WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, October 25

போனஸ் போராட்டம்!!!

BSNL  ஊழியர்களுக்கு
போனஸ் வழங்கக்கோரி

30/10/2013 திங்கள் கிழமை 

அகில இந்திய , மாநில
மாவட்டத்தலைநகர்களில்
உண்ணாவிரதம், போராட்டம் !!!

Bonus: Hunger strike on 30th October. A delegation consisting of President, GS and Secretaries (Comrades Rajmouli and Rajpal) held meeting with CMD, BSNL on 22nd Oct. and urged for Bonus payment. The CMD who has returned from Tamilnadu, Madurai etc, was very much impressed with the performance and presentation of the employees. The CMD showed helplessness due to financial condition of BSNL. He sought cooperation from the employees. The delegation pressed but he has not agreed to the demand. With profound anguish we call upon the workers to organize hunger strike on 30-10-213 and demonstrate same day during lunch hour. President and Secretaries only will sit on hunger strike at CHQ, Circle and District levels. Make the programme successful.                                                                                                                                   chq...........  
       One Day Fast for Bonus by Leaders at SSA, Circle and CHQ Level on Oct 30th- A  Kind of Repentance Day for the environment of No Bonus- President and Secretaries are requested to sit Fast..                                                                                            TNcircle........
மறப்பது மனித இயல்பு !
            நினைவு படுத்துவது நமது மரபு !!
2003ல் போனஸ் ,மறுக்கப்பட்ட போது NFTE-BSNL ஒரே அங்கீகாரச் சங்கம் ! ஆனாலும் BSNLEU உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராடி உடனடியாக 75 % போனஸ், வருவாய் உயர்ந்தவுடன் மீதி போனஸ்  என்று உடன்பாடு போட்டது.

2013,  BSNLEU, NFTE-BSNL ஆகிய இரண்டு சங்கங்களுக்கு அங்கீகாரம் ! ஆனால் NFTE-BSNLஐ தீண்டமாட்டேன் என்று ஒரு தலைபட்சமாக முடிவெடுத்து போராட்ட அறைகூவல் விடுத்து போனஸ் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு உடன்பாடு போட்டு அதற்கு மகத்தான உடன்பாடு என்று  நாமகரணம் சூட்டுகிறது  BSNLEU

Tuesday, October 22

சொன்னது நீதானா?? சொல்,,,,,,சொல்…


தோழர்களே, நாம் சில நிகழ்வுகளை பின்னோக்கி பார்க்கிறோம்..
அங்கீகாரத் தேர்தல் முடிந்த கையோடு எம்ப்ளாயீஸ் யூனியன் தனது வலைதளத்தில் 19-04-2013 இவ்வாறு எழுதியது” இந்த அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற NFTE-BSNL சங்கத்தை மனதாரப் பாராட்டுகிறோம். இனி வரும் காலங்களில் முக்கியமான பிரச்சனைகளில் NFTE-BSNL சங்கத்தோடு தோளோடு தோள் நின்று தொழிலாளிக்காக போராடுவோம்”..ஆனால் நடந்தது என்ன? கல்கத்தாவில் நடந்த அவர்களது மத்திய சங்க செயற்குழுவில் 4-9-2013 NFTE-BSNL கலந்து ஆலோசனை செய்யாமலே போராட்ட அறிவிப்பினை தன்னிச்சையாக வெளியிட்டது.

நமது அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர்.சி.கே.மதிவாணன் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுவில் BSNLEU சங்கத்தின் கபட நாடகத்தை வெளிப்படுத்தினார். BSNLEU சங்கம் சேர்ந்து போராடி தொழிலாளி பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டால் அந்த வெற்றி NFTE-BSNL சேர்ந்ததால்தான் கிடைத்தது என்று ஆகிவிடும் என்று BSNLEU நினைக்கிறது அதனாலேயே நம்மோடு குறிப்பாக NEPP BONUS போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒன்றுபட்ட போராட்டத்தை தவிர்க்கிறது.  இதனை பட்டவர்த்தனமாக தோழர் மதிவாணன் கூட்டத்தில் வெளியிட்டபோது அதனை அனைவரும் ஆமோதித்தனர். அதேபோல அச்சங்கம் நம்மோடு சேர்ந்து ஒரு வெளிப்படையான உடன்பாட்டை போடவும் பயப்படுகிறது.

