உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியீடு!!!
உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா. இவர் பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
இந்நிலையில், 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை Ôகுலைல்Õ என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டு ள்ளது. அந்த பெண்ணின் பெயர் மாதுரி என்று கூறியுள்ள குலைல், அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்.
இளம்பெண் மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மலைத் தோட்ட திட்டம் தொடர்பாக, நான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.
அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment