WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Wednesday, October 2
சென்னையில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் இருவர் மீது சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
குருமூர்த்தி வழக்கு: இது குறித்து சிபிஐக்கு 2007-இல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், குருமூர்த்தி மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சிபிஐக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சட்டவிரோதமாக 323 இணைப்புகள் வைத்திருந்ததாக ஆரம்பநிலை விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ, தயாநிதி மாறன், 2007-இல் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த பிரம்மானந்தன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது செவ்வாய்க்கிழமை முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
ஆகஸ்ட் மாதம் சோதனை: இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற வேலுசாமிக்கு சேலம் சூரமங்கலத்தில் சொந்தமாக வீடு உள்ளது. அங்கு சிபிஐ குழு சோதனை நடத்தியது. அப்போது வேலுசாமி வீட்டில் இல்லை. அவர் வெளிநாட்டில் வாழும் தனது மகனுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நடைமுறைகளை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் உள்ள சிபிஐ சிறப்புக் குழு தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான புகார்களை விசாரித்து வந்தது. இதன் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய முன்னாள் அமைச்சரான தயாநிதி மாறன் மீதும், அவர் தொடர்புடைய தனியார் நிறுவனம், பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய சட்டத் துறையின் கருத்தை சிபிஐ கேட்டிருந்தது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் குருமூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இம் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நீதிமன்றத்தில் விசாரணை: இந் நிலையில், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, October 1
மருத்துவ கல்லூரியில் தகுதி இல்லாத மாணவர்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான முறைகேடு வழக்கில் காங்., எம்.பி. ரசீஷ் மசூத்துக்கு இன்று4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் தண்டனை பெற்றால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது உள்ளிட்ட சட்ட நெருக்கடியை சுப்ரீம் கோர்ட் அறிவித்த பின்னர் முதன் முறையாக தகுதி இழக்கும் நபர் மசூத் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஊழல் வழக்கில் முதன் முதலாக பதவி இழக்கிறார்.
கடந்த 1990 - 91 ல் மத்திய சுகாதார துறை இணை அமைச்சராக இருந்த மசூத் , இந்நேரத்தில் திரிபுரா மருத்துவ கல்லூரியில் மத்திய அரசின் ஒதுக்கீட்டை பயன்படுத்தி சட்ட மீறல் கையாண்டு தகுதி இல்லாதவர்களுக்கு சேர்க்கைக்கு ஏற்பாடு செய்தார். இதன் மூலம் ஆதாயம் பெற்றார் . இதனையடுத்து இவர் மீது லஞ்சம், ஊழல், சதி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து போதிய ஆதாரங்கள் திரட்டி இவர் குற்றவாளி என நிரூபித்தது.
இனிமையான சொஸைட்டி செய்திகள் !
இன்று சொஸைட்டி தலைவர் திரு எஸ்.வீ ரராகவன் தலைமையில் நடைபெற்ற RGB கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
சாதாரண கடன் Rs. 4 லட்சத்திலிருந்து Rs.5 லட்சமாக உயர்த்தப்படும்.
இது ஜனவரி 2014 இறுதியில் அமலாகும்.
வட்டி விகிதம் 16.5 % லிருந்து 15.5 % ஆக குறைக்கப்படும். இது அக்டோபர் 2013 முதல் அமலாகும்.
2012-13 ஆண்டிற்கான டிவிடென்ட் 12 %.இது அக்டோபர் 2013 சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்யப்படும். லோன் இல்லாதவர்களுக்கு செக் மூலம் வழங்கப்படும்.
சொஸைட்டி உறுப்பினர்களின் குடும்ப நல இன்சூரன்ஸ் (FWS) தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். அதே சமயம் மாத சந்தா தொகை ரூ 600/- லிருந்து ரூ.800/- ஆக உயர்த்தப்படும்.
NFTE-BSNL, FNTO, TEPU, SEVABSNL உள்ளிட்ட சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று நல்ல சாதகமான முடிவுகளை எடுக்க வழிவகுத்த தலைவர் திரு.S.வீரராகவன் மற்றும் இயக்குனர் குழுவிற்கு நமது பாராட்டும் நன்றியும் !
தகவல் :தோழர் அன்பழகன், மாநில அமைப்புச் செயலர்,NFTE(BSNL)
RGB உறுப்பினர் கடலூர்.
இன்று சொஸைட்டி தலைவர் திரு எஸ்.வீ ரராகவன் தலைமையில் நடைபெற்ற RGB கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
சாதாரண கடன் Rs. 4 லட்சத்திலிருந்து Rs.5 லட்சமாக உயர்த்தப்படும்.
இது ஜனவரி 2014 இறுதியில் அமலாகும்.
வட்டி விகிதம் 16.5 % லிருந்து 15.5 % ஆக குறைக்கப்படும். இது அக்டோபர் 2013 முதல் அமலாகும்.
2012-13 ஆண்டிற்கான டிவிடென்ட் 12 %.இது அக்டோபர் 2013 சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்யப்படும். லோன் இல்லாதவர்களுக்கு செக் மூலம் வழங்கப்படும்.
சொஸைட்டி உறுப்பினர்களின் குடும்ப நல இன்சூரன்ஸ் (FWS) தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். அதே சமயம் மாத சந்தா தொகை ரூ 600/- லிருந்து ரூ.800/- ஆக உயர்த்தப்படும்.
NFTE-BSNL, FNTO, TEPU, SEVABSNL உள்ளிட்ட சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று நல்ல சாதகமான முடிவுகளை எடுக்க வழிவகுத்த தலைவர் திரு.S.வீரராகவன் மற்றும் இயக்குனர் குழுவிற்கு நமது பாராட்டும் நன்றியும் !
தகவல் :தோழர் அன்பழகன், மாநில அமைப்புச் செயலர்,NFTE(BSNL)
RGB உறுப்பினர் கடலூர்.
Monday, September 30
பிரதமராகும் தகுதி மோடிக்கு இல்லை!!
பிரதமராகும் தகுதி நரேந்திர மோடிக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து அகில இந்திய அளவில் அக்டோபர் 3, 4, 5 ஆம் தேதிகளில் மத்திய அரசு அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், தான் பிரதமரானால் பாகிஸ்தான், இலங்கை நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மீனவர் பிரச்னையையும், எல்லை தாண்டும் பிரச்னையையும் தட்டிக் கேட்பேன் என்று கூறினார்.
முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான், நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்திச் சென்று மிரட்டிய தீவிரவாதிகளுக்குப் பணிந்து, சிறையிலிருந்த தீவிரவாதிகள் சிலரை அரசு விடுவித்தது.
தவிர, மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்தபோது தான் இலங்கை ராணுவம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 136 படகுகளைக் கைப்பற்றியதுடன், பல மீனவர்களைக் கொன்றது.
குஜராத்தில் 2.5 லட்சம் முஸ்லிம்கள் வீடு, கடைகளை கலவரத்தில் இழந்து தவிக்கும் நிலை முதல்வர் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது. நரேந்திர மோடியால் குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற்றது என்று கூறுவதை எக்காலத்திலும் ஏற்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தின் போது வ.உ.சி. தலைமையில் உப்புச் சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டதாக திருச்சியில் மோடி பேசியுள்ளார். உண்மையில் உப்புச் சத்தியாகிரகத்தை வ.உ.சி. எதிர்த்தார். அவர் அப்போராட்டத்திலேயே கலந்து கொள்ளவில்லை.
திருச்சியில் நடந்த போராட்டத்துக்கு ராஜாஜி தான் தலைமை வகித்தார். இந்த வரலாறு கூடத் தெரியாமல் மோடி பேசுவது நகைப்புக்குரியது. மொத்தத்தில் மோடிக்கு பிரதமர் ஆகும் தகுதி கிடையாது.
இந்தியாவை ஒட்டி 8 அண்டை நாடுகள் உள்ளன. இவற்றுடன் சுமுக உறவை மேற்கொள்வதே நல்ல அரசுக்கு அடையாளமாக இருக்க முடியும். ஆனால் அண்டை நாடுகளுடன் போரிட்டு உரிமைகளை மீட்போம் என்று மோடி கூறுவது தவறான கருத்து. மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறும். ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரா என்பதை தேர்தல் முடிவுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்று தா.பாண்டியன் கூறினார்.
பெண் கல்வி போராளி மலாலாவுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 'மனித நேயர்' விருது வழங்கி கவுரவித்தது!!
பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (16) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 5 ஆபரேஷன்கள் நடந்துள்ளன. மேற்கொண்டு சில ஆபரேஷன்கள் செய்யவேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.
