகவே அந்த கண்டிஷனை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதற்கான முன்மொழிவு  மேனேஜ்மென்ட் கமிட்டியின் பரிசீலனைக்கும்
முடிவுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
RM / Group D ஊழியரின் stagnation பிரச்னை :Sr.GM (SR), SR GM (SR),SR GM (EF) ஆகிய மூத்த மூன்று அதிகாரிகளைக் கொண்ட ஒரு  குழு இப்பிரச்னையை விவாதித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டுள்ளது.
( BSNLEU போட்ட)  NEPP, ஊதிய உடன்பாடுகள் காரணமாக சில தடங்கல்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அடிமட்ட ஊழியர்கள் 78.2 சத ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டும், ஒரு பைசா கூட பயன்பெற முடியாமல் அவதிப்படுகின்றனர், ஆகவே ஒரு நியாயமான தீர்வு காணப் படவேண்டும் என்று தெரிவிக்கபட்டது.
1-1-2007 க்கு பிறகு பணிக்கு வந்த ஊழியர்களின் ஊதிய இழப்புப் பிரச்னை :
இளம் JAO / JTO ஊழியர்க்கு இது போன்ற பிரச்னை தீர்க்கப்பட்டது எடுத்துக் காட்டப்பட்டது. ஒரு வாரத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு கானப்படும் என்று உறுதி அளிக்கபட்டது.
BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வுக்கால பலன்கள் பிரச்னை :
  SR GM (Estt) விரைந்து பிரச்னையை தீர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
 TTA Recruitment Rules மாற்றம் :
தேவையான மாற்றங்கள் விரைவில் செய்யப்படும். சங்கங்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்
Regularaisation of Offg JTOs.: அதற்கான பணி நடந்து கொண்டுள்ளது.
JTO தேர்வு முடிவுகள் :
விரைந்து வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
   மற்ற பிரச்னைகள் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.   

   

No comments:

Post a Comment