டெல்லியில் புதிய அகில இந்திய கவுன்சில் அமைக்கப்பட்ட உடனேயே நம் சங்கத்தின் சார்பாக போனஸ், பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகள், நான்காம்பிரிவு ஊழியர் பிரச்சனைகள் இவைகளை பட்டியலிட்டு நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது..  ஆனால் அவைகளை அப்படியே துளீயும் மாறாமல் தங்களது போராட்ட கோரிக்கைகளாக BSNLEU அறிவித்தது. நாம் நிர்வாகத்தை உடனடி கவுன்சில கூட்ட வற்புறுத்திய போது நிர்வாகம் ஊழியர் தரப்பு செயலர் (BSNLEU) இதுவரை எந்த பிரச்சனைகளையும் கவுன்சிலுக்கு சமர்பிக்கவில்லை என்று தெரிவித்தது.

18-10-2013 BSNLEU சங்கம் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை முடிவுகளை பார்க்கும்போது அது எல்லா கோரிக்கைகளையும் சரண்டர் செய்து விட்டதுஎன்பதை அனைவரும் அறிவர்.

போனஸ் இல்லை, நான்காம் பிரிவு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பாதிப்புகள் களையப்படவில்லை, NEPP-ல் உள்ள CR AverageEntry களையப்படவில்லை, SC/ST ரிசர்வேசன் பதவி உயர்வில் மறுப்பு, LTC, MEDICAL ALLOWANCE  கோவிந்தா…இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டது போல தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து ஊழியர்களின் காதில் பூ வைக்க முயல்கிறது BSNLEU சங்கம்…
ஒன்று பட்ட போராட்டம் ஒன்றே தொழிலாளி பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்று எப்போது BSNLEU சங்கம் நினைக்கிறதோ அன்றுதான் பிரச்சனைகள் தீரும். தனது பெரியண்ணன் போக்கை BSNLEU சங்கம் என்றுதான் கைவிடப்போகிறதோ..அது அவர்களுக்கே வெளிச்சம்..

ஒன்றுபட்ட போராட்டம்
ஒன்றே நமது துயரோட்டும

Sunday, October 20

பண மெத்தையில் படுத்துப் புரண்ட மார்க்சிஸ்ட் தலைவர் நீக்கம்!


திரிபுரா மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்க்ளில் ஒருவரான சமர் ஆச்சார்ஜி பண மெத்தையில் படுத்து புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இவரது செயல் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது; சமர் ஆச்சார்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சிக்குள்ளே விமர்சனங்கள் எழுந்தன. மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினரும் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை முகம் வெளிவந்துள்ளது எனக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதனால், கட்சியின் உயர்மட்டக் குழு உடனடியாகக் கூடி இது குறித்து விவாதித்தது. இது தொடர்பாக சமர் ஆச்சார்ஜியை விசாரணை செய்த போது, பண மெத்தையில் படுத்திருப்பதை இவரே கைபேசியில் பதிவு செய்து உள்ளூர் தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பருக்கு அனுப்பிக் கொடுத்தது தெரிந்தது. 

எனவே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், சமர் ஆச்சார்ஜி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Saturday, October 19

BSNL டைரக்டர் (மனித வளம்) திரு. A.N.ராய்,
சீனியர் அதிகாரிகளுடன் CHQ தலைவர்கள் சந்திப்பு !

18.10.2013 அன்று முற்பகலில் டெல்லியில் நமது அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர்,இஸ்லாம் அகமது, அகில இந்திய சங்க துனை பொதுச் செயலர் தோழர் C.K. மதிவாணன் ஆகியோர்
திரு.A.N. ராய், டைரக்டர் (HR),மற்றும் திரு அகர்வால்.சீனியர் GM (Per), திரு.R.K.கோயல் Sr.GM (Estt), திரு சதீஷ் வாதா, DGM (SR)ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கீழ்க்கண்ட ஊழியர்களின் பிரச்னைகளை விவாதித்தனர்.