உடல்நலம் தேறிய மலாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார். அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள 'வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்' என்ற இடத்தில் வசித்து வருகிறது. இதற்கிடையில், உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
இவ்விருதை பெற்றுக்கொண்ட மலாலா பேசியதாவது:-
பாகிஸ்தானில் நான் பிறந்து வளர்ந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு சொர்க்கம் போன்ற பூமியாகும். எனினும், பெண் கல்வியை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தலிபான் தீவிரவாதிகள் பள்ளிகளை குண்டு வீசி தகர்த்தும், மாணவிகளின் கையில் இருந்து கல்வி உபகரணங்களை பறித்து தூர எறிந்தும் மிரட்டியதால் அந்த பகுதி அபாயகரமான பகுதியாகி விட்டது.
தாங்கள் பள்ளிகளுக்கு செல்வது தலிபான்களுக்கு தெரியாமல் இருக்க, மாணவிகள் தங்களது புத்தகங்களை ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இந்த கொடுமைகளை எதிர்த்து சிலர் மட்டுமே குரல் கொடுக்க முன்வந்தனர். ஆனால், கல்விக்காகவும், அமைதிக்காகவும் ஒலித்த அந்த சிலரது குரல்கள் வீரியம் மிக்கவை.
தலிபான்கள் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பின்னர் என் சுயநினைவை நான் முற்றிலுமாக இழந்து விட்டேன்.
இங்கிலாந்தின் ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் நான் கண் விழித்தபோது, நான் எங்கே இருக்கிறேன்? என்பது எனக்கு தெரியாது. எனது பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? என்று எனக்கு தெரியாது. என்னை துப்பாக்கிகளால் துளைத்தவர்கள் யார் என்பதும் எனக்கு தெரியாது.
ஆனால், இன்று நான் உயிருடன் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற விழா அரங்கில் கூடியிருந்த ஏராளமானோர் மலாலாவின் பேச்சை கேட்டு வியந்து கைதட்டி பாராட்டினர்.
நோபல் பரிசு தேர்வுக் குழுவின் தலைவர் தார்ப்ஜோர்ன் ஜக்லண்ட் மலாலாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி விழா மேடையில் வாசிக்கப்பட்டது.
'உங்களது வீரம் பெண்கள் தங்களது உரிமைகளுக்கு எழுந்து நின்று போராடும் உத்வேகத்தை தட்டி எழுப்பியுள்ளது. இது அமைதிக்கான முன்முயற்சியாகும்' என தார்ப்ஜோர்ன் ஜக்லண்ட் மலாலாவை வாழ்த்தியுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 45 பேரும் குற்றவாளிகள்தான் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996ம் ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 38 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், சிபிஐ லல்லு பிரசாத் உள்ளிட்ட 45 பேர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும் குற்றம் பற்றிய தண்டனை குறித்த விவரங்களை பின்னர் தனியாக வரும் வியாழக்கிழமை அறிவிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். அதிக பட்ச தண்டனையாக 7 வருட சிறை தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற புதிய விதிமுறையின் படி அவருடைய அமைச்சுப் பதவிகளும் உடனடியாக பறிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
குற்றவழக்கில் சிக்கியுள்ள 1420 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்!!
லல்லு பிரசாத் யாதவ் போல நாடு முழுவதில் 162 எம்.பி.க்கள் 1258 எம்.எல்.ஏ.க்கள் என 1420 பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், நல அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் சிக்கி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கு மீதான தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில் உள்ளனர்.
லல்லு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கிட்டத்தட்ட 38 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், சிபிஐ லல்லு பிரசாத் உள்ளிட்ட 45 பேர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும் குற்றம் பற்றிய தண்டனை குறித்த விவரங்களை பின்னர் தனியாக வரும் வியாழக்கிழமை அறிவிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். அதிக பட்ச தண்டனையாக 7 வருட சிறை தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற புதிய விதிமுறையின் படி அவருடைய அமைச்சுப் பதவிகளும் உடனடியாக பறிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
குற்றவழக்கில் சிக்கியுள்ள 1420 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்!!
லல்லு பிரசாத் யாதவ் போல நாடு முழுவதில் 162 எம்.பி.க்கள் 1258 எம்.எல்.ஏ.க்கள் என 1420 பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், நல அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் சிக்கி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கு மீதான தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில் உள்ளனர்.
லல்லு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Sunday, September 29
Subscribe to:
Posts (Atom)




.jpg)






