WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Thursday, May 29
Sunday, May 25
20.05.2014 அன்று நடந்த அரசு தொலைத்தொடர்பு கூட்டுறவு சங்க இயக்குனர்கள்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
1. வட்டிவீதம் ஒரு சதவீதம் ( 15.5 to 14.5 ) உடனடியாக குறைக்கப்படும்.
2. உறுப்பினர்கள் நலன் கருதி பெங்களூருவில் ஒரு கிளை துவக்கப்படும்.
3. கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவ 12 துணைக்கமிட்டிகள் அமைக்கப்படும். மத்திய பதிவாளர், டெல்லியின் ஒப்புதலுக்குப் பின் இது அமலாகும்.
1. வட்டிவீதம் ஒரு சதவீதம் ( 15.5 to 14.5 ) உடனடியாக குறைக்கப்படும்.
2. உறுப்பினர்கள் நலன் கருதி பெங்களூருவில் ஒரு கிளை துவக்கப்படும்.
3. கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவ 12 துணைக்கமிட்டிகள் அமைக்கப்படும். மத்திய பதிவாளர், டெல்லியின் ஒப்புதலுக்குப் பின் இது அமலாகும்.
Flash News !!! chq.......
The All India Conference will be held from 10th to 13th October, 2014 at Jabalpur. The host branch has been intimated about the dates for arrangement. The central office bearers, circle Secretaries and the delegates may book their To and fro Journey tickets accordingly. The AIC will be limited to the accredited delegates as per provision of the constitution, circles Secretaries and central office bearers.
Friday, May 23
நேர்மையே உன் விலை என்ன?
‘‘உசுரோட இருக்கீங்களே… அதுக்காகவாவது ஓட்டுப் போடுங்கடா…’’ - சுமார் 30 ஆண்டு களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூருக்கு அருகில் உள்ள சிறு கிராமம். குடிநீருக்கே அவ்வளவு சிரமம். எங்கும் வறட்சி. வேறு வழியில்லாமல் ஊர்கூடித் தேர்தலைப் புறக் கணித்தது. அப்போது அந்தக் கிராமத்துக்கு வந்த ‘தேர்ந்த அரசியல்வாதி’ ஒருவர் மக்களிடம் சொன்ன வார்த்தைகள் இவை.
நோட்டா சொல்வது என்ன?
கேட்கச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனாலும் இது நேரடியாக உணர்ந்த உண்மை. அப்போது 49 ஓ, நோட்டா என்கிற நவீன தேர்தல் மறுப்பு வடிவங்களெல்லாம் வரவில்லை. இப்போது முன் னேற்றம். நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் தமிழகத் தில் மட்டும் 5.5 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித் திருக்கிறார்கள். அதாவது 1.4%. புதுவையில் 3%. அகில இந்திய அளவில்1.1% - சுமார் 59 லட்சம் பேர்.
இது தவிர, வாக்களிக்காமலே இருந்துவிட்டவர்கள் சில கோடிப் பேர். இந்த விதமான புறக்கணிப்பு மனோபாவம் ஏன் வளர்ந்துவருகிறது என்று எந்த அரசியல் கட்சியாவது சுயபரிசீலனை செய்திருக்கிறதா?
இப்படி இருந்தாலும், எதை அளவுகோலாக வைத்துக் கொண்டு தங்களுக்கான பிரதிநிதிகளை வாக்காளப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு தொண்டுநிறுவனம் கொடுத்திருக்கிற கணக்கு வியக்கவைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி-க்களில் மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, அ.தி.மு.க. என்று பல கட்சிகளும் இதில் அடக்கம். மொத்த எம்.பி-க்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் (அவர்கள் காட்டியுள்ள குறைந்தபட்ச சொத்துக் கணக்குப்படி).
பலங்கள் தேவை
இதன்படி வாக்காளர்கள் என்ன அளவுகோலின்படி வாக்களிக்கிறார்கள் என்பதைவிட, வேட்பாளர்கள் என்னென்ன தகுதிகளின் அடிப்படையில் இங்கு போட்டியிடுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. குற்றப் பின்னணி, அடியாள் பலம், தேர்தல் செலவுக்கான பணபலம், பணப் பட்டுவாடாவுக்கான தனிபலம், இவற்றைத் தவிர, விளம்பரப்படுத்திக்கொள்வதற்கான பலம் - எல்லாம் சேர்ந்தால்தான் இப்போது வேட்பா ளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடிகிறது.
நேர்மையாளர்களுக்குத் தண்டனை
சின்ன ஃப்ளாஷ்பேக் பார்க்கலாமா? நேர்மையான, எளிமையான, ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை கொண்ட, சொத்து சேர்க்காத அரசியல்வாதியான காமராஜர் 1967-ல் விருதுநகரில் மாணவர் தலைவரான சீனிவாசனைவிட 1,285 வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தோல்வியடைந்தபோது சொன்னார்: ‘‘மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்.’’
எளிமைக்குப் பெயர்போன இன்னொரு தலைவரான கக்கன் 1967 தேர்தலில் மேலூரில் ஓ.பி. ராமனிடம் தோற்றுப்போனார். பிறகு, 1971-ல் பெரும்புதூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது அங்கும் தோற்கடிக்கப்பட்டார்.
கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி 1977-ல் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தார். சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயரெடுத்த இரா. செழியன் 1984-ல் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் நடிகை வைஜயந்தி மாலாவிடம் தோற்றுப்போனார்.
தற்போது வாழும் அரசியல்வாதிகளில் நேர்மைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு தனது போராட்டங்களுக்காகப் பல முறை சிறை சென்றவர்; ஆற்று மணலை எடுப் பதை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியிருப்பவர். அவர் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிட்டபோது அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை.
தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு அணை, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் என்று பலவற்றுக்காகவும் போராடிய வைகோ இலங்கைப் பிரச்சினைக்காக 19 மாதங்கள் பொடா சிறையில் இருந்தவர். இருந்தபோதும் 2004-ல் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக் தாகூரிடம் தோற்ற வைகோ, நடந்துமுடிந்த தேர்தலில் அதே விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றிருக்கிறார்.
அணுசக்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட சுப. உதயகுமாருக்குக் கிடைத்த வாக்குகள் 15,314 மட்டுமே.
எந்த அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்?
தமிழகத்தின் மீது அசலான அக்கறையுடன், தன்னுடைய குறைந்தபட்ச நேர்மையை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் நின்ற பல வேட்பாளர்களுக்குத் தமிழகம் தந்திருக்கிற எதிர்வினை இதுதான். காம ராஜர், கக்கனில் துவங்கி வைகோ வரை நீள்கிற இந்த விதமான எதிர்வினைகள், தமிழக அரசியலில் சற்று ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழாதா என்று எதிர்பார்த்திருந்தவர்களைச் சலிப்பில் ஆழ்த்தியிருக் கின்றன. கருத்துக் கணிப்பாளர்களையும் கூடக் குழப்பியிருக்கின்றன.
ஏற்கெனவே, தேர்தல் ஜனநாயக முறையில் நம்பிக்கை இழந்த நிலையில், நோட்டாவுக்கு வாக்களிப் பவர்களும், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் இருப்ப வர்களும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் - பலரிடம் எழக்கூடிய இயல்பான கேள்வி.
‘‘எந்த அடிப்படையில் இங்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்? வாக்காளர்களின் தகுதியும் நேர்மையும், அவர் கடந்து வந்திருக்கிற வாழ்க்கையும்கூட இங்கு ஒரு பொருட்டில்லையா? வேட்பாளர்களின் தகுதியைப் புறம்தள்ளி அவர் மீதிருக் கும் குற்றப் பின்னணி, வழக்கு இத் யாதிகள், சாதியம் அல்லது மதம் சார்ந்த ஆதிக்கம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அவர்களுடைய உளவியலை எப்படிப் புரிந்து கொள்வது? தேசிய அளவிலும் மாநில அளவிலும் வெவ்வேறு ஊழல் வழக்குகளில் பிணைக்கப் பட்டிருப்பவர்களின் பின்னணி இங்கு அநாவசியமான ஒன்றா? தொடர்ச்சியான இலவசங்கள், கவர்ச்சியாகக் கட்டமைக்கப்படும் விளம்பரங்கள், இறுதி நேரத்துப் பட்டுவாடாக்கள்தான் படிப்படியாக வாக்காள மனங்களை நகர்த்தி வாக்குப்பதிவு இயந்திரத்திடம் கொண்டுசேர்க்கின்றனவா?’’
இதைப் படிக்கும் உங்களுடைய மனதில்கூட இதே கேள்விகள் வேறு வடிவில் தோன்றியிருக்கலாம். நெருக்கடி நிலையை அடுத்து நடந்த தேர்தலைத் தவிர்த்து, அனுதாபம், பணபலம், மதம், சாதி உணர்வு கள்தான் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் என்றால், ஜனநாயகத்தை அர்த்தமிழக்க வைப்பது யார்?
- மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,
Wednesday, May 21
கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு !
நமது சென்னை கூட்டுறவு சங்கத்தின் புதிய
21 இயக்குநர்கள் 21-5-14 அதிகாலையில் கூடி
புதிய நிர்வாகிகளை ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.
தலைவராக தோழர் S.வீரராகவன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக தோழர் K.ரகுநாதன் ( NFTE-BSNL), பொருளராக தோழர் திரிசங்கு (FNTO) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவும் சிறப்பாக செயலாற்றவும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தமிழ்நாடு
சென்னை தொலைபேசி
மொத்த வாக்குகள் : 68
மொத்த இடங்கள் : 8
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8
V. பாபு : 40
V. பாஸ்கர் : 39
T.V. பீமாராவ் : 50
P. D. சந்திரபாபு : 41
K. சிதம்பரம்பிள்ளை : 41
A. கிருஷ்ணமூர்த்தி : 39
K. ரகுநாதன் : 41
R. திரிசங்கு : 42
பொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு)
மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 2
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2
பிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106
M. செல்வி, சென்னை : 114
பொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு)
மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 1
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1
G. ராஜ்குமார், வேலூர் : 107
நமது சென்னை கூட்டுறவு சங்கத்தின் புதிய
21 இயக்குநர்கள் 21-5-14 அதிகாலையில் கூடி
புதிய நிர்வாகிகளை ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.
தலைவராக தோழர் S.வீரராகவன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக தோழர் K.ரகுநாதன் ( NFTE-BSNL), பொருளராக தோழர் திரிசங்கு (FNTO) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவும் சிறப்பாக செயலாற்றவும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
சென்னைக்கூட்டுறவு சங்க
இயக்குனர்கள் தேர்தல்...நமது NFTE கூட்டணி...வரலாற்று
சிறப்புமிக்க... மகத்தான வெற்றி...!
வெற்றி...!வெற்றி...!
20-05-2014
செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்கஇயக்குனர்கள் தேர்தலில்
21 இடங்களையும்நமது NFTE
தலைமையிலான
அணி வெற்றி பெற்றுள்ளது. இயக்குனர்கள் தேர்தல் முடிவுகள்தமிழ்நாடு
மொத்த வாக்குகள் :
127
மொத்த இடங்கள் : 10
NFTE
கூட்டணி வெற்றி
பெற்ற இடங்கள் : 10
K. அசோகன், சென்னை : 70
A. ஞானசேகர், திருச்சி : 67
A. குல்சார் அஹமது, ஈரோடு : 69
P. இளங்கோவன், மதுரை : 70
V. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் : 69
V. நாகராஜா, பெங்களூர் : 70
S. பார்த்திபன், சென்னை : 70
R. ராஜேந்திரன், தஞ்சாவூர் : 71
P. சண்முகம், திருநெல்வேலி : 68
S. வீரராகவன், வேலூர் : 75சென்னை தொலைபேசி
மொத்த வாக்குகள் : 68
மொத்த இடங்கள் : 8
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8
V. பாபு : 40
V. பாஸ்கர் : 39
T.V. பீமாராவ் : 50
P. D. சந்திரபாபு : 41
K. சிதம்பரம்பிள்ளை : 41
A. கிருஷ்ணமூர்த்தி : 39
K. ரகுநாதன் : 41
R. திரிசங்கு : 42
பொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு)
மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 2
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2
பிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106
M. செல்வி, சென்னை : 114
பொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு)
மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 1
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1
G. ராஜ்குமார், வேலூர் : 107
எம்.பி.,க்களுக்கு ரூ.50,000 சம்பளம்: பார்லி., கூட்டத் தொடர் காலங்களில் தினப்படியாக ரூ.2000.....
புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது. இதுதவிர பார்லி., கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் அவர்கள் கையெழுத்திட்டு செல்வதற்கு தினப்படியாக ரூ.2000 வழங்கப்படுகிறது. மேலும் தொகுதி பணிகளுக்கான நிதியாக ஒவ்வொரு மாதமும் ரூ.45,000 ஒதுக்கப்படுகிறது. மேலும் கட்டணம் இல்லாத வீடு, விமான போக்குவரத்து, ரயில் பயணம், 3 லேண்ட்லைன் இஐணப்புக்கள், 2 மொபைல் போன்கள், ஆண்டுக்கு 1.5 லட்சம் இலவச தொலைப்பேசி அழைப்புக்கள், எம்.பி.,க்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்றவைகள் வாங்குவதற்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது. இதுதவிர பார்லி., கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் அவர்கள் கையெழுத்திட்டு செல்வதற்கு தினப்படியாக ரூ.2000 வழங்கப்படுகிறது. மேலும் தொகுதி பணிகளுக்கான நிதியாக ஒவ்வொரு மாதமும் ரூ.45,000 ஒதுக்கப்படுகிறது. மேலும் கட்டணம் இல்லாத வீடு, விமான போக்குவரத்து, ரயில் பயணம், 3 லேண்ட்லைன் இஐணப்புக்கள், 2 மொபைல் போன்கள், ஆண்டுக்கு 1.5 லட்சம் இலவச தொலைப்பேசி அழைப்புக்கள், எம்.பி.,க்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்றவைகள் வாங்குவதற்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
Tuesday, May 20
புதிய அதிவேக அன்லிமிடெட் பிராட்பேண்ட் சேவை: பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது !!
மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் கூடிய புதிய அகன்ற அலைவரிசை இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைபேசியுடன் கூடிய சேவையில், அன்லிமிடெட் வசதியுடன், அகன்ற அலைவரிசை சேவைகளை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முறையே ரூபாய் 1,455 (20 ஜிபி வரை நொடிக்கு 2 எம்பி வேகமும், அதன்பிறகு 1 எம்பி வேகம்), ரூபாய் 2,799 (30 ஜிபி வரை 4 எம்பி வேகம் அதன்பிறகு 2 எம்பி வேகம்) மாத வாடகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாத வாடகையை ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுக்கு மொத்தமாக செலுத்துபவர்களுக்கு சிறப்புச்சலுகைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.
. மேலும் 250 இலவச அழைப்புகளும் உண்டு. தொலைபேசி இணைப்பு ஏற்கனவே இணைப்பு வைத்திருப்பவர்கள் மாதம் ரூபாய் 1,275 வாடகையில் இணைப்பு பெற்று பிராண்ட் பேண்ட் சேவையை பெறலாம். பிஎஸ்என்எல் பொது தொலைபேசிகளில் ஒரு அழைப்பு நேரம் 60 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொலைபேசியுடன் கூடிய சேவையில், அன்லிமிடெட் வசதியுடன், அகன்ற அலைவரிசை சேவைகளை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முறையே ரூபாய் 1,455 (20 ஜிபி வரை நொடிக்கு 2 எம்பி வேகமும், அதன்பிறகு 1 எம்பி வேகம்), ரூபாய் 2,799 (30 ஜிபி வரை 4 எம்பி வேகம் அதன்பிறகு 2 எம்பி வேகம்) மாத வாடகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாத வாடகையை ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுக்கு மொத்தமாக செலுத்துபவர்களுக்கு சிறப்புச்சலுகைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.
. மேலும் 250 இலவச அழைப்புகளும் உண்டு. தொலைபேசி இணைப்பு ஏற்கனவே இணைப்பு வைத்திருப்பவர்கள் மாதம் ரூபாய் 1,275 வாடகையில் இணைப்பு பெற்று பிராண்ட் பேண்ட் சேவையை பெறலாம். பிஎஸ்என்எல் பொது தொலைபேசிகளில் ஒரு அழைப்பு நேரம் 60 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sunday, May 18
இனிதான் வேலை இருக்கிறது தோழர்களே!
இடதுசாரிகளின் வீழ்ச்சிதான் இந்தத் தேர்தலில் அதிகம் கவலை அளிக்கும்
விஷயம். 2004-ல் 63 இடங்களைப் பெற்ற இடதுசாரிகள் 2009-ல் 24-ஆகச்
சுருங்கினர். இப்போது அந்த எண்ணிக்கை 12-ஆகக் குறைந் துள்ளது. இந்த முறை
மேற்கு வங்கத்தில் தனித்து நின்ற பா.ஜ.க.
இரண்டு இடங்களைப் பெற்றிருப்பது அக்கட்சிக்குக் கொண்டாட்டத்துக்குரிய
விஷயம் என்றால் இடது சாரிகள் இரண்டு இடங்கள் மட்டுமே பெற்றிருப்பது
அதிர்ச்சிக்குரியது.
கம்யூனிஸ்டுகள் பெருவாரி யான மக்களின் மனதைக் கவர முடியாமல் போனதற்கு
இந்திய மண்ணுக்கேற்ப அவர்கள் மார்க்சியச் சித்தாந்தத்தைப் பிரயோகிக்காதது
முக்கிய மான ஒரு காரணம் என்றால் மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில்
சாதி, மதம், இனம், மொழி, தனிமனித வழிபாடு போன்ற உணர்வுகளுக்கு அளித்த
முக்கியத்துவத்தில் ஒரு பகுதியைக் கூட வர்க்க உணர்வுக்கு அளிக்கவில்லை.