1. தீபாவளிக்கு முன்பாக குறைந்தபட்ச போனஸ் வழங்கவேண்டும்
என்று வலியுறுத்தினர்.

2. தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் :

புதியதாக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டி ஊழியர் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும்.

3. கருணைப் பணி : இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட சில விளக்கங்கள்
இறந்த ஊழியர் குடும்பத்திற்கு பாதகமாக உள்ளது. ஆகவே அவை
மாற்றப்பட வேண்டும்.

4. சென்னை TSM, கேசுவல் ஊழியர்களின் பிரச்னை சென்னை CAT
மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்க்கப்பட
வேண்டும்

5. கவுன்சில்கள் புதிய BSNL அங்கீகார விதிகளின்படி அமைக்கப்பட
வேண்டும் .

6. ஊழியர் நல குழுக்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வெல்பேர் போர்டுகள் :
இரண்டு அங்கீகாரச் சங்ககளுக்கும் நியமன உறுப்பினர்கள் 1:1 விகிதாசாரத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

கூட்டம் முடியும் போது மீண்டும் தீபாவளித் திருநாளுக்கு முன்பாக போனஸ் வாங்கிட வலியுறுத்தப்பட்டது.

Meeting With Director (HRD) and other Senior Officers:

Today Our CHQ leaders Com.Islam Ahmed, President and Com.C.K.Mathivanan, Dy.GS met Sri..A.N.Rai, Director(HR), BSNL, Sri.Aggarwal, Sr.GM (Per),Sri. R.K.Goyal, Sr.GM
( Estt) Sri.Sathish Wadhwa DGM (SR) separately and discussed the following staff issues.

1.Payment Of Minimum Bonus before Diwali :

Our leaders urged the Management to ensure payment of minimum bonus before Deepawali.

2. Immediate Convening of National Council :

The newly constituted National Council may be convened at the earliest to discuss the pending staff matters.

3. Compassionate appointments: Some clarifications issued by the Management are against the interests of the family of the deceased employees. Hence modifications may be issued.

4. Reinstatement of 27 Casual Mazdoors in Chennai Circle as per the Judgement of the Chennai CAT and Madras High Court.

5. Nominations to Welfare Boards/Sports Councils : The number of nominees from both the Recognised Unions may be increased in the 1:1 ratio.

6.Strict implementation of the BSNL Recognition Rules .
Nominations to the Councils may be accepted strictly as per the new BSNL Recognition Rules

In conclusion our leaders once again pressed for the payment of Bonus before Diwali.

பணக்கட்டிலில் படுத்துப் புரண்ட சிபிஎம் தலைவர் : வீடியோவால் பரபரப்பு !!





 திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சமர் ஆச்சார்ஜி என்பவர் வழங்கிய இச்செவ்வியில், தான்  ரூ.20 இலட்சத்தை வங்கியிலிருந்து எடுத்து வந்து அதனைக் கட்டிலில் கொட்டி அதன் மேல் படுத்து உருண்டேன். இதன் மூலம் பண மெத்தை மேல் படுத்து உறங்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக்கொண்டேன். மற்றவர்களை போல் வெளியில் ஏழ்மையானவர்களாக போலியாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அகர்தலாவில் மாநகராட்சியின் 3 வார்டுகளிலும் கழிவறை அமைக்கும் ஒப்பந்தம் எடுத்ததில், எனக்கு ரூபாய் இரண்டரை கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது என அவரே தனது திருவாய் மலர்ந்து கூறுகிறார்.  இவ்வீடியோவைப் பார்த்த பலரும், சிபிஎம் கட்சியினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Wednesday, October 16

IDA 6.6 %  உயர்வு. மொத்தம் 85.5 %. 
BSNL   உத்திரவு வெளியிட்டது. 

