WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, November 8

 கத்துக்குட்டி அபிமன்யூ !

     18-10-13 அன்று போனஸ் பிரச்னையில் நிர்வாகத்திடம் அபிமன்யூ சரண்டரானது பற்றி நாம் கேட்டகேள்விகளுக்கு பதில் தர இயலாத அபிமன்யூ,போனஸ் சட்டப்படி நமக்கெல்லாம் போனஸ் கிடைக்காது என்பது  NFTE-BSNL தலைவர்களுக்கு தெரியுமா ? என்று சிறு பிள்ளைத் தனமாக ஒரு கத்துக் குட்டியைப் போல கேள்வி கேட்டு உள்ளார்.  

  போனஸ் சட்டம் மட்டுமல்ல... தொழிலாளர் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டங்களை நன்றாக அறிந்தவர்கள்தான் NFTE-BSNL தலைவர்கள் ! அதுமட்டுமல்ல அந்த சட்டங்களால் உருவான தடை கற்களை எப்படி உடைத்து எறிந்து ஊழியர்களுக்கு நன்மை செய்வது என்ற அறிவார்ந்த தலைவர்களைக் கொண்டது NFTE-BSNL.

  2000த்தில், தொலைத் தொடர்புத் துறை, கார்ப்பரேஷன் ஆகியபோது, பொதுத்துறை ஊழியர்க்கு அரசு பென்சன் தர சட்டம் இல்லை, ஆகவே, பொதுத்துறையானால் அரசு பென்சன் கிடைக்காது என்று அழுது புலம்பியது AITEU (Namboodri) சங்கம்.

 ஆனால் NFTE சங்கமோ, கடுமையாக போராடி பென்சன் விதிகளிலேயே மாற்றம் கொண்டு வந்து  இதுவரை இல்லாத ஒன்றை சாதித்துக் காட்டியது. இதைத்தான் உண்மையான  " இமாலய சாதனை " என்று கூறவேண்டும். 

2003ல் NFTE-BSNL அங்கீகாரத்தில் இருந்தபோது DPE வழிகாட்டுதல்படி பகிர்ந்தளிக்கக்கூடிய  லாபத்தில் 5 சதவீதத்தைத்தான் போனசாக
வழங்க முடியும் என்று நிர்வாகம் எடுத்த நிலைபாட்டை  NFTE - BSNL  ஏற்கவில்லை. அப்போது அங்கீகாரமில்லாத BSNLEU உள்ளிட்ட சங்கங்களையும் சேர்த்துக்  கொண்டு வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கியது. அந்த வேலைநிறுத்த அறிவிப்பில்  BSNLEU சங்கத்தின் துணைப் பொதுச் செயலரான அபிமன்யூ கையெழுத்திட்டார்.
அப்போதும் இதே போனஸ் சட்டம்தான் அமலில் இருந்தது.

  அந்த போராட்ட அறிவிப்பின் அடிப்படையில்,  சீஃப் லேபர் கமிஷனர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடனடியாக 75 சத சம்பளத்தை போனசாக வழங்குவது, மீதி 25 சத சம்பளத்தை பிறகு வழங்குவது என்று உடன்பாடு ஏற்பட்டது.

78.2 % IDA இணைப்பு பற்றிய உடன்பாடு ஜூன் 2012ல் ஏற்பட்டபோது, என்னைப்பற்றி " எதையும்  சந்தேகிக்கும் தாமஸ் "என்ற தலைப்பில் அபிமன்யூ எழுதிய ஒரு கட்டுரையில் அந்த உடன்பாட்டை அப்ரூவ் செய்யும் அதிகாரம் DOTக்குதான் என்ற சாதாரண உண்மைகூட
தெரியாமல்,   BSNL இயக்குனர்கள் குழுதான் அதிகாரம் படைத்தது
என்று எழுதினார் அபிமன்யூ. இதுபோன்ற சிற்றறிவு கூட இல்லாதவர் தான் BSNLEU சங்கத்தின் ஆகப் பெரும் பொதுச் செயலர் என்பதுதான் இனறைய நிலை.       

  இது போன்ற பயனற்ற சம்பந்தமில்லா விஷயங்களை பற்றி பிதற்றாமல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு அபிமன்யூ நேரடியாக
பதில் அளிக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் :

18-10-13 அன்று போனஸ் வழங்க முடியாது என்று BSNLEU
தலைவர்களிடம் நிர்வாகம் கூறியவுடன், அதை தண்டனிட்டு
ஏற்காமல்,NFTE-BSNL உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும்
ஒன்றிணைத்து போராட்டம் நடத்த அபிமன்யு தவறியதேன் ?

விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான்........நமது ஊழியர்கள்
இவ்வாண்டு போனஸ் பெறக்கூடாது என்ற BSNLEUவின் நோக்கம் காரணமாகத்தான்....

ஏனென்றால், NFTE-BSNL அங்கீகாரம்  பெற்றவுடன், மூன்றாண்டுகளாக கிடைக்காத போனசை பெற்றுக் கொடுத்துவிட்டது என்ற  பெருமையை  NFTE-BSNL பெற்றுவிடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தினால்தான்........

பின் குறிப்பு:
 BSNLEUவை தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக,  BSNLEU சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தோழர்
ராமன் குட்டி,  எப்படி டெல்லியிலிருந்து வெளியேற்றப்பட்டார்
என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம். அவரை ஒன்றுபட்ட  ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலராகக் கூட நிம்மதியாக
 பணியாற்ற விடவில்லை அபிமன்யூவும் அவரது சகாக்களூம்.
ஒரு போட்டி ஓய்வுதியர் சங்கத்தை துவக்கி தங்களது பிளவு
வேலை செய்தார் அபிமன்யூ. பொது செயலர் பதவிக்கு
அபிமன்யூவை எதிர்த்து போட்டியிட துணிந்தார் என்ற ஒரே
 காரணத்திற்காக சென்னை தோழர் குணசேகரன் எப்படியெல்லாம்
அபிமன்யூவின் நேரடி பேற்பார்வையில் ஓரங்கட்டப்பட்டார்
என்பதையும் நாம் நன்றாக அறிவோம். அபிமன்யூ,நமது தலைவர்
தோழர் இஸ்லாம் அவர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்காமல்,
தனது அமைப்பை ஒழுங்கு படுத்தட்டும்.  

                                                                                                       
    C.K.மதிவாணன்
துணைப் பொதுச் செயலர்
NFTE-BSNL

No comments:

Post a Comment