தெலுங்கானா விவகாரம் குறித்து ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்திய அமைச்சர்களை அமைச்சர்கள் குழு சந்திக்கிறது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த முயற்சியில் இறங்கிய மத்திய அரசு, தெலுங்கானாவை உருவாக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு மூன்றாவது முறையாக இன்று கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது இரு மாநிலங்களுக்குமான நதிநீர் பங்கீடு, மின்சாரம், சொத்துக்கள் விநியோகம் மற்றும் எல்லைகளை பிரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்கானா பிரிப்பது தொடர்பாக வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 8 அரசியல் கட்சிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி கருத்துக்கள் கேட்கப்படும். பின்னர் 18 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
அதற்கு முன்பாக 11 ஆம் தேதி பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களை, அமைச்சர்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தும்.

No comments:
Post a Comment