Sunday, October 13

அமெரிக்காவி்ற்கு நெருக்கடி:உலக வங்கி எச்சரிக்கை!!

செலவின மசோதா அமெரிக்க பார்லி.,யில் நிறைவேறாததால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு, ஷட்டவுன் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வாரத்தை நிதி நெருக்கடி எட்டியுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்கா மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் தலைவர் ஜிம் யங் கிம் கூறுகையில், அமெரிக்க நிதி நிலை ஆபத்தான கட்டத்தை எட்ட இன்னும் ஐந்து தினங்களே உள்ளன, என்றார்.

Thursday, October 10

அப்போ, நம்பூதிரி BSNLEU தலைவர் இல்லையா !


              தயாநிதி மாறனின் மீது CBI வழக்கு !!

ஒரு தனி நபரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இல்லை !

    ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !!!

          சென்னை கோவிந்த ராஜனின் உளறல்....... 

    தயாநிதி மாறனின் 323 ISDN முறைகேடு பற்றி CBI வழக்கு பதிவு செய்தவுடன் சென்னை BSNLEU மாநிலச் செயலர்  கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து தனக்கு மட்டுமல்ல, அனைத்து சங்கங்களுக்கும்   அந்த ஊழல் வெளியானதில் பங்கு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது கண்டு குபீர் என்று சிரிப்புதான் வந்தது.

        முறையற்ற வகையில் கூட்டணி அமைத்து அங்கீகாரம் பெற,
2004ல் நமக்கு வரவேண்டிய, நிர்வாகம் தர ஒப்புக்கொண்ட அலவன்ஸ்களை தடுத்து நிறுத்திட,  தயாநிதி மாறன் காலில் விழத்  துவங்கியதிலிருந்து இன்று வரை BSNLEU சங்கத்தார்,  ஒரு வார்த்தை யாவது மாறனை எதிர்த்து எழுதியோ பேசியோ நாம் கண்டதில்லை கேட்டதில்லை.

   சென்னையில் நடந்த முறைகேட்டை எதிர்த்து போராடினார்களாம் ! 

இது பற்றி எந்த தகவலும் எந்த பத்திரிக்கையிலோ ஏன் அவர்கள் வெப்சைட்டிலோ கூட  வரவில்லையே !!

 ரகசியமாக இருட்டறையில் போராடினார்களோ என்னவோ !!

  போகிற போக்கில் 2G ஊழலை வேறு எதிர்த்து இவர்கள் கடுமையாக போராடினார்களாம் !

"தோழர் மதிவாணன் தவறாக பிரச்சாரம் செய்கிறார்..... 2G பிரச்னையில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல....... 3G ஸ்பெக்ட்ரத்தை மிக உயர்ந்த அநியாய விலையில் BSNL தலையில் கட்டிய அமைச்சர் ராசாவின் செயல் பாராட்டுதலுக்குரியது " என்று கடிதம் கொடுத்து அதை முன்னாள்  முதல்வர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டதை அவ்வளவு
எளிதில் மறக்க முடியாமா ! 

நம்பூதிரி BSNLEU தலைவர் அல்ல என்று கோவிந்த ராஜன் கழுவுகிறாரா !
       
 வேலைக்கு ஒருவர்,  மாலைக்கு ஒருவர் என்பது போல

சொஸைட்டி ஊழலை எதிர்த்ததிலும், நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்து தருவதிலும் தங்களுக்கு பங்கு இருப்பதாக சென்ற வாரம் புருடா விட்டார் சென்னை கோவிந்த ராஜன்.....

இந்த வாரம் தயாநிதி மாறன் ஊழலை வெளிக்கொணர்ந்ததில் தனக்கும் பங்கு உள்ளதாக அறிக்கை வெளியிடுகிறார்.....

 இனி கொஞ்ச நாட்கள் கழித்து அடுக்குமாடி கட்டி கொடுக்க
கேட்டதே நாங்கள்தான் என்று அறிக்கை வெளியிட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை......