WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, September 19

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு!!




மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்.

இந்த அகவிலைப்படியின் பலன் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சரவை வரும் 20ஆம் தேதி கூடி, இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். இந்நிலையில் அதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி 90 சதவீதமாக வழங்கப்பட உள்ளது.

இந்த ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 10,879 கோடி செலவாகும். கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 1-இல் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, அகவிலைப்படி தற்போதுதான் இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment