WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, September 30

பிரதமராகும் தகுதி மோடிக்கு இல்லை!!



பிரதமராகும் தகுதி நரேந்திர மோடிக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறினார்.

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து அகில இந்திய அளவில் அக்டோபர் 3, 4, 5 ஆம் தேதிகளில் மத்திய அரசு அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், தான் பிரதமரானால் பாகிஸ்தான், இலங்கை நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மீனவர் பிரச்னையையும், எல்லை தாண்டும் பிரச்னையையும் தட்டிக் கேட்பேன் என்று கூறினார்.

முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான், நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்திச் சென்று மிரட்டிய தீவிரவாதிகளுக்குப் பணிந்து, சிறையிலிருந்த தீவிரவாதிகள் சிலரை அரசு விடுவித்தது.
தவிர, மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்தபோது தான் இலங்கை ராணுவம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 136 படகுகளைக் கைப்பற்றியதுடன், பல மீனவர்களைக் கொன்றது.

குஜராத்தில் 2.5 லட்சம் முஸ்லிம்கள் வீடு, கடைகளை கலவரத்தில் இழந்து தவிக்கும் நிலை முதல்வர் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது. நரேந்திர மோடியால் குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற்றது என்று கூறுவதை எக்காலத்திலும் ஏற்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தின் போது வ.உ.சி. தலைமையில் உப்புச் சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டதாக திருச்சியில் மோடி பேசியுள்ளார். உண்மையில் உப்புச் சத்தியாகிரகத்தை வ.உ.சி. எதிர்த்தார். அவர் அப்போராட்டத்திலேயே கலந்து கொள்ளவில்லை.

திருச்சியில் நடந்த போராட்டத்துக்கு ராஜாஜி தான் தலைமை வகித்தார். இந்த வரலாறு கூடத் தெரியாமல் மோடி பேசுவது நகைப்புக்குரியது. மொத்தத்தில் மோடிக்கு பிரதமர் ஆகும் தகுதி கிடையாது.

இந்தியாவை ஒட்டி 8 அண்டை நாடுகள் உள்ளன. இவற்றுடன் சுமுக உறவை மேற்கொள்வதே நல்ல அரசுக்கு அடையாளமாக இருக்க முடியும். ஆனால் அண்டை நாடுகளுடன் போரிட்டு உரிமைகளை மீட்போம் என்று மோடி கூறுவது தவறான கருத்து. மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறும். ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரா என்பதை தேர்தல் முடிவுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்று தா.பாண்டியன் கூறினார்.

பெண் கல்வி போராளி மலாலாவுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 'மனித நேயர்' விருது வழங்கி கவுரவித்தது!!


பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (16) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது   இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 5 ஆபரேஷன்கள் நடந்துள்ளன. மேற்கொண்டு சில ஆபரேஷன்கள் செய்யவேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.
உடல்நலம் தேறிய மலாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார். அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள 'வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்' என்ற இடத்தில் வசித்து வருகிறது. இதற்கிடையில், உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
இவ்விருதை பெற்றுக்கொண்ட மலாலா பேசியதாவது:-
பாகிஸ்தானில் நான் பிறந்து வளர்ந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு சொர்க்கம் போன்ற பூமியாகும். எனினும், பெண் கல்வியை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தலிபான் தீவிரவாதிகள் பள்ளிகளை குண்டு வீசி தகர்த்தும், மாணவிகளின் கையில் இருந்து கல்வி உபகரணங்களை பறித்து தூர எறிந்தும் மிரட்டியதால் அந்த பகுதி அபாயகரமான பகுதியாகி விட்டது.
தாங்கள் பள்ளிகளுக்கு செல்வது தலிபான்களுக்கு தெரியாமல் இருக்க, மாணவிகள் தங்களது புத்தகங்களை ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இந்த கொடுமைகளை எதிர்த்து சிலர் மட்டுமே குரல் கொடுக்க முன்வந்தனர். ஆனால், கல்விக்காகவும், அமைதிக்காகவும் ஒலித்த அந்த சிலரது குரல்கள் வீரியம் மிக்கவை.
தலிபான்கள் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பின்னர் என் சுயநினைவை நான் முற்றிலுமாக இழந்து விட்டேன்.
இங்கிலாந்தின் ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் நான் கண் விழித்தபோது, நான் எங்கே இருக்கிறேன்? என்பது எனக்கு தெரியாது. எனது பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? என்று எனக்கு தெரியாது. என்னை துப்பாக்கிகளால் துளைத்தவர்கள் யார் என்பதும் எனக்கு தெரியாது.
ஆனால், இன்று நான் உயிருடன் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற விழா அரங்கில் கூடியிருந்த ஏராளமானோர் மலாலாவின் பேச்சை கேட்டு வியந்து கைதட்டி பாராட்டினர்.
நோபல் பரிசு தேர்வுக் குழுவின் தலைவர் தார்ப்ஜோர்ன் ஜக்லண்ட் மலாலாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி விழா மேடையில் வாசிக்கப்பட்டது.
'உங்களது வீரம் பெண்கள் தங்களது உரிமைகளுக்கு எழுந்து நின்று போராடும் உத்வேகத்தை தட்டி எழுப்பியுள்ளது. இது அமைதிக்கான முன்முயற்சியாகும்' என தார்ப்ஜோர்ன் ஜக்லண்ட் மலாலாவை வாழ்த்தியுள்ளார்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 45 பேரும் குற்றவாளிகள்தான்  என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996ம் ம் ஆண்டு  முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 38 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், சிபிஐ லல்லு பிரசாத் உள்ளிட்ட 45 பேர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும் குற்றம் பற்றிய தண்டனை குறித்த விவரங்களை பின்னர் தனியாக வரும் வியாழக்கிழமை அறிவிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். அதிக பட்ச தண்டனையாக 7 வருட சிறை  தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற புதிய விதிமுறையின் படி அவருடைய அமைச்சுப் பதவிகளும் உடனடியாக பறிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.


 குற்றவழக்கில் சிக்கியுள்ள 1420 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்!!


லல்லு பிரசாத் யாதவ் போல நாடு முழுவதில் 162 எம்.பி.க்கள் 1258 எம்.எல்.ஏ.க்கள் என 1420 பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், நல அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் சிக்கி உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கு மீதான தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில் உள்ளனர்.

லல்லு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Sunday, September 29




  அக்டோபர் 9 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !

                    மத்திய சங்க அறைகூவல் !

ஜூனாகத்தில் நடைபெற்ற NFTE-BSNL தேசியக் குழுக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் கீழ்க் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 9 அன்று கிளைகளில் அனைத்து ஊழியர்களையும் திரட்டி  கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம், கோரிக்கைகளை  கறுப்பு அட்டையில் அணிதல்  போராட்டத்தை, நடத்துமாறு  அறைகூவல் விடப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட போராட்டங்களை அனைத்து சங்கங்களையும் கலந்து பேசி ஒன்றுபட்ட போராட்டமாக நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளது  நமது அகில இந்திய சங்கத் தலைமை.

மத்திய சங்க அறைகூவலை ஏற்று செயலாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் !


    புதிய போனஸ் கணக்கீடு உருவாக்கப்பட வேண்டும்.

    இந்த ஆண்டு குறைந்த பட்ச போனசாவது வழங்கப்பட வேண்டும்.

    STAGNATION - தேக்க நிலை அகற்றப்பட வேண்டும்.

    LTC மற்றும் மருத்துவப்படிகளை மறுபடியும் வழங்க வேண்டும்.

    01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும். HRA 78.2 சத அடிப்படையிலேயே  வழங்க வேண்டும். 01/01/2007ல் இருந்து 78.2க்கான நிலுவை வழங்க வேண்டும்.

    பிரதி மாதம் 12க்குள் GPF பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

    கருணை அடிப்படை வேலைக்கான 55 மதிப்பெண் முறை அகற்றப்பட வேண்டும். விரைந்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

    JAO/JTO/TTA/கேடர்களில் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் வேண்டும்.

    JTO ஆக OFFICIATING  செய்யும் TTAக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

    மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் ALLOWANCES வழங்கப்பட வேண்டும்.

    TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    நாலுகட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.

    SC/ST தோழர்களுக்கான  சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

    NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.

