WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, November 30

உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியீடு!!!

உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா. இவர் பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

இந்நிலையில், 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை Ôகுலைல்Õ என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டு ள்ளது. அந்த பெண்ணின் பெயர் மாதுரி என்று கூறியுள்ள குலைல், அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்.

இளம்பெண்  மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மலைத் தோட்ட திட்டம் தொடர்பாக,  நான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.

அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Friday, November 29


"தருமம் மறுபடியும் வெல்லும்"

தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும் என்று பாஞ்சாலி சபதத்தில்  எடுத்துரைத்தான்  புரட்சிக் கவி பாரதி.

  அதுதான் உண்மை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

    பணி ஓய்வு பெற்ற CGM வேலுசாமி, அலுவலகத்திற்கு கள்ளத்தனமாக
வந்து ரகசியமாக சன் டீவிக்கு  323 ISDN இணைப்பு வழங்கிய தயாநிதி மாறனுக்கு எதிரான ஆவணங்களை அழிப்பதாக செய்தி வந்ததையடுத்து, அதை  தடுத்து நிறுத்த போராடிய தோழர் மதிவாணன் அவர்களுக்கு கடும்
மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாடகம அரங்கேறியது.

  அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களின் விடாமுயற்சி காரணமாகவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு நல்ல உள்ளங்களின்  நல்லாதரவு காரணமாகவும்
அவர் மீது மேற்கொண்ட விசாரணை அறிக்கை மீது எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளத் தேவையில்லை என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இனி தோழர் மதிவாணன் ஓய்வூதிய பலன்களைப் பெற தடையேதுமில்லை.

விசாரணையின் போது defence Assistant என்ற அடிப்படையில்  தனது
நீண்ட அனுபவ முத்திரையை பதித்த தோழர் மாலி அவர்களின்
செயல் பாராட்டத்தக்கது.

தண்டனையைக் கண்டு அஞ்சாமல் செயலாற்றிய தோழர் மதிவாணன் அவர்களின் செயல் நாமெல்லாம் பின்பற்றத்தக்கது. சிறிய பிரச்னை என்றாலும் பெரும்பாலானோர் கலங்கிப் போய் அங்கும் இங்கும் பிரச்னையை கொண்டு செல்வார்கள்.

ஆனால், தோழர் மதி அவர்களோ, M.P அந்தஸ்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் பிரச்னையை நான் பேசட்டுமா என்று கேட்டபோது,
" வேண்டாம், எனது சங்கத் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று கௌரவமாக கூறியது மெச்சத் தகுந்தது.

 ஊழல், ஏமாற்றுவேலை, அநீதி போன்றவை எங்கு நடந்தாலும், யார் செய்தாலும் எதிர்வினையைப்பற்றி அஞ்சாமல் வானமே எல்லையாகக் கருதி செயலாற்றும் தோழர் மதிவாணன் அவர்களின் மகுடத்தில் வைத்த வைரமாக அமைந்து விட்டது அவரது இந்த செயல்பாடு.

  கோவை இணையதளத்திலிருந்து . . .......

Wednesday, November 27

End of an harassment!
  At last the harassment finally is over. The CGM, Chennai telephones finally closed the disciplinary proceedings against comrade C.K. Mathivanan and the letter communicating the displeasure of CMD was received by him on 25/11/2013.   We Hope the necessary vigilance clearance will be issued without any further delay so that Com. C.K.Mathivanan could get his retirement benefit atleast by the end of this year. However, We extend our sincere thanks to our National president Com. Isalm Ahamad who consistently took up the case of victimization with the coporate office and helped to solve this case without any punishment or monetary loss. We also thank Com. S. Mahalingam, former CS, Tamil Nadu who acted as Defence Assistant in the disciplinary case and helped Com. C.K. Mathivanan by his intelligent questions during the enquiry. In the last we congratulate all those comrades who stood like rock behind Com. C.K.Mathivanan during this difficult period and expressed sympathies, affection to him. We proved once again that any number of false cases cannot shake the leaders of NFTE.  We will continue to fight  against corruption, high handedness and discrimination without fear. We will also serve the working people with renewed energy and commitment.

Circle union, NFTE_BSNL Chennai telephones.


Dated:26/11/2013

Saturday, November 23

AITUC இயக்கத்தின் தலைவர் தோழர் SST.......




தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள்(23-11-13) இன்று மாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர்களின்  மறைவிற்க்கு  செங்கொடி... தாழ்த்தி..
அஞ்சலி... செலுத்துகின்றோம்...


சாதித்து காட்டியது NFTE-BSNL
நமது நிர்வாகம் ஒருவழியாக போனஸ் பற்றி முடிவெடுக்க கமிட்டி ஒன்றை நியமித்து உள்ளது. அதில் நமது அகில இந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது ஊழியர் தரப்பு தலைவர் என்ற முறையில் இடம்பெற்றுள்ளார். நம்முடைய விடா முயற்சியால் மட்டுமே நிர்வாகம் நான்கு வருடங்களாக போனஸ் கொடுக்கமுடியாது என்ற பார்முலாவை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து அதனை பற்றி முடிவெடுக்க கமிட்டி அமைத்துள்ளது. ஊழியருக்கு போனஸ் கிடைக்காத்தற்கு காரணமான தவறான பார்முலாவை ஒத்துக்கொண்ட்து  BSNLEU. BSNLEUதான் அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை இதனை ஏற்றுகொண்ட்து என்பது அனைவரும் அறிந்ததே. நிர்வாகத்தை இந்த பார்முலாவை மாற்ற வேண்டும் என்று நிர்பந்திக்க தவறியது என்பதை ஊழியர்கள் அனைவரும் அறிவர். இப்போது NFTE-BSNL
அங்கீகாரம் பெற்ற சங்கமாக உள்ளதால் அது நிர்வாகத்தை இது குறித்து நிர்பந்திக்க முடியும். போனஸ் லாபம் வந்தாலும் வராவிட்டாலும் தரப்படவேண்டும் என நிர்பந்திக்க முடியும்.  கமிட்டி அமைக்கப்பட்ட்து நமது சாதனை என்று மார்தட்டி சொல்ல முடியும்.
ஆனால், சில BSNLEU தலைவர்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தாங்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறத் துவங்கிவிட்டனர். இது முழுவதுமாக தவறான மற்றும் கேவலமான செயல். இது இவர்களால் முடிந்தது என்று சொன்னால், இத்தனை நாளாக அங்கீகாரம் பெற்ற சங்கமாக இருந்தபோதே இதை செய்திருக்க வேண்டியதுதானே என்று சாதாரண தொழிலாளி கேட்கிறான். நான்கு வருடமாக எதுவும் செய்ய இயலவில்லையே? அனைவரும் நன்கு அறிவர் 78.2 கிராக்கி இணைப்பைNFTE-BSNL சேர்ந்து போராடியால்தானே பெறமுடிந்த்து! அதே போல இப்போது NFTE-BSNL இந்த தவறான போனஸ் ஒப்பந்தத்தை மாற்றியே தீரும் என உறுதி கூறுகிறோம்.

சி.கே.மதிவாணன், அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர்,

Friday, November 22






NFTE(BSNL)
    தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு 20-11-13 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

பல்வேறு ஊழியர் பிரச்னைகள், அமைப்பு பிரச்னைகள் முழுமையாக விவாதிக்கப்பட்டு மனநிறைவுடன்  முடிந்துள்ளது.

GPF..........?????????


நமது மத்திய சங்க தொடர் முயற்சியால் ...மாநிலங்களுக்கான  GPF நிதி ஒதுக்கீடு  , விஜய கார்த்திகை 9 ,மொஹரம் 21 நல்ல நேரம் காலை 6.15 -7.15 மாலை 3.00- 4.00,ராகு 7.30 -9 ,குளி 1.30-3,எம 10.30 - 3 சூலம் -கிழக்கு   , சிறிய நகசு  கூடிய ... வரும் நவம்பர் 25 -11.2013 திங்கள் அன்று ஒதுக்கப்படும் என நிதி துறை இயக்குனர் (DIRECTOR  FINANCE ) தெரிவித்துள்ளார்                                                                    செய்தி ;குடந்தை வலைத்தளம்.......

Thursday, November 21

60th Federation Day !!!        
  NFPTE was formed as per the scheme evolved by than Communication minister Hon'ble Jagjeevan Ram on 24/11/1954 to unify the postal worker and trade unions. On 24th November-2013, We celebrate the Federation day to remember the sacrifices and achievements of NFPTE.

Tuesday, November 19

    TMTCLU -கடலூர் மாவட்ட சங்கம்
             கருப்பு சின்னம் அணியும் போராட்டம்

                         20 -தேதி ஆகியும் இதுவரை சம்பள
பட்டுவடாவில் பிரச்சனை மாவட்டம் முழுதும்
நீலவி வருகிறது . மாதமாதம் இதனை
கடைபிடிக்கும் ஒப்பந்ததாரர்-ஐ  எதிர்த்தும்
கண்டுகொள்ளாத நிர்வாகத்தைஎதிர்த்தும்
இன்று முதல் கருப்பு சின்னம் அணியும்
போராட்டம் ..,

ஐம்பதாயிரம் பார்வையாளர்களை தாண்டி வெற்றி நடை போடும் நமது  NFTE(BSNL)PUDUCHERRY  இணைய தளம் , துவங்க முதலில் ஆர்வம் கொடுத்த தோழர், மதி அவர்களுக்கும் ,ஆதரவு நல்கிய அனைத்து தலைவர்கள் , தோழர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் .எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,
            நன்றி! நன்றி!! நன்றி !!!

Saturday, November 16

Now, it’s reaching a stage of decline......

 A tragedyWhile there are close to a hundred drama troupes and artistes in Puducherry, few of them are active around the year. Drama artistes and members of Indian People’s Theatre Association at an interaction in Puducherry —Photo: G. Krishnaswamy

The resting place of the dramatist considered as the father of Tamil theatre - Sankaradas Swamigal - lies in Puducherry. Every year, drama artistes and literary scholars from the Union Territory and Tamil Nadu congregate at his memorial in Karuvadikuppam here. But Tamil dramas in Puducherry barely get to the stage today.

While there are close to a hundred drama troupes and artistes in Puducherry, few of them are active around the year. “Most of the troupes have ageing artistes and few young players,” says Ellai Sivakumar, president, the Puducherry Maanila Kalai Ilakiya Perumandram that organised the Sankaradas Swamigal Festival this year.

However, some of the troupes participate in annual drama competitions organised by the government. “Many of the artistes have known only this occupation. Now that they are old, they have no assistance,” says Kaliaperumal, a yesteryear artiste of the Sankardas Swamigal Nalintha Kalaignar Nalvazhvu Sangam, which has more than 300 artistes registered. Government grants to these artistes are not paid regularly, he alleges.

While theatre in Puducherry has been impacted by television, internet and other popular media like theatre elsewhere, the situation here is compounded further by two other reasons, say artistes: expenses involved and lack of good stages. The Kamban Kalai Arangam, the only decent government hall, ideal for a drama charges more than Rs. 25,000 a day, say drama artistes. “When the rent was Rs. 2,000 or so a few years back, plays used to be staged occasionally,” recalls Perumal, a yesteryear artiste.

“Staging a play is an expensive affair when you factor in rehearsal expenses, and payments for artists,” he adds.

Even a makeshift stage costs around Rs. 10,000, says M. Radhakrishan of Indian People’s Theatre Association (IPTA). Even popular theatre artistes from Chennai like Crazy Mohan and S. Ve. Shekar have not performed in Puducherry recently.

As there few sabhas or affordable private halls suitable for plays in Puducherry, artistes depend on the the only other government or public stages in Puducherry. These are all open air stages like the one at Kurinji Nagar, Lawspet where a play in honour of Sankaradas Swamigal was staged this week. “These plays are not conducive for plays that belong in a sabha,” says Murugavel, drama artiste. “Mythological plays with dance and music are staged here.”

But the theatre scenario was not always like this. Puducherry and the surrounding districts in Tamil Nadu like Cuddalore and Villipuram have a rich tradition of therukoothu which revolved around temple festivals, and which take place in northern Tamil Nadu. M.K. Raman, a patron of the Perumandram, says the TKS brothers and Kalaignar Karunanidhi have staged plays here. Old timers recall theatres in the heritage town that have now shut down.

“It was Sankaradas Swamigal who gave Tamil drama a proper form, from the therukoothu it was,” says Adhiraman, president, IPTA, Puducherry. But, today, there are barely any troupes in Puducherry who can stage his play. It is usually troupes involved from outside who do it.” IPTA hopes to rejuvenate disappearing arts and put new ideas and ideologies on stage.

But social plays questioning injustice and norms in society and those throwing the spotlight on contemporary issues have been staged occasionally, say members of IPTA.

“We stage such plays that talk about contemporary issues like price hike, mosquito menace and violence against women,” says M.K. Raman. These are possible as they do not need an elaborate stage, make-up or even costumes, says Ellai Sivakumar.

Today's Paper News - The Hindu


கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்...!!!


வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் திருவிழா...!!

தனது 200வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடும் சச்சின், சதம் விளாசுவாரா? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் அரை சதத்தை பூர்த்தி செய்தபோது, வான்கடே ஸ்டேடியம் அதிர்ந்து அடங்கியது. மறு முனையில் புஜாராவும் அரை சதம் கடந்தார்.

சச்சினின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்குக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நிச்சயம் சதம் அடிப்பார் வென்ற நம்பிக்கையை ஏற்படுத்திய சச்சின், துரதிர்ஷ்டவசமாக 74 ரன் எடுத்த நிலையில் (118 பந்து, 12 பவுண்டரி) தியோநரைன் பந்தில் முதல் ஸ்லிப்பின் நின்றிருந்த சம்மி வசம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். இதை கொஞ்சமும் எதிர்பாராத ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
சச்சினும் ஏமாற்றம் அடைந்தாலும், வழக்கம்போல சில விநாடிகள் வான் நோக்கிய பின்னர் மட்டையை உயர்த்தி ஆட்டியபடி ரசிகர்களிடம் இருந்து விடை பெற்று பெவிலியன் திரும்பினார்.

Tuesday, November 12

                 மொகரம் விடுமுறை
          14/11/2013ல் இருந்து 15/11/2013 ஆக                          மாற்றப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் மற்றொரு ஊழல்: பிரதமருக்கு யஸ்வந்த் சின்கா எச்சரிக்கை!!


தொலைத்தொடர்பு துறையில் ஸ்பெக்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மற்றொரு ஊழல் மற்றொரு ஊழல் நடைபெற்றுள்ளதாக  பாஜக தலைவர்களில் ஒருவரான யஸ்வந்த் சின்கா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

 அந்த கடிதத்தில் தற்போது திடீரென குறைக்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் விலை குறைப்பு சில நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. டிராய் பரிந்துரைகளின் படி 1800mhz  பேண்டின் விலை ரூ.2376 கோடியிலிருந்து ரூ.1496 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது 37 சதவீத விலைகுறைப்பாகும்.

இதனிடையே மும்பை தில்லி உட்பட பெருநகரங்களில் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலைக்குறைப்பால் ரூ.27,000 கோடி வரை கருவூலத்திற்கு இழப்பு ஏற்படும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் ஹீனா சித்து!!


உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார்.

இதன் மூலம் பெண்களுக்கான 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

Friday, November 8

 கத்துக்குட்டி அபிமன்யூ !

     18-10-13 அன்று போனஸ் பிரச்னையில் நிர்வாகத்திடம் அபிமன்யூ சரண்டரானது பற்றி நாம் கேட்டகேள்விகளுக்கு பதில் தர இயலாத அபிமன்யூ,போனஸ் சட்டப்படி நமக்கெல்லாம் போனஸ் கிடைக்காது என்பது  NFTE-BSNL தலைவர்களுக்கு தெரியுமா ? என்று சிறு பிள்ளைத் தனமாக ஒரு கத்துக் குட்டியைப் போல கேள்வி கேட்டு உள்ளார்.  

  போனஸ் சட்டம் மட்டுமல்ல... தொழிலாளர் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டங்களை நன்றாக அறிந்தவர்கள்தான் NFTE-BSNL தலைவர்கள் ! அதுமட்டுமல்ல அந்த சட்டங்களால் உருவான தடை கற்களை எப்படி உடைத்து எறிந்து ஊழியர்களுக்கு நன்மை செய்வது என்ற அறிவார்ந்த தலைவர்களைக் கொண்டது NFTE-BSNL.

  2000த்தில், தொலைத் தொடர்புத் துறை, கார்ப்பரேஷன் ஆகியபோது, பொதுத்துறை ஊழியர்க்கு அரசு பென்சன் தர சட்டம் இல்லை, ஆகவே, பொதுத்துறையானால் அரசு பென்சன் கிடைக்காது என்று அழுது புலம்பியது AITEU (Namboodri) சங்கம்.

 ஆனால் NFTE சங்கமோ, கடுமையாக போராடி பென்சன் விதிகளிலேயே மாற்றம் கொண்டு வந்து  இதுவரை இல்லாத ஒன்றை சாதித்துக் காட்டியது. இதைத்தான் உண்மையான  " இமாலய சாதனை " என்று கூறவேண்டும். 

2003ல் NFTE-BSNL அங்கீகாரத்தில் இருந்தபோது DPE வழிகாட்டுதல்படி பகிர்ந்தளிக்கக்கூடிய  லாபத்தில் 5 சதவீதத்தைத்தான் போனசாக
வழங்க முடியும் என்று நிர்வாகம் எடுத்த நிலைபாட்டை  NFTE - BSNL  ஏற்கவில்லை. அப்போது அங்கீகாரமில்லாத BSNLEU உள்ளிட்ட சங்கங்களையும் சேர்த்துக்  கொண்டு வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கியது. அந்த வேலைநிறுத்த அறிவிப்பில்  BSNLEU சங்கத்தின் துணைப் பொதுச் செயலரான அபிமன்யூ கையெழுத்திட்டார்.
அப்போதும் இதே போனஸ் சட்டம்தான் அமலில் இருந்தது.

  அந்த போராட்ட அறிவிப்பின் அடிப்படையில்,  சீஃப் லேபர் கமிஷனர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடனடியாக 75 சத சம்பளத்தை போனசாக வழங்குவது, மீதி 25 சத சம்பளத்தை பிறகு வழங்குவது என்று உடன்பாடு ஏற்பட்டது.

78.2 % IDA இணைப்பு பற்றிய உடன்பாடு ஜூன் 2012ல் ஏற்பட்டபோது, என்னைப்பற்றி " எதையும்  சந்தேகிக்கும் தாமஸ் "என்ற தலைப்பில் அபிமன்யூ எழுதிய ஒரு கட்டுரையில் அந்த உடன்பாட்டை அப்ரூவ் செய்யும் அதிகாரம் DOTக்குதான் என்ற சாதாரண உண்மைகூட
தெரியாமல்,   BSNL இயக்குனர்கள் குழுதான் அதிகாரம் படைத்தது
என்று எழுதினார் அபிமன்யூ. இதுபோன்ற சிற்றறிவு கூட இல்லாதவர் தான் BSNLEU சங்கத்தின் ஆகப் பெரும் பொதுச் செயலர் என்பதுதான் இனறைய நிலை.       

  இது போன்ற பயனற்ற சம்பந்தமில்லா விஷயங்களை பற்றி பிதற்றாமல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு அபிமன்யூ நேரடியாக
பதில் அளிக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் :

18-10-13 அன்று போனஸ் வழங்க முடியாது என்று BSNLEU
தலைவர்களிடம் நிர்வாகம் கூறியவுடன், அதை தண்டனிட்டு
ஏற்காமல்,NFTE-BSNL உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும்
ஒன்றிணைத்து போராட்டம் நடத்த அபிமன்யு தவறியதேன் ?

விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான்........நமது ஊழியர்கள்
இவ்வாண்டு போனஸ் பெறக்கூடாது என்ற BSNLEUவின் நோக்கம் காரணமாகத்தான்....

ஏனென்றால், NFTE-BSNL அங்கீகாரம்  பெற்றவுடன், மூன்றாண்டுகளாக கிடைக்காத போனசை பெற்றுக் கொடுத்துவிட்டது என்ற  பெருமையை  NFTE-BSNL பெற்றுவிடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தினால்தான்........

பின் குறிப்பு:
 BSNLEUவை தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக,  BSNLEU சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தோழர்
ராமன் குட்டி,  எப்படி டெல்லியிலிருந்து வெளியேற்றப்பட்டார்
என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம். அவரை ஒன்றுபட்ட  ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலராகக் கூட நிம்மதியாக
 பணியாற்ற விடவில்லை அபிமன்யூவும் அவரது சகாக்களூம்.
ஒரு போட்டி ஓய்வுதியர் சங்கத்தை துவக்கி தங்களது பிளவு
வேலை செய்தார் அபிமன்யூ. பொது செயலர் பதவிக்கு
அபிமன்யூவை எதிர்த்து போட்டியிட துணிந்தார் என்ற ஒரே
 காரணத்திற்காக சென்னை தோழர் குணசேகரன் எப்படியெல்லாம்
அபிமன்யூவின் நேரடி பேற்பார்வையில் ஓரங்கட்டப்பட்டார்
என்பதையும் நாம் நன்றாக அறிவோம். அபிமன்யூ,நமது தலைவர்
தோழர் இஸ்லாம் அவர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்காமல்,
தனது அமைப்பை ஒழுங்கு படுத்தட்டும்.  

                                                                                                       
    C.K.மதிவாணன்
துணைப் பொதுச் செயலர்
NFTE-BSNL

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்திய அமைச்சர்களை அமைச்சர்கள் குழு !!!

தெலுங்கானா விவகாரம் குறித்து ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்திய அமைச்சர்களை அமைச்சர்கள் குழு சந்திக்கிறது.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த முயற்சியில் இறங்கிய மத்திய அரசு, தெலுங்கானாவை உருவாக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு மூன்றாவது முறையாக இன்று கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது இரு மாநிலங்களுக்குமான நதிநீர் பங்கீடு, மின்சாரம், சொத்துக்கள் விநியோகம் மற்றும் எல்லைகளை பிரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்பின்னர் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானா பிரிப்பது தொடர்பாக வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 8 அரசியல் கட்சிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி கருத்துக்கள் கேட்கப்படும். பின்னர் 18 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

அதற்கு முன்பாக 11 ஆம் தேதி பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களை, அமைச்சர்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தும்.

Thursday, November 7

நவம்பர் புரட்சிதின  வாழ்த்துக்கள் !!!
பொலோனியம் விஷம் கொடுத்து யாசர் அராபத் படுகொலை மனைவி பரபரப்பு பேட்டி !!!
:பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கதிர்வீச்சு தன்மை கொண்ட பொலோனியம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது மனைவி பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கடந்த 2004ல் அக்டோபரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அதன்பின் நவம்பரில் இறந்தார். இந்நிலையில் மனைவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரது சடலம் அப்போது பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2006ல் ரஷ்ய உளவு துறையை சேர்ந்த அலெக்சாண்டர் லிட்வென்கோ, லண்டன் ஓட்டலில் தங்கியிருந்த போது காபியில் விஷம் வைத்து கொல்லப்பட்டார். அதேபோல் அராபத்துக்கும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு அராபத் உடல் தோண்டியெடுக்கப்பட்டு அவரது உடலின் பல்வேறு உறுப்புகளை எடுத்து பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

சுவிட்சர்லாந்து நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிவியல் அடிப்படையில் அராபத் இயற்கையாக நோய்வாய்பட்டு இறக்கவில்லை. அவரது உடலின் பல்வேறு உறுப்புகளில் பொலோனியம் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை பெற்றுக் கொண்ட பின், அராபத் மனைவி சுஹா பாரிசில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், Ôஎனது கணவருக்கு அரசியல் எதிரிகள் அதிகம். விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. இதற்காக நான் எந்த நாட்டையும், தனி நபர் யாரையும் குற்றவாளி என்று கூறவில்லை என்றார். இதனால் பாலஸ்தீனத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

Wednesday, November 6

பொறுப்பின்மையின் உச்சகட்டம் !!!


30-10-13 அன்று சென்னையில் NFTE-BSNL நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றும்போது, " இவ்வாண்டும் போனஸ் கிடைக்காததற்கு BSNLEU சங்கம்தான் காரணம், ஏனென்றால், அச்சங்கம்தான், லாபமில்லை என்றால் போனஸ் கிடையாது என்ற நிர்வாகத்தின் தவறான நிலபாட்டை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டது" என்று கூறினேன்.

இதனைக் கேட்டு மன உறுத்தலாலும், வெதும்பலாலும் BSNLEU
பொதுச் செயலர் தோழர் அபிமன்யு, BSNLEU CHQ செப் சைட்டில்

" போனஸ் பிரச்னை: NFTE-BSNL தப்பிக்கும் வழி "

என்று தலைப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதை படித்தவுடன், போனஸ் பிரச்னையில் தோழர் அபிமன்யூவின் உச்ச கட்ட பொறுப்பின்மையையும் உணர்ச்சியில்லா தன்மையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

BSNL நிர்வாகம் படுசாமார்த்தியமாக கம்பெனியின் லாபத்துடன் போனஸை இணைத்ததையும் அதை அன்றைய ஒரே அங்கீகாரச் சங்கமாக இருந்த BSNLEU தட்டிக் கேட்காமல் எந்த எதிர்ப்புமின்றி தண்டனிட்டு ஒப்புக்கொண்டதும் யாவரும் அறிந்ததே ! அதன்
காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்கள் போனஸ்
பெறாமல் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

' லாபமில்லை என்றால் போனஸ் இல்லை" என்ற தவறான திட்டம், உழைக்கும் வர்க்கம் போற்றி மனம் லயித்துப் " போனஸ் என்பது கொடுபடா ஊதியமே ! " என்ற கொள்கை நிலைபாட்டிற்கு
நேர்மாறானது ஆகும்

சென்ற ஆறாவது அங்கீகாரத் தேர்தலின் போது NFTE-BSNL
அங்கீகாரம் பெற்றவுடன், 78.2 % IDA Mergerஐ பெறுவோம்,
போனஸ் உரிமையை மீட்போம் என்று நாம் வாக்குறுதி அளித்தது உண்மையே.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம் இரண்டாம் சங்க அங்கீகாரத்தைத் தான் பெற முடிந்தது. அதன் காரணமாக, எல்லா மட்டங்களிலும் ஊழியர் தரப்பு செயலராக BSNLEUவைச் சார்த்தவர்தான் இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், நாம் அங்கீகாரம் பெற்ற 90 நாட்களுக்குள் முழுமனதோடு ஒற்றுமையான போராட்டத்தை உருவாக்கி 78.2 சத IDA Mergerஐப் பெற முடிந்தது.

அதேபோல போனஸ் பிரச்னையிலும் ஒன்றுபட்ட போராட்டம் மூலம் குறைந்த பட்ச போனசையாவது பெற வேண்டும் என்று நம்மால்
இயன்ற அளவு பெருமுயற்சி மேற்கொண்டோம்.

ஆனால் அபிமன்யூவும் அவரது சகாக்களும் வேறு மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் இருந்தார்கள்.

NFTE-BSNL அங்கிகாரம் பெற்றவுடன்தான் 78.2 சத IDA இணைப்பு கிடைத்தது என்ற ஒரு நல்ல அபிப்ராயம் ஊழியரிடையே வந்துவிட்டது. போனசையும் NFTE-BSNL சங்கத்தோடு சேர்ந்து போராடி பெற்று விட்டால் அந்த நல்ல அபிப்ராயம் மேலும் வலுப்பெற்றுவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள் அபிமன்யு போன்றோர்.

ஆகவே, நிர்வாகத்தோடு சேர்ந்து சதியில் ஈடுபடத் துவங்கி , போனஸ் பற்றிய எந்தவிதமான உருப்படியான உடன்பாடும் இன்றி 24-10-13 அன்று தங்களது ஒரு நாள் போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டனர்.

நமது அச்சம் சரியானதுதான் என்று ஒரு சில தினங்களிலேயே நிரூபணமானது.

29-10-13 அன்று சென்னையில் BSNLEU நடத்திய ஒரு ஹால் கூட்டத்தில் பேசிய தோழர் அபிமன்யூ, கீழ்க்கண்டவாறு பேசியதாக மிகவும் நம்பத் தகுந்த செய்தி நமக்கு கிடைத்து உள்ளது :
'"நமது கம்பெனி கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தில் இயங்குகிற காரணத்தால், இனிமேல் நமது ஊழியர்களுக்கு போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை ; வருங்காலத்தில் மாதாமாதம் சம்பளம் கொடுப்பதற்கே கம்பெனி கஷ்டப்படுகிறது "
.
மேற்கண்டவாறு பேசிவிட்டு அடுத்த நாளே மனசாட்சி இல்லாமல்

"அங்கீகாரம் பெற்றவுடன் போனஸ் பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை NFTE-BSNL நிறவேற்றவில்லை"

என்று நமமை குறை கூறி எழுத அபிமன்யூவிற்கு என்ன நியாயம் இருக்கிறது ?

நாம் அபிமன்யூவிற்கு கீழ்க்கண்ட கேள் விகளை தொடுக்க விரும்புகிறாம், அவர் பதிலளிக்க மறுத்தாலும் கூட.....

1. கம்பெனியின் நிதி நிலை மிகவும் மோசமானது என்று நன்றாக தெரிந்த பின்னும் போனஸ் கோரிக்கையை வேலநிறுத்த அறிவிப்பில் ஒரு கோரிக்கையாக சேர்த்தது ஏன் ?

2. அவர் பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக/பகிரங்கமாக இனி போனஸ் கிடைக்காது என்று பேசத் தயாரா ?

BSNLEU சங்கத்தின் ஒவ்வொரு செயலையும் ஊழியர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள், போனஸ் பிரச்னையில் அதன் இரட்டை
வேடம் உட்பட.

வேலை நிறுத்த பேச்சுவார்த்தையின் போது BSNLEU போனஸ் பிரச்னையில் பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என்பதையும் உணர்ந்தே உள்ளனர்.
கிரிகெட்டில் மேட்ச் பிக்சிங் ( வெற்றி தோல்வியை முதலே நிர்ணயித்து விடுவது) பற்றி கேள்வி பட்டுள்ளோம் !

ஆனால் இப்போது BSNLEU வின் Strike fixing ஐ உணர்ந்துள்ளோம் !!

சி.கே.மதிவாணன்,துணைப் பொதுச் செயலர்
NFTE-BSNL