தோழர்களே, நாம் சில நிகழ்வுகளை பின்னோக்கி பார்க்கிறோம்..
அங்கீகாரத் தேர்தல் முடிந்த கையோடு எம்ப்ளாயீஸ் யூனியன் தனது வலைதளத்தில் 19-04-2013 இவ்வாறு எழுதியது” இந்த அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற NFTE-BSNL சங்கத்தை மனதாரப் பாராட்டுகிறோம். இனி வரும் காலங்களில் முக்கியமான பிரச்சனைகளில் NFTE-BSNL சங்கத்தோடு தோளோடு தோள் நின்று தொழிலாளிக்காக போராடுவோம்”..ஆனால் நடந்தது என்ன? கல்கத்தாவில் நடந்த அவர்களது மத்திய சங்க செயற்குழுவில் 4-9-2013 NFTE-BSNL கலந்து ஆலோசனை செய்யாமலே போராட்ட அறிவிப்பினை தன்னிச்சையாக வெளியிட்டது.
நமது அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர்.சி.கே.மதிவாணன் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுவில் BSNLEU சங்கத்தின் கபட நாடகத்தை வெளிப்படுத்தினார். BSNLEU சங்கம் சேர்ந்து போராடி தொழிலாளி பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டால் அந்த வெற்றி NFTE-BSNL சேர்ந்ததால்தான் கிடைத்தது என்று ஆகிவிடும் என்று BSNLEU நினைக்கிறது அதனாலேயே நம்மோடு குறிப்பாக NEPP BONUS போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒன்றுபட்ட போராட்டத்தை தவிர்க்கிறது. இதனை பட்டவர்த்தனமாக தோழர் மதிவாணன் கூட்டத்தில் வெளியிட்டபோது அதனை அனைவரும் ஆமோதித்தனர். அதேபோல அச்சங்கம் நம்மோடு சேர்ந்து ஒரு வெளிப்படையான உடன்பாட்டை போடவும் பயப்படுகிறது.
டெல்லியில் புதிய அகில இந்திய கவுன்சில் அமைக்கப்பட்ட உடனேயே நம் சங்கத்தின் சார்பாக போனஸ், பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகள், நான்காம்பிரிவு ஊழியர் பிரச்சனைகள் இவைகளை பட்டியலிட்டு நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது.. ஆனால் அவைகளை அப்படியே துளீயும் மாறாமல் தங்களது போராட்ட கோரிக்கைகளாக BSNLEU அறிவித்தது. நாம் நிர்வாகத்தை உடனடி கவுன்சில கூட்ட வற்புறுத்திய போது நிர்வாகம் ஊழியர் தரப்பு செயலர் (BSNLEU) இதுவரை எந்த பிரச்சனைகளையும் கவுன்சிலுக்கு சமர்பிக்கவில்லை என்று தெரிவித்தது.
18-10-2013 BSNLEU சங்கம் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை முடிவுகளை பார்க்கும்போது அது எல்லா கோரிக்கைகளையும் சரண்டர் செய்து விட்டதுஎன்பதை அனைவரும் அறிவர்.
போனஸ் இல்லை, நான்காம் பிரிவு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பாதிப்புகள் களையப்படவில்லை, NEPP-ல் உள்ள CR AverageEntry களையப்படவில்லை, SC/ST ரிசர்வேசன் பதவி உயர்வில் மறுப்பு, LTC, MEDICAL ALLOWANCE கோவிந்தா…இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டது போல தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து ஊழியர்களின் காதில் பூ வைக்க முயல்கிறது BSNLEU சங்கம்…
ஒன்று பட்ட போராட்டம் ஒன்றே தொழிலாளி பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்று எப்போது BSNLEU சங்கம் நினைக்கிறதோ அன்றுதான் பிரச்சனைகள் தீரும். தனது பெரியண்ணன் போக்கை BSNLEU சங்கம் என்றுதான் கைவிடப்போகிறதோ..அது அவர்களுக்கே வெளிச்சம்..
ஒன்றுபட்ட போராட்டம்
ஒன்றே நமது துயரோட்டும
No comments:
Post a Comment