Demonstrate on 9th October and wear black Badges
Wear Black Badges and hold mass demonstration on demands day on 9th October to focus the
attention of BSNL management for early settlement.
1. Evolve Bonus formula and pay the same before Durga Pooja.
2. Settle stagnation problem of RMS/Group ‘D’ and others.
3. Settle wage erosion of employees appointed on 1.1.2007 or there after
4. Modify NEPP
5. Ensure payment of GPF every month
6. Pay arrears of 78.2% IDA merger
7. Restore LTC, Medical allowance etc.
8. Renew quantum of allowances of TA, Stipend etc at par with CG employees
9. Modify R/Rs of JAOs/JTOs,TTA, TMS and Rajbhasha Adhikari.
10. Modify CGA rules and do away 55 weight age points
11. Upgrade Telecom Factories and ensure manuf acturing of all products required for BSNL
12. Regularise officiating JTOs as one time wages
13. Regularise all left out TSMS and casual labour ers and ensure strict Impl ementation of labourers laws
14. Change of designation of all cadres taking into account bus iness commercial and technological changes
15. Ensure payment of 78.2% IDA to all employees
16. 50% of present IDA be merged and Pay body be formed Dear Comrades mobilize the workers for success of the programme. Be prepared for the serious struggle.

Thursday, September 26

பெட்ரோல் விலை குறைகிறது!!



பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்திருப்பதால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்றார். ஆனால் எந்த தேதியில் இருந்து என்பதை கேட்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதே நேரம் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசு பல சலுகைகளை அறிவிக்க ஆரம்பித்து விட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்படும் என்று நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ந்து போனார்கள். இப்போது பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்கிறது மத்திய அரசு. தேர்தல் வந்தால் எல்லா சலுகைகளும் தானாக வரும் போலும்.

Wednesday, September 25

Government to set up first separate pay commission for Indian military!!
India's armed forces are likely to have their own pay panel for the first time since independence.

This comes as the government prepares to set up the seventh Pay Commission to decide on salary hikes for the 50 lakh central government employees, ahead of state polls and national elections due by May. The pay panel's recommendations are expected to be implemented from January 2016.

All three military chiefs had written to the Defence Minister last year, asking for pay parity with civilian employees. The armed forces have also been demanding the one rank one pension and one rank one pay rule.

They are also pushing for fixing rank pay and fixing pay structure for jawans and junior commissioned officers (JCOs).

In June last year, Defence Minister AK Antony had reportedly written to Prime Minister Manmohan Singh on "growing discontent among the services personnel due to the anomalies in payment and salaries."

Mr Antony had said that service personnel, ex-servicemen and pensioners were "equally agitated" and suggested that corrective action be taken or "things may take a bad turn."

A month later, the PM set up a four-member committee of secretaries, headed by the Cabinet Secretary, to look into the demands. The armed forces had then objected to the absence of military representation on the committee. Later, some of the anomalies were corrected, and the government had promised a separate pay commission for the armed forces.

Government salaries had been substantially hiked under the sixth pay commission headed by Justice BN Srikrishna. The revised pays fixed the salary of the Cabinet Secretary at Rs. 90,000 a month and Secretary at Rs. 80,000 per month, while making Rs. 6,660 as the minimum entry level salary.
 BSNL, MTNL join hands to offer free roaming!!Two companies to share buildings, mobile masts, international long-distance phone networks, according to agreement

State-run telecom operators Bharat Sanchar Nigam Ltd (BSNL) and Mahanagar Telephone Nigam Ltd (MTNL), on Tuesday, signed an agreement to share their infrastructure and provide joint services to corporate customers.

While BSNL provides mobile, fixed line and internet services across the country except Mumbai and Delhi, MTNL operates only in Delhi and Mumbai.

Under the agreement, the two state-run telecom operators will share buildings, mobile masts and international long-distance phone networks, according to a joint statement.

“In the NCR (National Capital Region), leaving Delhi, where BSNL customers is on roaming, he is not charged for roaming. We would like to enlarge that area individually on pan-India basis so that mobile customer does not pay any fees for roaming,” said BSNL Chairman and Managing Director R K Upadhyay.

Currently, MTNL and BSNL do not charge any roaming fee for mobile internet services on each others customers. MTNL CMD A K Garg said that both companies will work to have similar arrangement for phone calls also.

“We have made certain packages in pre-paid where it (roaming) is allowed on payment of small amount but yes once this synergy are there we will work out to have similar situation for voice also,” Garg said.
Meanwhile, BSNL also targets to increase revenue from enterprise segment by 15 to 20% following this agreement.

“Most of the enterprise customers are headquartered in Delhi and Mumbai. We expect to garner more than Rs 2,000 crore (this fiscal) from enterprise segment after this agreement with MTNL,” said Upadhyay.

Currently, a Group of Ministers (GoM) headed by Finance Minister P Chidambaram is considering a revival proposal for both the state-run telecom operators.

Friday, September 20




Flat or Plot .......

 அடுக்கு மாடி காலனியா ? வீட்டு மனையா ??
இனி சில வாரங்களுக்கு இது குறித்த பட்டிமன்றம் தமிழகமெங்கும் நடைபெறப்போகிறது.

20-9-13(நாளை)  நடைபெற உள்ள RGB கூட்டத்திற்கு பிறகு விவாதம் சூடு பிடிக்கும்.

17-09-2013 வரை சொஸைட்டி நிலம் பற்றி வாய் திறக்காத BSNLEU மாநிலச் செயலர்கள் செல்லப்பா,சென்னை கோவிந்த ராஜ் ஆகியோர், திடீரென்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டபின்னணியில் இந்த RGB கூட்டம் பரபரப்பாக கூடவுள்ளது.

அந்த அறிக்கை, சொஸைட்டித் தலைவர் திரு. எஸ். வீரராகவன் அவர்களை கையை முறுக்கி மிரட்டும்  வகையில் அமைந்துள்ளது மட்டுமல்ல, நமது தலைவர்களைப் பற்றி தவறான தகவல்களை  தெரிவித்துள்ளது,  பிரச்னையின் ஆழ, அகலங்களை விளக்குகிறது.

அந்த அறிக்கையில் முழுப் புசணிக்காயை சோற்றில் மறைப்பது போல ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது.

வெள்ளானூர் கிராமத்தில் இருந்த 95 ஏக்கர் நிலத்தை வாங்கியதில் நடந்த முறைகேட்டை தடுக்க  Save Telecom Society அமைத்து கடுமையாக பாடுபட்டார்களாம் ! அப்படியும் தடுக்க முடியவில்லையாம் ! 

இதற்கு பெயர்தான் அண்டப் புழுகு !! ஆகாசப் புழுகு !!!

உண்மை என்ன ?  நீண்ட நெடுங்காலமாக சொஸைட்டியில் நடைபெறும் முறைகேடுகளை தைரியமாக வெளிக்கொணர்ந்து தடுத்தாண்டவர் நமது மாவீரன் மதிவாணன் அவர்கள்தான்  என்பதை ஊரறியும் !

வேறு வழியில்லாமல் BSNLEUவும் அந்த படையில் சேர்ந்துகொண்டது என்பதே உண்மை !!.

கூட்டுறவு சொஸைட்டி, சிறப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டில் கொள்ளையரின் கூடாரமாக மாறியபோது, அதனை எதிர்த்து போராட, BSNLEU முன்னாள் மாநிலச் செயலர் தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்களை தலைவராகவும் தோழர் C.K.மதிவாணன் அவர்களை கன்வீனராகவும் கொண்டு  Save Telecom Society செய்த நற்செயல்களை மூடி மறைக்க செல்லப்பா தலைபட்டதேன்.....

  அந்த இரண்டு தலைவர்களும் பேட்டி கூட கொடுக்ககூடாது என்று நீதிமன்றம் மூலம் வாய்ப்பூட்டு போட முயன்றதையும் மறைத்தது ஏன் ?
 
நமது கடும் எதிர்ப்பையும் மீறி, சொஸைட்டி தனி அலுவலர் சம்பத் குமார், பல கோடி ரூபாய் கடன் வாங்கி, வெள்ளானூர் கிராமத்தில் 95 ஏக்கர் நிலத்தை வாங்கியதையும், தோழர் C.K. மதிவாணன் ,அந்த முறைகேட்டை அன்றைய முதல் அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற காரணத்தால்  அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா ? 

அதுமட்டுமல்ல !

முக்கியமான IAS அதிகாரியை சந்தித்து,  ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட  இயக்குனர் குழு பொறுப்பேற்க வைத்ததும் தோழர்C.K. மதிவாணன் அவர்களின் கடும் விடாமுயற்சியால் அன்றோ !!

 அதே சொஸைட்டி, அந்த  நிலத்தை ஒரு தனியாருக்கு விற்க முயன்ற போது, முறைகேடாக நிலம் வாங்கப்பட்டாலும் அது சொஸைட்டி உறுப்பினர்களின் கூட்டு சொத்து, அதன் பலனை அந்த உறுப்பினர்கள் தான் அனுபவிக்கவேண்டும் என்று கொடி உயர்த்தி, போஸ்டர் போட்டு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை  சென்னையில் திரட்டி போராடியதும் தோழர்C.K. மதிவாணன் அன்றோ....

நமது NFTE தமிழ் மாநில அமைப்புச் செயலர் கடலூர் தோழர் அன்பழகன்,  13-12-2012 அன்று சென்னையில் நடந்த RGB கூட்டத்தில்  சமரசமின்றி வாதாடியதால் தானே 
 " சொஸைட்டி நிலம் உறுப்பினர்களுக்கே"  என்று அக்கூட்டத்தில்  ஒருமனதாக ஏற்கப்பட்டு சாத்தியமானது. 

அதே கூட்டத்தில், BSNLEUவைச் சார்ந்த 2 RGB உறுப்பினர்கள் வீட்டுமனை வழங்குவததற்கு பதிலாக  அடுக்குமாடி வீடு  வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதன் முதலில் தெரிவித்தனர்.

அப்போதுதான், சொஸைட்டித் தலைவர் திரு வீரராகவன், நிர்வாகக் குழு, ஜனவரி 2013க்குள் சிறப்புப் பேரவையைக் கூட்டி இது பற்றி 
முடி வெடுக்கும் என்று அறிவித்தார்.ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை.

30-1-2013 அன்று நடந்த இயக்குனர் கூட்டத்தில் BSNLEUவைச் சார்ந்த சொஸைட்டித் தலைவர் வீ ரராகவன், பெருவாரியான உறுப்பினைர்கள் அடுக்குமாடி கட்டித் தருவதையே விரும்புகிறார்கள் என்று முன்மொழிந்ததோடு,  அனைத்து சங்கத் தலைவர்களையும் அந்தந்த சங்கத்தை சார்ந்த இயக்குனர்கள் கலந்தாலோசித்து தங்களது கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 அதன் அடிப்படையிலேயே சென்னை மாநில NFTEயைச் சார்ந்த இயக்குனர்கள், அம்மாநில சங்க தலைவர்களை கலந்தாலோசித்து செயல்படுகின்றனர்.

  நிலத்தை பிரித்து கொடுத்தால் சுமார் ஆயிரம் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும், ஒவ்வொருவரும் தனித்தனியாக விடு கட்டுவதும் சிரமமாக இருக்கும் . ஆனால் அடுக்கு மாடி என்றால் சுமார் 6500 பேருக்கு சகல வசதிகளும் கொண்ட ஒரு சிறு நவீன நகரம் போன்ற குடியிருப்பை உருவாக்கலாம்.... உறுப்பினர்களுக்கு அந்த அடுக்குமனை கிடைக்கும் பட்சத்தில், வங்கி கடன் ஏற்பாடு செய்ய சாத்தியப்படும்.  தேவைப் பட்டால் விண்ணப்பதாரரின், நல்ல வேலையில் உள்ள மகன்/மகள் பெயரில் கூட கட்டிடத்தை பதிவு செய்து தேவையான அளவு கடனை பெற ஏற்பாடு செய்யலாம்,  என்றெல்லாம தீர ஆலோசித்த சென்னை NFTE மாநில சங்க தலைமை அடுக்குமாடி கட்டிட திட்டத்திற்கு  பச்சைகொடி காட்டியது.    

இதையெல்லாம் மறைத்துவிட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று செல்லப்பா கோவிந்தராஜ் கூட்டணி, 17-9-13 அன்று திடீரென்று அறிக்கை வெளியிட்டு சொஸைட்டி தலைவர் வீரராகவனை மிரட்டுவதேன்?