ஆனால், இன்று தாங்கள் ஏற்கெனவே வலுவாகக் காலூன்றியிருக்கும் பகுதிகளில்
இடதுசாரிகள் சந்தித்திருக்கும் பெரும் பின்னடைவை இந்தக் காரணம் கொண்டு
விளக்க முடியாது.
34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும், பொருளாதார நிபுணர்களை
நிதியமைச்சர்களாகப் பெற்றிருந்தும் மேற்கு வங்கம் உயராமல் போனது ஏன்?
இதற்கான பொறுப்பை இடதுசாரிகள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்நிலையை மாற்ற
இடதுசாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் தோல்விக்கு வழிவகுத்தன. சிங்கூர்
மற்றும் நந்திகிராம் முயற்சிகள் மக்களை இடதுசாரிகளுக்கு எதிராகத் திரட்ட
உதவின.
இன்று திரிணமூல் கட்சி பெற்றிருக்கும் பெரும் வெற்றியின் அடித்தளம் இதுவே.
ஆனால், சிங்கூர் மற்றும் நந்திகிராம் மட்டுமே இன்றைய தோல்விக்கான காரணம்
என்று புரிந்துகொண்டால் அது தவறு. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு
வருவதைத் தடுக்க வர்ஜாவர்ஜமின்றி, அனைத்து மாநிலக் கட்சிகளுடனும்
கூட்டுசேர்ந்தது இவர்கள் ஒரு மாற்று சக்தி என்ற நம்பிக்கையை மக்களிடம்
ஏற்படுத்துவதற்குப் பாதகமாக முடிந்து விட்டது.
ஊழலைப் பொறுத்த வரை காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் வித்தியாசம் இல்லை
என்று கூறிவிட்டு ஊழல் என்ற குட்டையில் ஊறித் திளைத்திருக்கும் லாலு,
முலாயம், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோருடன் தொடர்ந்து கூட்டு வைத்தது
இவர்கள் மாற்று சக்தி என மக்கள் நம்ப முடியாது செய்துவிட்டது. பெரும்பான்மை
மதவாதத்தைக் கடுமை யாகச் சாடிய இடதுசாரிகள் சிறுபான்மை மதவாதத்தை
மென்மையாக அணுகியது இந்துத்துவா சக்திகளுக்கே சாதகமாக முடிந்தது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது
பின்பற்றும் அதே ஈவிரக்கமற்ற அணுகுமுறையை, தங்கள் தலைவர்கள் விஷயத்திலும்
காட்டு வோம் என்பதை நிரூபிக்கக் கிடைத்த ஓரிரு வாய்ப்புகளை இடதுசாரிகள்
தவறவிட்டனர்.
ஊடகங்கள் மோடிக்கு அளிப்பதைப் போன்ற ஒரு ஆதரவை இடதுசாரிகள் ஒருபோதும் பெற
முடியாது. இவை தங்கள் தொண்டர் பலத்தை மட்டுமே நம்பியிருப்பவை. மாநிலக்
கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டுவைத்ததன் விளை வாக எங்குமே இடதுசாரிகளின்
தொண்டர் பலம் அதிகரிக்கவேயில்லை. மாறாக, பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற
மாநிலங்களில் இழப்பையே அதிகம் சந்தித் திருக்கிறார்கள்.
ஆக, தங்களது இருப்பை தேசிய அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் கொண்டதாக
ஆக்குவதற்கான இடதுசாரி களின் திட்டம் நீண்ட கால அடிப்படையி லானதாக மட்டுமே
இருக்க முடியும். அடுத்த சில ஆண்டுகளில் மம்தா பானர்ஜியின் மோசமான
ஆட்சியின் காரணமாக மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வர
வாய்ப்பிருக்கிறது.
ஆனால், அது போதுமானதல்ல. மதச்சார்பின்மையாக இருந்தாலும் சரி, பொருளாதாரக்
கொள்கைகளாக இருந்தாலும் சரி, மக்களின் சிந்தனைப் போக்கில் மாற்றத்தைக்
கொண்டுவர இடதுசாரிகள் பாடுபடுவது மட்டுமே அவர்கள் முன்னிருக்கும் ஒரே வழி.
மிகக் கடினமான வழிதான். குறுக்கு வழிகள் ஏதுமில்லை. தேர்தல்கள் இடதுசாரி
அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இப்போதோ அது மைய
இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
Subscribe to:
Comments (Atom)


-logo.jpg)