நிலை தடுமாறுவதேன் ? மற்ற சங்க தலைவர்கள் மீது பழி சுமத்துவதேன் ?  மனம் மாறியது ஏன் ? மாற்றியது யாரோ ? பின்னணி என்ன என்பதை தீர ஆலோசிப்போம் !!  முடிவெடுப்போம் !! 
 
  

Thursday, September 19

 
நம்முன்னே இருக்கும் சவால்கள்:
தோழர்களே, ஜுனாகத்தில் நமது அகில இந்திய செயற்குழு நடைபெறும் சூழலில் நம்முன்னே உள்ள சவால்கள் பற்றி நாம் உடனடி சிந்தித்து செயல்பட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

அங்கீகார தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் அங்கீகாரத்திற்கு வந்தால் எம்ளாயிஸ் யூனியன் போட்ட போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த வருடம் எப்படியும் போனஸ் பெற புது உடன்பாடு போடப்படும் என்ற வாக்குறுதி தரப்பட்டது. பூஜா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் நாம் போனஸை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.மிக மோசமான  போனஸ்ஒப்பந்தம் போட்டுவிட்டு அதனை மறக்கச் செய்ய தாங்கள் பெற்றுத் தருவோம் என கூறிக்கொண்டு அதற்கான ஒரு போலி போராட்டத்ததை வரும் 27/09/2013 நடத்த நம்பூதிரி அணியினர் தயாராகிவிட்டனர். அகில இந்திய செயற்குழுவில் மூன்று வருடமாக BSNLEU  சங்கத்தால் மறக்கடிப்பட்ட போனஸை நாம் பெற்றுத் தர போராட்டம் உட்பட சரியான முடிவுகளைஎடுக்க வேண்டும்.

12/06/2012 போட்ட 78.2 கிராக்கிப்படி இணைப்பின் ஒப்பந்தத்தால் அதன் பயன் 01/01/2007 இலிருந்து கிடைப்பதற்கு பதில் நாம் 10-06-2013 இலிருந்துதான் பெற்றோம். இது மாபெரும் அநீதி.  குறைந்தபட்சம்  12/06/2012 க்கு பிறகு பதவி ஓய்வு பெற்றவர்களாவது இதனால் பயன் அடைய வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அதிகபட்ச ஊதிய உயர்நிலையை அடைந்த நான்காம் பிரிவு தோழர்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. இந்த பாதகத்தை களைய இந்த செயற்குழு சரியான போராட்டத்தை வடிவமைக்க வேண்டும்.

நமது இலாகாவின் நிதிநிலைமை மிக மோசமான சுழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுவும் தொலைதொடர்பில் 100 சதவீதம் அந்நிய முதலீடு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதால் அதன் நேரடி பாதிப்பு நமக்குதான்.  மத்திய அரசின் இந்த முடிவுகள் BSNL/MTNL இவைகளை அதல பாதாளதிற்கு தள்ளிவிடும்.இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

நம்தலைமீது எப்போதும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. அதுதான் VRS. மேலும் மாதா மாதம் சம்பளம், GPF இவை தடையில்லாமல் நாம் பெற வேண்டும். நம்முடைய வேலை பாதுகாப்பு மற்றும் பென்ஷன் இவை இரண்டிலும் நாம் எந்த சமரசமும் செய்யக் கூடாது.

நாம் அனைவரும் மேற்கூறிய விசயங்களில் கவனம் செலுத்தி சரியான முடிவு எடுக்க ஜுனாகத்தில் சந்திப்போம தோழர்களே.

Task before us in Junagath!!



        As  we are preparing to meet in our National Executive Committee meeting next week at Junagath. It is pertinent to think about our tasks. During the last verification NFTE-BSNL promised to the Employees atleast to get minimum Bonus for this year by changing THE FAULTY Bonus formula agreed upon by BSNLEU  if NFTE-BSNL obtains the status of a recognized union. Now that the Festive/ Pooja season is fastly   approaching we cannot  keep silence over this  crucial issue of Bonus as our rival union has started some sort of agitation and slated for a Day’s strike on 27/09/2013 for many issues including the Bonus. It is our bounded duty to get back the right to Bonus to our Employees which was denied to them for the last 3 years.

        Eventhough the agreement signed on 12/06/2012 was faulty on many counts due to our persistent effort and unity we could get the implementation of 78.2% IDA merger with effect from 10/06/2013. However the management has betrayed the union/ Associations by not extending the same benefit to people who have retired since 01/01/2007. This is unacceptable and discriminatory. Atleast we should try to get the benefit extended to the Employees who have retired after 12/06/2012 when the agreement was signed. Further the stagnation among the Gr.D Employees is to be addressed immediately.

      The financial position of the  of the BSNL is not in very good position. Payment of salary/ GPF are not being paid on due dates. It is our duty to strengthen   and protect the financial base of our company. It is our the financial base of our company.  In this connection we have to oppose the resent hike off FDI up to 100%  in telecom sector. This policy of Central Govt will surely encourage and help the Private telecom companies where as the BSNL/MTNL companies will face further difficulties.

   The retrenchment policies  in the form of VRS is always hanging over on our head. We cannot accept the wrong agreement of the Management/Govt that only by sending out more than  a lakh workers BSNL can survive. We have to build broad based unity for facing the challenges and to protect the rights of our Employees.  Job security, Govt Pension  are the two important rights of our Employees on which no compromise is possible. Let us meet and decide to advance both our Union and the interest of the Employees.
      
                                                 C.K.Mathivanan,Dy GS

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு!!




மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்.

இந்த அகவிலைப்படியின் பலன் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சரவை வரும் 20ஆம் தேதி கூடி, இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். இந்நிலையில் அதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி 90 சதவீதமாக வழங்கப்பட உள்ளது.

இந்த ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 10,879 கோடி செலவாகும். கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 1-இல் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, அகவிலைப்படி தற்போதுதான் இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, September 14

அன்றும் இன்றும் !!


அமைச்சர் ராஜா காலத்தில் BSNLலிடம் ரூ.40,000 கோடி கையிருப்பாக இருந்தது. இதை கபளீகரம் செய்து BSNLஐ நலிவான நிறுவனமாக்க ராஜா முடிவெடுத்து செயல்பட்டார்.

   BSNL, MTNLக்கு ஒத்து வராத ஸ்பெக்ட்ரத்தை, தேவையேயின்றி BSNL வாங்க வைத்தார்.ஆனால் ஏலம் விட்டபிறகு வரும் அதிக விலையைத்  தரவேண்டும் என்று அநியாயமாக ஒரு நிபந்தனையை  போட்டார்.

அப்போதே தைரியமாக இதை அம்பலப்படுத்தியவர்  தோழர் C.K.மதிவாணன் மட்டுமே.

குறிப்பாக ஒரே அங்கீகாரச் சங்கத்தின் பொதுச்செயலராக இருந்த VAN நம்பூதிரி யூனைடேட் போரம் சார்பாக அமைச்சர் ராஜாவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து கடிதம் கொடுத்தார். 

அமைச்சர் ராஜா விலகி, சிறைக்கு சென்றபின். நல்ல பிள்ளையாய் மாறிய நம்பூதிரி, அபிமன்யூ உள்ளிட்ட Forum தலைவர்களும் உண்மையை உணர்ந்து தேவையில்லாத ஸ்பெக்ட்ரத்தை சரண்டர் செய்ய வேண்டும் , அந்த அநியாய கட்டணத்தை அரசு திருப்பித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க உடன் பட்டனர்

இன்று GoM திருப்பித் தர முடிவெடுத்து விட்டது வரவேற்கத் தக்கது..


                                          செய்தி ...கோவை வலைத்தளம் .............


Saturday, September 7

தமிழை வழக்காடு மொழியாக 3 நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும்!!



சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மூன்று நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும் என வழக்குரைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்ன உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மதுரை வழக்குரைஞர்கள் சங்க குழு தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டது.

Wednesday, September 4

ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் !!






ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சுப்பாராவின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் இன்று (புதன்கிழமை) நிறைவடைந்தது. இதையடுத்து பன்னாட்டு நிதியத்தின் முன்னாள் தலைமை பொருளியல் வல்லுனரும், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்த ரகுராம் ராஜன் (வயது 50) ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக பதவி ஏற்றார்.